எம்.ஜி.ஆர். சிவாஜி ரஜினி கமல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
எம்.ஜி.ஆர். சிவாஜி ரஜினி கமல்
இயக்கம்ராபர்ட்
தயாரிப்புவனிதா விஜயகுமார்
கதைராபர்ட்
வனிதா விஜயகுமார்
இசைசிறீகாந்து தேவா
நடிப்பு
படத்தொகுப்புஆர். ஜே. ஆனந்த்
கலையகம்வனிதா பிலிம் புரொடக்சன்
விநியோகம்மிஸ்ரி மூவிஸ்
வைபபிரண்ட் மூவிஸ்
வெளியீடுமே 8, 2015 (2015-05-08)
ஓட்டம்130 நமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

எம்.ஜி.ஆர் சிவாஜி ரஜினி கமல் (MGR Sivaji Rajini Kamal) என்பது 2015 ஆம் ஆண்டில் வெளியான தமிழ் நகைச்சுவைத் திரைப்படம் ஆகும். இப்படத்தை இயக்கிய ராபர்ட் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் அதன் தயாரிப்பாளரும் உரையாடல் எழுத்தாளருமான வனிதா விஜயகுமார், நிரோஷா, ஐஸ்வர்யா, ராம்ஜி உள்ளிட்ட முக்கிய நடிகர்கள் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஸ்ரீகாந்த் தேவா இசை அமைத்துள்ளார். படமானது 2015 மே 8 அன்று வெளியானது. [1]

நடிகர்கள்[தொகு]

தயாரிப்பு[தொகு]

இந்த படம் நடன இயக்குனர் ராபர்ட் மற்றும் நடிகை வனிதா விஜயகுமார் ஆகியோரின் சிந்தனையால் உருவானது. அவர்கள் ஒன்றாக இணைந்து நகைச்சுவை படம் தயாரிக்க ஆர்வமாக இருந்தனர். ராபர்ட் இயக்குநராக அறிமுகமானார். மேலும் படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். 1980 களில் வனிதாவின் பெற்றோர்களான விஜயகுமார் மற்றும் மஞ்சுளா ஆகியோரால் தொடங்கப்பட்ட வனிதா பிலிம் புரொடக்சன் என்ற பழைய தயாரிப்பு நிறுவனத்தை வனிதா இந்த படத்தை தயாரிக்க தேர்வு செய்தார். இதன் முந்தைய படங்களான நெஞ்சங்கள் (1982) மற்றும் கை கொடுக்கும் கை (1984) ஆகியவற்றைத் தொடர்ந்து பட நிறுவனத்தின் மூன்றாவது படமாக இது ஆனது. படத்திற்கு பிரபலமான தமிழ் நடிகர்களான எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன், ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோரின் பெயர்களைக் கொண்டு எம்.ஜி.ஆர் சிவாஜி ரஜினி கமல் என்ற பெயர் இடப்பட்டது. [2] இப்படத்தின் படத்தொகுப்பை ஆர். ஜே. ஆனந்த் செய்ய, அதே நேரத்தில் வனிதா படத்தின் திரைக்கதை மற்றும் வசனங்களையும் எழுதினார். [3]

நடிகைகள் நிரோஷா மற்றும் ஐஸ்வர்யாவும் படத்தின் ஒரு பகுதியாக இருந்தனர். நகைச்சுவை நடிகர்களான பவர்ஸ்டார் சீனிவாசன் மற்றும் பிரேம்ஜி அமரன் ஆகியோர் விருந்தினர் வேடங்களில் தோன்றினர்.

இசை[தொகு]

இப்படத்தின் இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா ஆவார்.

பாடல்கள்
# பாடல்பாடகர்(கள்) நீளம்
1. "சங்கி மங்கி"  ஸ்ரீ 04:52
2. "நேத்து ராத்திரி"  ஸ்ரீ, லக்கி விசண்ட்L 04:21
3. "கிளாசிகல் டிராமா" (இன்ஸ்டுதெணெடல்) 03:23
4. "எம்.ஜி.ஆர். சிவாஜி ரஜினி கமல்"  ஸ்ரீ 03:21

வெளியீடு[தொகு]

விமர்சகர்களிடமிருந்து எதிர்மறையான விமர்சனங்களுடன் இந்த படம் 2015 மே மாதத்தில் வெளியானது.

குறிப்புகள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]