லவ் டுடே (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
லவ் டுடே
இயக்கம்பாலசேகரன்
தயாரிப்புஆர். பி. சௌத்ரி
கதைபாலசேகரன்
இசைசிவா
நடிப்புவிஜய்
சுவலட்சுமி
மந்திரா
ரகுவரன்
ஒளிப்பதிவுவிஜய் கோபால்
படத்தொகுப்புவி. ஜெய்சங்கர்
கலையகம்சூப்பர் குட் பிளிம்ஸ்
விநியோகம்சூப்பர் குட் பிளிம்ஸ்
வெளியீடு9 மே 1997[1]
ஓட்டம்151 நிமிடங்கள்
நாடு இந்தியா
மொழிதமிழ்
ஆக்கச்செலவு3.2 கோடி

லவ் டுடே (Love Today) திரைப்படம் 1997-ல் இயக்குநர் பாலசேகரன் அவர்களால் இயக்கப்பட்டதாகும். இத்திரைப்படத்தில் விஜய் சுவலட்சுமி, மந்திரா, ரகுவரன், கரண் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.[2] இத்திரைப்படம் தெலுங்கு மொழியில் பவன் கல்யாண் மற்றும் தேவயானி நடிப்பில் சுஸ்வாகதம் என்ற பெயரில் மீண்டும் எடுக்கப்பட்டது.

வித்தியாசமான கிலைமாக்ஸ் கொண்ட இத்திரைப்படம் 100 நாள் ஒடி வெற்றிப்ப்பெற்றது.

கதாப்பாத்திரம்[தொகு]

வகை[தொகு]

காதல்படம் / நாடகப்படம்

மருத்துவரான ரகுவரனின் ஒரெ செல்ல மகன் விஜய்,படித்துமுடித்து விட்டு வேலைக்கு செல்லாமல் நண்பர்கலோடு ஊர் சுற்றும் வாலிபன். 4 வருடமாக சுவலட்சுமியை காதலித்து வருகிறார்.சந்தேகபுத்தியுடைய தந்தையால் விஜயின் காதலை ஏற்க மறுக்கும் சுவலட்சுமி.விஜய் எவ்வளவோ முயற்சித்தும் சுவலட்சுமி காதலிக்க மறுக்கிறார்.காதலுக்காக எதையும் இழக்க தயாரான விஜய் ஒரு கட்டத்தில் தந்தையை இழக்கிறார். காதலால் தந்தைக்கு மகன் செய்ய வேண்டிய கடைசி காரியம்கூட செய்யமுடியாமல் போகிறது.இந்த சமயத்தில் சுவலட்சுமி விஜயின் காதலை புரிந்துகொண்டு காதலிக்கிறார். ஆனால் விஜய் காதலால் தான் தந்தையை இழந்தேன், இனி இழக்க எதுவுமில்லை என்று கூறி சுவலட்சுமியின் காதலை ஏற்க மறுக்கிறார்.

பாடல்கள்[தொகு]

இப்படத்தின் பாடல்களுக்கு இசையமைத்தவர் சிவா. பாடல்வரிகளை வைரமுத்து, வாசன், வைகரை செல்வம், பட்டுக்கோட்டை சண்முக சுந்திரம் ஆகியோர் எழுதியிருந்தனர்.

வேறுமொழிகளில்[தொகு]

ஆண்டு திரைப்படம் மொழி கதாப்பாத்திரம் இயக்குநர்
1998 சுஸ்வாகதம் தெலுங்கு பவன் கல்யாண், தேவயானி பீமிநேணி ஸ்ரீனிவாச ராவ்
1998 மஞ்சு கன்னடம் கிரி ட்வரகிஷ்
2002 கய எஹி பார் ஹாய் இந்தி அப்தாப், அமீஷா பட்டேல் கே. முரளி மோகன் ராய்

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=லவ்_டுடே_(திரைப்படம்)&oldid=3710470" இருந்து மீள்விக்கப்பட்டது