நிர்வாகப் பொருளியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நிர்வாகப் பொருளியல் (Managerial Economics) என்பது ஒரு வணிகத்தில் நடைமுறை சிக்கல்களைத் தீர்க்க பயன்படும் பொருளாதாரக் கருத்துகள், கோட்பாடுகள், கருவிகள், வழிமுறைகள் முதலியவற்றுடன் தொடர்புடையது. வேறு ஒரு முறையில் இந்தப் பொருளாதாரத்தைப் பொருளியல் கோட்பாடு மற்றும் நிர்வாகக் கோட்பாட்டின் கலவையாகும் எனலாம். இது முடிவெடுப்பதில் மேலாளருக்கு உதவுகிறது.மேலும் செய்முறைக்கும் கோட்பாட்டிற்கும் இடையிலான இணைப்பாக செயல்படுகிறது.[1] இது சில நேரங்களில் வணிகவியல் பொருளாதாரம் என்றும் குறிப்பிடப்படுகிறது. மேலும் இது பொருளியலின் ஒரு கிளையாகவும் விளங்குகிறது. இது வணிகங்களில் முடிவு எடுக்கும் முறைகளுக்கு குறும்பொருளியல் பகுப்பாய்வைப் பயன்படுத்துகிறது. எனவே, இது நடைமுறையில் பொருளாதாரக் கோட்பாட்டையும் பொருளாதாரத்தையும் இணைக்கிறது.[2]

பின்னடைவு பகுப்பாய்வு, நுண்கணிதம் போன்ற அளவுசார் உத்திகளை இது பெரிதும் பயன்படுத்துகிறது.[3]

வாய்ப்பளவு[தொகு]

ஒரு நிர்வாகச் சிக்கலுக்கு நடவடிக்கை எடுப்பதைப் பெரிதும் அதிகப்படியாகப் பரிந்துரைப்பதால் நிர்வாகப் பொருளாதாரம் பரிந்துரைக்கப்படுகிறது.

உற்பத்தி, கணக்குகள், விற்பனை போன்ற ஒரு நிறுவனத்தில் பல்வேறு துறைகளின் பிரச்சினைகளுக்கு நிர்வாகப் பொருளாதாரம் பதில்களைக் கூறும் ஆற்றல் கொண்டது.

மேலும் இது நிர்வாகி முடிவெடுப்பதில் பெரிதும் உதவும்.

​​செயல்பாட்டுச் சிக்கல்கள்[தொகு]

 • தேவை சார்ந்த முடிவுகள்
 • உற்பத்தி சார்ந்த முடிவுகள்
 • விலைக் கோட்பாடு
 • அனைத்து மனித பொருளாதார நடவடிக்கைகளும்

சுற்றுச்சூழல் பிரச்சினைகள்[தொகு]

 • உள்நாட்டு வணிகம் / சர்வதேசச் சூழலின் இயல்பு  
 • அரசாங்கக் கொள்கை, சமுதாய விலையின் தன்மை மற்றும் தாக்கம்.

மேல் கூறப்பெற்று இருக்கும் அனைத்து விடயங்களிலும் நிர்வாகப் பொருளாதாரம் பெரிதும் உதவுகிறது.

தேவை சார்ந்த முடிவுகள்:[தொகு]

தேவை என்பது வாடிக்கையாளர்கள் ஒரு பொருளை வாங்க விருப்பம் கொள்ளுதல் மற்றும் அதனைப் பெற தகுதி உடையவராய் இருத்தல். இது ஒரு பொருளின் சந்தை அளவை வரையறுக்கிறது. வாடிக்கையாளரின் தேவை ஒரு நிறுவனத்தின் வருவாய், இலாபங்கள் மற்றும் அதன் ஊழியர்களின் வருமானம் அதைச் சார்ந்து இருப்பதால் தேவைக்கான பகுப்பாய்வு முக்கியமானது.

மேற்கோள்கள்[தொகு]

 1. W. B. Allen, Managerial Economics Theory, Applications, and Cases, 7th Edition. Norton. Contents.
 2. • William J. Baumol (1961). "What Can Economic Theory Contribute to Managerial Economics?," American Economic Review, 51(2), pp. 142-46. Abstract[தொடர்பிழந்த இணைப்பு].
     • Ivan Png and Dale Lehman (2007, 3rd ed.). Managerial Economics. Wiley. Description பரணிடப்பட்டது 2011-07-26 at the வந்தவழி இயந்திரம் and chapter-preview links.
     • M. L. Trivedi (2002). Managerial Economics: Theory & Applications, 2nd ed., Tata McGraw-Hill. Chapter-preview links.
 3. NA (2009). "managerial economics," Encyclopædia Britannica. Cached online entry.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நிர்வாகப்_பொருளியல்&oldid=3359633" இலிருந்து மீள்விக்கப்பட்டது