உள்ளடக்கத்துக்குச் செல்

ஆல்பிரடு மார்ஷல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆல்பிரடு மார்ஷல்
பிறப்பு(1842-07-26)26 சூலை 1842
பெர்மோன்ட்சே, இலண்டன், இங்கிலாந்து
இறப்பு13 சூலை 1924(1924-07-13) (அகவை 81)
கேம்பிரிட்ஜ், இங்கிலாந்து
தேசியம்பிரித்தானியர்
கல்விமரபுபுதுச்செவ்வியல் பொருளியல்
தாக்கம்லியோன் வால்ரசு, வில்பிரடோ பரேடோ, ஜூல்சு டுபுயிட்டு, இசுடான்லி ஜெவோன்சு, என்றி சித்விக்கு
தாக்கமுள்ளவர்புதுச்செவ்வியல் பொருளியலாளர்கள், ஜான் மேனார்ட் கெயின்ஸ், ஆர்தர் செசில் பிகோ, கேரி பெக்கர்
பங்களிப்புகள்புதுச்செவ்வியல் பொருளியல் நிறுவனர்
பொருளியல் கொள்கைகள் (1890)

ஆல்ஃபிரடு மார்ஷல் (Alfred Marshall, 26 சூலை 1842 – 13 சூலை 1924) தமது காலத்தில் மிகவும் தாக்கமேற்படுத்திய ஒரு பிரித்தானிய பொருளியலாளர் ஆவார். இவரது நூல், பொருளியல் கொள்கைகள் (1890), இங்கிலாந்தில் பல ஆண்டுகளுக்கு முதன்மையான பொருளியல் பாடநூலாக விளங்கியது. இந்நூல் கேள்வியும் நிரம்பலும், விளிம்புப் பயனுடைமை, உற்பத்தி ஆக்கச் செலவுகள் போன்ற கருத்துக்களை ஒன்றிணைத்து முழுமையாக்கியது. பொருளியலை நிறுவியவர்களில் ஒருவராக மார்ஷல் கருதப்படுகிறார்.

ஆல்பிரடு மார்ஷல் 1842ஆம் ஆண்டு சூலை 26 அன்று இங்கிலாந்தில் இலண்டனில் பிறந்தார். கேம்பிரிச்சின் புனித ஜான் கல்லூரியில் கல்வி கற்றார். அரசியல் பொருளியலில் ஆய்வு செய்து வந்தார். 1875இல் அமெரிக்காவிற்குச சென்று கட்டணக் கட்டுப்பாடுகளால் எழும் தாக்கத்தை அளவிட முயன்றார். பின்னர் இத்தாலியில் ஓராண்டு ஆய்வு செய்தார். 1885இலிருந்து 1908 வரை கேம்பிரிச்சு பல்கலைக்கழகத்தில் அரசியல் பொருளியல் விரிவுரையாளராகப் பணியாற்றினார். தமது சிறப்புமிக்க பொருளியல் கொள்கைகள் என்ற நூலை 1890இல் வெளியிட்டார். அடுத்த பத்தாண்டுகளில் இந்த நூலை மேம்படுத்தி பல பதிப்புக்களை வெளியிட்டார். 1924இல் இயற்கை எய்தினார்.

படைப்பு

[தொகு]
  • 1879 – The Economics of Industry (with Mary Paley Marshall)
  • 1879 – The Pure Theory of Foreign Trade: The Pure Theory of Domestic Values
  • 1890 – Principles of Economics
  • 1919 – Industry and Trade the economics of industry -1879

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆல்பிரடு_மார்ஷல்&oldid=3872554" இலிருந்து மீள்விக்கப்பட்டது