மார்க் வா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மார்க் வா
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைவலது கை
பந்துவீச்சு நடைவலதுகை சுழல் பந்துவீச்சு
பங்குமட்டையாளர்
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம் (தொப்பி 349)25 ஜனவரி 1991 எ. இங்கிலாந்து
கடைசித் தேர்வு19 அக்டோபர் 2002 எ. பாகிஸ்தான்
ஒநாப அறிமுகம் (தொப்பி 105)11 டிசம்பர் 1988 எ. பாகிஸ்தான்
கடைசி ஒநாப3 2002 எ. தென்னாப்பிரிக்கா
ஒநாப சட்டை எண்6
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள்அணி
1985–2004நியூ சௌத் வேல்ஸ், ஆஸ்திரேலியா
1988–2002எசெக்சு
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ஒநா முத பட்.A
ஆட்டங்கள் 128 244 368 435
ஓட்டங்கள் 8029 8500 26855 14663
மட்டையாட்ட சராசரி 41.81 39.35 52.04 39.10
100கள்/50கள் 20/47 18/50 81/133 27/85
அதியுயர் ஓட்டம் 153* 173 229* 173
வீசிய பந்துகள் 4853 3687 15808 6947
வீழ்த்தல்கள் 59 85 208 173
பந்துவீச்சு சராசரி 41.16 34.56 40.98 33.42
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
1 1 3 1
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 n/a 0 n/a
சிறந்த பந்துவீச்சு 5/40 5/24 6/68 5/24
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
181/– 108/– 452/– 201/–
மூலம்: cricketarchive.com, ஆகத்து 19 2007

மார்க் வா (ஆங்கிலம்: Mark Waugh, பிறப்பு ஜூன் 2, 1965), முன்னாள் ஆஸ்திரேலிய துடுப்பாட்ட வீரர், முன்னாள் ஆஸ்திரேலிய துடுப்பாட்ட அணியின் தலைவர் ஸ்டீவ் வாவுடன் (Steve Waugh) இரட்டையராகப் பிறந்தவர், வலது கை ஆட்டக்காரரான இவர் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் 4-ம் எண் வரிசையிலும் ஒருநாள் போட்டிகளில் தொடக்க ஆட்டக்காரராகவும் களம் இறங்கியவர், பிரமாதமான ஸ்லிப் பீல்டரான இவர் ராகுல் டிராவிட்டுக்கு அடுத்த படியாக அதிகமாக 181 பிடிகளை எடுத்தவர்.

வா தனது இரட்டை சகோதரர் ஸ்டீவை விட சில நிமிடங்கள் முன்னர் பிறந்ததால் வாவுக்கு பெரும்பாலும் ஜூனியர் என்று புனைப் பெயர் கொண்டு அழைக்கப்பட்டார். மார்க்கின் மற்றொரு சகோதரரான டீன் வாவும் ஒரு துடுப்பாட்ட வீரர் ஆவார். இவர் நியூ சவுத் வேல்ஸிற்காக ஆஸ்திரேலியாவில் முதல் தரத் துடுப்பாட்டப் போட்டி மற்றும் பட்டியல் அ துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடியுள்ளார் . இவரது மருமகனும் ஸ்டீவின் மகனுமான ஆஸ்டின் ஆஸ்திரேலிய 19 வயதுக்குட்பட்ட அணியில் தேர்வு செய்யப்பட்டனர் . இவர் தேசிய தேர்வாளராக இருந்தார், ஆகஸ்ட் 2018 வரை அந்த பதவியை வகித்தார். 15 மே 2018 அன்று, பாக்ஸ் ஸ்போர்ட்சில் பணிபுரிவதற்காக அந்தப் பணியில் இருந்து விலகினார்.

ஆரம்பகால வாழ்க்கை[தொகு]

மார்க் வா, நியூ சவுத் வேல்ஸிலுள்ள கேம்ப்சியின் காண்டெர்ப்யூரி மருத்துவமனையில் 1965 ஆம் ஆண்டு ஜூன் இரண்டாம் தேதி அன்று பிறந்தார். இவர் ரோட்கெர் மற்றும் பெவர்லி வா இரட்டையருக்குப் பிறந்த இரட்டை ஆண் குழந்தைகளில் ஒருவராவார். இவரது தந்தை வங்கி அதிகாரி, தாயார் நியூ சவுத் வேல்ஸ் கல்வித் துறையில் ஆசிரியராக இருந்தார்.[1] அவரது குடும்பம் மேற்கு சிட்னியின் புறநகரான பனானியாவில் குடியமர்ந்தது.[2] இரட்டையர்களுக்கு மேலும் இரு சகோதரர்கள் டீன் மற்றும் டானி பிறந்தனர்.[3] துவக்கக் காலத்திலிருந்தே பெற்றோர்கள் குழந்தைகளை விளையாட்டிற்கு அறிமுகப்படுத்தினர்.[4][5] ஆறு வயதை அடைந்தபோது இரட்டையர்கள் ஒழுங்குமுறைப்படுத்தப்பட்ட காற்பந்தாட்டம் (சாக்கர்), டென்னிஸ் மற்றும் துடுப்பாட்ட ஆகியவற்றை விளையாடினர். அவர்களின் முதல் துடுப்பாட்ட போட்டியில், சகோதரர்கள் இருவரும் ஓட்டங்கள் இன்றி ஆட்டமிழந்தனர்.[6]

