பேன்
பேன் Phthiraptera | |
---|---|
Light micrograph of Fahrenholzia pinnata | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | விலங்கினம் |
தொகுதி: | கணுக்காலி |
வகுப்பு: | பூச்சி |
துணைவகுப்பு: | Pterygota |
உள்வகுப்பு: | Neoptera |
வரிசை: | Phthiraptera எக்கெல், 1896 |
Suborders | |
பேன்கள் (Phthiraptera, ஆங்கிலம்: Lice அல்லது fly babies) எள்ளின் அளவு உள்ள ஒரு ஒட்டுண்ணியாகும். இதில் பழுப்பு நிறப் பேன்களும், கருமையான பேன்களும் அடங்கும். இவை உயிர் வாழ்வதற்காக ஒரு சிறு துளி இரத்தத்தையே மனிதனிலிருந்து உறிஞ்ச வேண்டியிருக்கும். இவை பெரும்பாலும் தலையின் பிடறிப் பகுதி, மற்றும் காதோரங்களிலும் உள்ள முடியில் முட்டை(ஈர்) இடும்.
தலையோடு தலை முட்டும் நெருக்கமான உறவுகளின் போது இலகுவில் ஒருவரிலிருந்து மற்றவருக்குத் தொற்றும்.ஆயினும் சீப்பு, தொப்பி, தலையணை போன்றவற்றிலும் பரவலாம், பேன்கள் பறக்கவோ தத்தவோ முடியாதவை. ஊர்ந்தே செல்பவை. எனவே ஒருவருக்கு அருகில் இருப்பதால் தொற்ற மாட்டாது. ஒரு பேன் தொற்றியவுடன் வெளிப்படையாக எந்த அறிகுறியும் தெரியமாட்டாது. பேன் பெருகிக் கடிக்கும் போது ஏற்படும் அரிப்பு சினமூட்டும். ஈர் அதிகரிக்கும்போது முடி ஓரங்களில் பொடுகு படிந்ததுபோல அருவருப்பூட்டும்[1]
பேன் வகைகள்[தொகு]
புற ஒட்டுண்ணி வகையைச் சேர்ந்த பேன்கள் இரண்டு வகையாக உள்ளன. மனிதனின் தலையில் வாழும் பேன்கள் தலைப் பேன் எனப்படுகிறது. இன்னொன்று உடைகளின் மடிப்புகளில் வசிக்கின்றன. இவை சீலைப்பேன் எனப்படுகிறது.
தலைப் பேன்[தொகு]
இவை மனிதனுடைய தலை மயிரில் வசிக்கின்றன. இவை ஈர்கள் எனப்படும் முட்டைகளை தலைமயிரில் ஒட்ட வைத்து விடுகின்றன.
சீலைப் பேன்[தொகு]
இவை மனிதனின் உடைகளின் மடிப்புகளில் வசிப்பதுடன் அங்கேயே தங்கள் முட்டைகளை வைத்துவிடுகின்றன. முட்டைகளில் இருந்து வரும் லார்வாக்கள் முதிர்ந்த தலைப் பேன்களைப் போல் இருக்கின்றன.
பேன்களின் வாழ்க்கை[தொகு]
பேன்கள் மிக விரைவாக இனப்பெருக்கம் செய்யக் கூடியவை. ஒரு மாதத்தில் ஒரு பெண் பேன் சிலமுந்நூறு குஞ்சுகளை உற்பத்தி செய்துவிடக் கூடியவை. இவற்றின் கால்களில் உள்ள உகிர்களால் இறுகப் பற்றிக் கொள்ளக் கூடியது. இதனால் பேன்கள் தலை மயிர்களையும், உடைகளின் துணிகளையும் இறுக்கமாகப் பற்றிக் கொள்கின்றன. பேன்களின் உறிஞ்சு குழல்கள் முனையில் சிறு கொக்கிகள் இருக்கின்றன. இதன் மூலம் மனிதனின் இரத்தத்தை உறிஞ்சுவதற்கு மனிதனின் தோலுடன் ஒட்டிக் கொள்கிறது. பேன்களுக்கு இறகுகள் எதுவுமில்லை.
பேன் தடுப்பு[தொகு]
பேன்கள் தொற்றிக் கொள்வதைத் தடுப்பதற்கு, உடலையும் தலை மயிரையும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். உள்ளாடைகளை அடிக்கடி மாற்றிக் கொள்ளுதல், அவற்றின் மடிப்புகளைச் சூடான இஸ்திரி பெட்டியால் தேய்த்தல் சீலைப் பேன்கள் வராமல் பாதுகாக்கும்.
படத்தொகுப்பு[தொகு]
-
Ricinus bombycillae
-
Trinoton anserinum, அன்னத்தில் காணப்படும் பேன்
-
Damalinia limbata ஆட்டில் காணப்படும் பேன்கள்
-
ராபர்ட்டு காக் 1667ல் வரைந்த பேனின் படம்