உள்ளடக்கத்துக்குச் செல்

சீப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சீப்பு ஒன்று
மரத்தால் செய்யப்பட்ட ஒரு பஞ்சாபிச் சீப்பு.

சீப்பு (Comb) என்பது தலை வாரவும், தலை முடியை அழகு படுத்தவும், தூய்மைபடுத்தவும் பயன்படும் ஒரு கருவியாகும்.ஈதில் பல் போன்ற அமைப்பு உள்ளது. இது மிகப் பழங்காலத்தில் இருந்தே பயன்பட்டுவரும் கருவிகளில் ஒன்றாகும். தொல்லியல் ஆய்வுகளின்போது கிடைத்துவரும் மிகவும் பழமையான பொருட்களுள் சீப்பும் ஒன்றாகக் காணப்படுகிறது[1]. பாரசீகத்தில் 5000 ஆண்டுகளுக்கு முற்பட்ட குடியிருப்பு ஒன்றில் செய்யப்பட்ட அகழ்வாய்வின் போது திருந்திய வடிவத்தோடு கூடிய சீப்பு கண்டிபிடிக்கப்பட்டது.[சான்று தேவை] அக்காலத்தில் இருந்து தற்காலம் வரை சீப்பு மனித நாகரிகத்தோடு நெருங்கிய தொடர்புள்ள முக்கியமான கருவிகளுள் ஒன்றாக இருந்து வருகிறது.

அமைப்பு

[தொகு]

சீப்பு, பட்டை போல அமைந்துள்ள உடற் பகுதியையும், அதற்குச் செங்குத்தாக அத்துடன் இணைந்த பற்கள் போன்ற அமைப்பையும் கொண்டது. செயற்பாட்டுத் தேவையை மட்டும் நோக்கமாகக் கொண்ட சீப்புக்கள் பொதுவாக அலங்காரம் எதுவுமின்றி எளிமையாகவே செய்யப்படுகின்றன. ஆனால் முற்காலத்தில் சீப்புக்கள் அழகுணர்ச்சியுடனும், கலை நுட்பத்துடனும் செய்யப்பட்டது உண்டு.

முற்காலத்தில் சீப்புகள் விலங்குகளின் எலும்பு, மரம், உலோகம், ஆமையோடு, யானைத் தந்தம் போன்ற பல்வேறு பொருட்களால் செய்யப்பட்டன. இப்பொழுதும் மரம் பயன்படுத்தப்படுவது உண்டு ஆயினும், தற்காலத்தில் பல்வேறு வகையான நெகிழிகளே (பிளாத்திக்கு) சீப்புச் செய்வதற்குப் பெரும்பாலும் பயன்படுகின்றன.

பயன்களும் வகைகளும்

[தொகு]

சீப்பு பவ்வேறு தரப்பட்ட தேவைகளுக்காகப் பயன்படுத்தப்படுகின்றது. குறிப்பாக தலை மயிரை அழகு படுத்தவும் ஒரே இடத்தில் நீளமான தலை மயிர்களை குவிக்கவும் பயன்படுத்தப்படுகின்றது எனலாம்.

ஆப்பிரிக்க தேர்வுச் சீப்பு

[தொகு]

இது பொதுவாக முடியில் உள்ள இணைப்புக்களுக்காகவே பயன்படுத்தப்படுகின்றது. இதை சிலர் முடியிலும் அணிந்திருப்பர்.

பேன் சீப்பு

[தொகு]

இவ்வகையான சீப்புக்கள் பேரியல் ஒட்டுண்ணிகளான பேன் போன்றவற்றை அகற்றவும் அல்லது சீப்பினால் சீவுவதனால் பேன்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தி அவற்றை இறக்கச் செய்யவும் பயன்படுகின்றது. இதில் உள்ள பற்கள் நீளமாகவும் அதேவேளையில் கூரியதாகவும் உள்ளதால் சில சமயங்களில் இதை நற்-பல்லுடைய சீப்பு (fine-toothed comb) எனவும் அழைக்கின்றனர்.

குறிப்புகள்

[தொகு]
  1. "Internet Archaeol. 30. Ashby. An Atlas of Medieval Combs from Northern Europe. Summary". Intarch.ac.uk. 2011-09-23. பார்க்கப்பட்ட நாள் 2012-01-19.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சீப்பு&oldid=2775814" இலிருந்து மீள்விக்கப்பட்டது