இவர்கள் குடும்பத்தில் பலர் ஏற்கனவே விளையாட்டு வீரர்களாய் இருந்தனர். இவர்களது தந்தை வழிப் பாட்டனாரான எட்வர்ட் ஓட்டப்பந்தய நாய் பயிற்சியாளராக இருந்தவர். வடக்கு கடற்கரை நகரான பங்காலோவில் வளர்ந்த எட்வர்ட், ரக்பி லீக் போட்டிக்கு நியூ சவுத் வேல்ஸ் கண்ட்ரி அணிக்காகக் தேர்வு செய்யப்பட்டார்.[7] ஆனால் நியூ சவுத் வேல்ஸ் ரக்பி லீக்கின் ஈஸ்டர்ன் சபர்ப்ஸ் அணியில் இணையும் சமயத்தில் குடும்ப காரணங்களுக்காக அவரது தொழில் வாழ்க்கையை விட்டுக் கொடுக்க வேண்டியிருந்தது.[4] எட்வர்ட்சின் ஒரே மகன் ரோட்கெர், உறுதியளிக்கும் டென்னிஸ் ஆட்டக்காரர். அவர் ஆஸ்திரேலியாவின், இளநிலை- தரவரிசையில் எட்டாவதாகவும் 14 வயதிற்கு கீழான நிலையில் மாகாண சாம்பியனாகவும் இருந்தார்.[4] தாய்வழியைச் சேர்ந்த பெவ், டென்னிஸ் விளையாட்டில் 14 வயதிற்கு கீழான தென் ஆஸ்திரேலியன் ஒற்றையர் ஆட்டத்தில் சாம்பியன் பட்டம் வென்றவர். பெவ்வின் மூத்த சகோதரர் டியோன் பர்னே ஒரு துவக்க ஆட்டக்காரராக சிட்னி கிரேட் கிரிக்கெட்டில் பாங்ஸ்டவுன்னிற்காக விளையாடியவர். இப்பொழுதும் அக்குழுமத்தின் வரலாற்றில் முன்னணி ஓட்ட எண்ணிக்கையாளராக அவர் நிலைபெற்றிருக்கிறார்.[4]

எட்டு வயதில் பாங்க்ஸ்டவுன் மாவட்டத்தின் பத்து வயதிற்கு கீழான அணிக்கு தேர்வு செய்யப்பட்டதுதான் இரட்டையர்களின் முதல் நுழைவு ஆகும்.[8] 1976 ஆம் ஆண்டில், இவர்கள் நியூ சவுத் வேல்ஸ்சின் துவக்கப்பள்ளி காற்பந்தாட்ட (சாக்கர்) அணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட போது அந்த அணியின் வரலாற்றிலேயே, அணியில் பங்குபெற்ற மிகவும் இளம் வயதினராக இருந்தனர். தாங்கள் படித்துக் கொண்டிருந்த பனானியா துவக்கப் பள்ளிக்காக விளையாடி, தங்கள் பள்ளிக்கு உம்ப்ரோ பன்னாட்டுக் கேடயத்தை பெற்றுத் தந்தனர். அந்த மாநிலம் தழுவிய நாக்-அவுட் கால்பந்து (சாக்கர்) போட்டியின் இறுதியாட்டத்தில் அணியின் அனைத்து மூன்று கோல்களையும் இட்டனர்.[9] அவர்கள் பள்ளி தொடர்ச்சியாக மூன்றுமுறை மாநில துடுப்பாட்ட சாம்பியன் பட்டம் பெற்றதற்கும் பள்ளி இறுதி ஆண்டில் பள்ளியின் டென்னிஸ் அணி மாநில அளவில் இரண்டாவதாக வெற்றி பெற்றதற்கும் முக்கிய காரணமாக இருந்தனர்.[9][10] பள்ளி இறுதி ஆண்டில் மார்க் வா, டென்னிஸ் மற்றும் துடுப்பாட்ட அணித் தலைவனாக இருந்து இரண்டிலும் தேசிய அளவில் சாம்பியன் பட்டங்களைப் பள்ளிக்குப் பெற்றுத் தந்தார்.[5][10]

