யுரேனியம் ஆக்சைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மஞ்சள் அப்பம், யுரேனியம் ஆக்சைடுகளின் கலவை

யுரேனியம் ஆக்சைடு (Uranium oxide) என்பது யுரேனியம் தனிமத்தின் ஆக்சைடு சேர்மங்களைக் குறிக்கும்.

யுரேனியம் தனிமம் பலவகையான ஆக்சைடுகளாக உருவாகிறது.

யுரேனியம் ஈராக்சைடு அல்லது யுரேனியம்(IV) ஆக்சைடு - UO2 இதனுடைய தாதுப் பொருள் யுரேனைட்டு அல்லது பிட்ச் பிளெண்ட்டு ஆகும்.

யுரேனியம் மூவாக்சைடு அல்லது யுரேனியம்(VI) ஆக்சைடு - UO3

மூன்றுயுரேனியம் எண்ணாக்சைடு - U3O8 அதிக நிலைப்புத்தன்மை கொண்ட யுரேனியம் ஆக்சைடு இதுவாகும். மஞ்சள்நிற அப்பமாக உள்ள இவ்வாக்சைடில் 70 முதல் 90 சதம் மூன்றுயுரேனியம் எண்ணாக்சைடு நிறைந்துள்ளது.

யுரேனைல் பெராக்சைடு - UO2O2 அல்லது UO4

யுரேனியம் ஈராக்சைடு ஆக்சிசனுடன் தொடர்பு கொள்ள நேரும் போது ஆக்சிசனேற்றம் அடைந்து மூன்றுயுரேனியம் எண்ணாக்சைடாக உருவாகிறது.

3 UO2 + O2 → U3O8; at 700 °C (970 K)

38 தயாரிப்பு[தொகு]

இரண்டாம் உலகப் போரின் போது யுரேனியம் ஆக்சைடு தயாரிப்பை “38 தயாரிப்பு” என்ற குறிப்பெயரை செருமன் விஞ்ஞானிகள் உபயோகித்தனர்.[1] [2][3]

மேற்கோள்கள்[தொகு]

  1. Per F. Dahl, Heavy water and the wartime race for nuclear energy (Institute of Physics Publishing, London 1999), p. 135
  2. "Uranium Oxide International Bio-Analytical Industries, Inc". 2013-01-18 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2015-10-01 அன்று பார்க்கப்பட்டது.
  3. Geoffrey Brooks (1992). Hitler's Nuclear Weapons. பக். 40. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780850523447. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=யுரேனியம்_ஆக்சைடு&oldid=3569301" இருந்து மீள்விக்கப்பட்டது