முதனிலைத் திராவிட மொழி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(முதல்நிலைத் திராவிட மொழி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

முதனிலைத் திராவிட மொழி (Proto-Dravidian) என்பது, திராவிட மொழிகளுக்கான முதனிலை மொழி ஆகும். முதனிலை மொழிகள் என்பன கருதுகோள் அடிப்படையிலான மொழிகள். இவை மொழியியலாளர்களாற் செய்யப்படுகின்ற மீளுருவாக்கங்கள். அவற்றுக்கு வரலாற்றுப் பதிவுகள் ஏதும் இருப்பதில்லை. இதனால் முதல் நிலைத் திராவிட மொழியும் ஒரு கருதுகோள் அடிப்படையிலானதும், பயன்பாட்டிலுள்ள திராவிட மொழிகளை ஆய்வு செய்து அவற்றின் அடிப்படையில் மீளுருவாக்கம் செய்யபட்டதுமான ஒரு மொழியாகும்.

பிரிவு[தொகு]

இம்முதனிலைத் திராவிட மொழி, கிமு 500 அளவில் முதனிலை வட திராவிடம், முதனிலை நடுத் திராவிடம், முதனிலைத் தென் திராவிடம் எனப் பிரிந்ததாகச் சிலர் கூறுகின்றனர். வேறு சில மொழியியலாளர்கள், திராவிட மொழிகளின் துணைக் குடும்பங்களிடையே காணப்படும் வேறுபாடுகளின் அளவைப் பார்க்கும்போது இப் பிரிவு இன்னும் முன்னதாகவே ஏற்பட்டிருக்கலாம் எனக் கருதுகின்றனர். எல்லாத் திராவிட மொழிகளையும் உள்ளடக்கி, முதனிலைத் திராவிட மொழி வடிவங்களைக் காட்டும் ஒரே நூல், திராவிடச் சொற்பிறப்பியல் அகரமுதலி ஆகும். இதுவும், அதிக விளக்கங்கள் எதுவும் கொடாமல் தொடர்புள்ள சொற்களின் பட்டியலை மட்டுமே தருகிறது.