மார்க்சியப் பொருளியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கார்ல் மார்க்சு, பிரெட்ரிக் எங்கெல்சு ஆகியோர் முன்வைத்த அரசியல் பொருளாதாரக் கொள்கைகள் மார்க்சியப் பொருளாதாரம் என்று அழைக்கப்படுகிறது. இக்கொள்கையைப் பின்பற்றிய மார்க்சிய அறிஞர்கள் முன்வைத்த பொருளியல் சிந்தனைகள் மார்க்சியப் பொருளியல் (Marxian economics) ஆகும்.

வரையறை[தொகு]

மார்க்சியப் பொருளியல் என்பது மார்க்சிய அணுகுமுறையைப் பின்பற்றிய பல்வேறு பொருளியல் கொள்கைகளைக் குறிக்கும். இது பல்வேறு பொருளியல் கொள்கைகளின் சுருக்கமாகவோ அல்லது விரிவாகவோ அமைகின்றது. சில கொள்கைகள் ஒன்றுக்கொன்று முரண்பாடாகவும் அமைவது குறிப்பிடத்தக்கது.[1]

முதலீட்டியத்தின் நெருக்கடி நிலை, உற்பத்திப் பகிர்வு, மிகை மதிப்பு, மிகை உற்பத்தி ஆகியவை மார்க்சியப் பொருளியலில் முதன்மையான இடம் வகிக்கிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Wolff and Resnick, Richard and Stephen (August 1987). Economics: Marxian versus Neoclassical. The Johns Hopkins University Press. பக். 130. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0801834805. https://archive.org/details/economicsmarxian00wolf_0. "Marxian theory (singular) gave way to Marxian theories (plural)." 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மார்க்சியப்_பொருளியல்&oldid=3848764" இலிருந்து மீள்விக்கப்பட்டது