உள்ளூர் போட்டிகள்[தொகு]

ஹோபார்ட்டின் டி.சி.ஏ மைதானத்தில் வா மற்றும் மார்க் டெய்லருடன் இணைந்து டாஸ்மேனியாவுக்கு எதிராக துடுப்பாட்டப் போட்டியில் துவக்க வீரராக அறிமுகமானனர். தனது முதல் போட்டியில் வா 13 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார், நியூ சவுத் வேல்சு முதல் ஆட்டப் பகுதியில் 60 ஓட்டங்களுக்கு 3 இழப்புகள் எனும் நிலையில் இருந்தது. இரண்டாவது ஆட்டப் பகுதியில் இவர் 28 ஓட்டங்கள் எடுத்தார், ஆனால் மூன்றாவது காலையில் டெய்லரின் 21 வது பிறந்தநாளில் புதிய தொடக்க வீரர்கள் அதிக நேரம் தூங்கியதால் இவர்கள் பயிற்சியாளர் பாப் சிம்ப்சனால் களத் தடுப்பாட்ட பயிற்சியினால் தண்டிக்கப்பட்டனர். இந்த இனை நூற்றுக்கணக்கான கேட்சுகளை எடுக்கும்படி கட்டாயப்படுத்தப்பட்டனர்.

தனது துடுப்பாட்ட வாழ்க்கையின் துவக்க காலத்தில் இவரது சகோதரர் ஸ்டீவின் உதவியுடன் அணியில் இடம்பெற்றார். இதன் விளைவாக, மார்க் சில சமயங்களில் ஆப்கன் என்று அழைக்கப்பட்டார், இது 1979 ஆம் ஆண்டு சோவியத் ஆப்கானிஸ்தான் படையெடுப்பைக் குறிக்கிறது, இது சில சமயங்களில்"மறக்கப்பட்ட போர்" என்று அழைக்கப்படுகிறது.

வா 1988-89 ஆண்டின் தொடக்கத்தில் ஆஸ்திரேலிய அணியில் நுழைய முயற்சி செய்தார். குயின்ஸ்லாந்து துடுப்பாட்ட அணிக்கு எதிராக முதல் ஆட்டப் பகுதியில் ஓட்டங்கள் எதுவும் எடுக்காமலும் இரன்டாவது ஆட்டப் பகுதியில் 18 ஓட்டங்களில் இவர் ஆட்டமிழந்தார். பந்துவீச்சில் இவர் இழப்புகளைக் கைப்பற்றவில்லை. பின்னர் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான தொடரின் முதல் போட்ட்டியின் முதல் ஆட்டப் பகுதியில் 9 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். ஆனால் இரண்டாவது ஆட்டப் பகுதியில் தனது முதல் சர்வதேச நூறு ஓட்டங்களை எடுத்தார்.அந்தப் போட்டியில் 163 பந்துகளில் 103 ஓட்டங்களை எடுத்தார். விவ் ரிச்சர்ட்ஸிடமிருந்து பாராட்டுகளைப் பெற்றார். டாஸ்மேனியாவுக்கு எதிரான அடுத்த போட்டியில், இரண்டாவது ஆட்டப் பகுதியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 100 ஓட்டங்களை எடுத்தார்.பின்னர் இவர் மேற்கு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 69 மற்றும் 39 ஓட்டங்கள் எடுத்தார்.

டிசம்பர் மாதம் அடிலெய்ட் ஓவலில் பாகிஸ்தானுக்கு எதிராக வா ஒருநாள் போட்டியில் அறிமுகமானார், ஆனால் ஆஸ்திரேலியா ஒன்பது இழப்புகள் வித்தியாசத்தில் வெற்றியைப் பெற்ற அந்தப் போட்டியில் இவருக்கு பந்துவீசவும் மட்டையாடவும் வாய்ப்பு வழங்கப்படவில்லை. இரண்டு நாட்களுக்குப் பிறகு சிட்னியில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக, கோர்டன் கிரீனிட்ச்|அடித்த பந்தினைப் பிடித்தபோது வா தனது முதல் ஒருநாள் பிடிபடுதலை எடுத்தார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Knight 2003, ப. 4–5
  2. Knight 2003, ப. 6
  3. Knight 2003, ப. 9, 13
  4. 4.0 4.1 4.2 4.3 Knight, p. 8.
  5. 5.0 5.1 Perry 2000, ப. 348
  6. Knight 2003, ப. 11
  7. Knight, p. 7.
  8. Knight, p. 12.
  9. 9.0 9.1 Knight, p. 14.
  10. 10.0 10.1 Knight, p. 15.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மார்க்_வா&oldid=3477629" இலிருந்து மீள்விக்கப்பட்டது