சூழற் பொருளியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சூழற் பொருளியல் (Environmental Economics) என்பது, சூழல் சார்ந்த விடயங்களுடன் தொடர்புடைய, பொருளியலின் துணைத் துறைகளுள் ஒன்று. தேசிய பொருளியல் ஆய்வு நிறுவனத்தின் சூழற் பொருளியல் திட்டத்தின்படி, சூழற் பொருளியல், தேசிய மற்றும் உள்ளூர்ச் சூழற் கொள்கைகளின் பொருளியற் தாக்கங்கள் குறித்த கோட்பாட்டு அல்லது செயலறிவு சார்ந்த ஆய்வுகளை முன்னெடுக்கிறது. வளி மாசடைதல், நீரின் தரம், நச்சுப் பொருள்கள், திண்மக் கழிவு, புவி சூடாதல் போன்றவை தொடர்பான மாற்றுச் சூழற் கொள்கைகளின் செலவின வரவினங்கள் போன்றன இத்துறையின் ஆய்வுகளில் அடங்கும் குறிப்பான விடயங்கள்.[1]

பொருளியலைச் சூழல் மண்டலத்தின் துணைப் பிரிவாகக் கொண்டு, இயற்கை மூலதனத்தைப் பாதுகாப்பதை வலியுறுத்தும் உயிர்ச்சூழற் பொருளியலில் இருந்து சூழற் பொருளியல் வேறுபட்டது.[2] செருமன் பொருளியலாளர்களின் ஆய்வொன்றின்படி, உயிர்ச்சூழற் பொருளியலும், சூழற் பொருளியலும் இரு வேறு பொருளியற் சிந்தனைகள்.

குறிப்புக்கள்[தொகு]

  1. "Environmental Economics". NBER Working Group Descriptions. National Bureau of Economic Research. பார்த்த நாள் 2006-07-23.
  2. Jeroen C.J.M. van den Bergh (2001). "Ecological Economics: Themes, Approaches, and Differences with Environmental Economics," Regional Environmental Change, 2(1), pp. 13-23 (press +).
"https://ta.wikipedia.org/w/index.php?title=சூழற்_பொருளியல்&oldid=1803135" இருந்து மீள்விக்கப்பட்டது