ஆடம் சிமித்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஆடம் சிமித்
மேல்நாட்டுப் பொருளியலாளர்
தொன்மைப்பொருளியல்
(தற்காலப் பொருளியல்)
AdamSmith.jpg
முழுப் பெயர் ஆடம் சிமித்
பிறப்பு ஞானஸ்நானம் ஜூன் 16, 1723
[ப.பா: ஜூன் 5 1723]
கர்க்கல்டி, ஃபைஃப், ஸ்காட்லாந்து
இறப்பு 17 சூலை 1790(1790-07-17) (அகவை 67)
எடின்பரோ, ஸ்காட்லாந்து
சிந்தனை
மரபு(கள்)
மரபுப் பொருளியல்
முக்கிய
ஆர்வங்கள்
அரசியல் மெய்யியல், நெறிமுறை, பொருளியல்
குறிப்பிடத்தக்க
எண்ணக்கருக்கள்
மரபுப் பொருளியல்,
தற்கால கட்டற்ற சந்தை,
தொழிற் பிரிவு,
the "invisible hand"

ஆடம் சிமித் (ஆடம் ஸ்மித்; Adam Smith; ஞானஸ்நானம் ஜூன் 16, 1723ஜூலை 17,1790 [பழைய முறை: ஜூன் 5, 1723 – 17 ஜூலை 1790]) ஓர் ஒழுக்கநெறி மெய்யியலாளரும் அரசியல் பொருளியலின் முன்னோடியும் ஆவார். ஸ்காட்டிய அறிவொளி இயக்கத்தின் முதன்மையானவர்களில் ஒருவரான சிமித், ஒழுக்க உணர்வுக் கோட்பாடு (The Theory of Moral Sentiments), நாடுகளின் செல்வத்தின் இயல்புகள், காரணங்கள் குறித்த ஒரு ஆய்வு (An Inquiry into the Nature and Causes of the Wealth of Nations) (அல்லது நாடுகளின் செல்வம்) ஆகிய நூல்களை எழுதியுள்ளார். இவற்றுள் இரண்டாவது நூல் அவருடைய மிகச் சிறந்த ஆக்கம் என்பதுடன், தற்காலப் பொருளியலின் முதலாவது நூல் என்றும் கருதப்படுகிறது.

சிமித், ஒழுக்க மெய்யியலை கிளாஸ்கோப் பல்கலைக்கழகத்திலும், ஆக்ஸ்போர்ட் பல்கலைக் கழகத்திலும் பயின்றார். பட்டம் பெற்றபின்னர், எடின்பரோவில் பல வெற்றிகரமான விரிவுரைகளை நிகழ்த்தினார். பின்னர் ஸ்காட்டிய அறிவொளிக் காலத்தில் அவர் டேவிட் ஹியூம் (David Hume) என்பவருடன் சேர்ந்து பணியாற்றினார். ஒழுக்க மெய்யியல் கற்பிப்பதற்காக சிமித்துக்கு கிளாஸ்கோ பல்கலைக் கழகத்தில் பேராசிரியர் பதவி கிடைத்தது. இக்காலப்பகுதியில்தான் இவர்ஒழுக்க உணர்வுக் கோட்பாடு என்னும் நூலை எழுதி வெளியிட்டார். இவர் தனது வாழ்வின் பிற்காலங்களில் பல நாடுகளுக்கும் செல்லும் வாய்ப்புக் கொண்ட பல கற்பித்தல் வாய்ப்புக்களைப் பெற்றார். இவற்றின் மூலம் ஐரோப்பா முழுவதும் பயணம் செய்து அக்காலத்தில் பெயர் பெற்றிருந்த பல அறிவுத்துறை சார்ந்த தலைவர்களைச் சந்தித்தார். பின்னர் சொந்த நாடு திரும்பிய அவர் அடுத்த பத்து ஆண்டுகளையும் நாடுகளின் செல்வம் என்னும் நூலை எழுதுவதில் செலவிட்டார். இது 1776 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது. 1790 ஆம் ஆண்டில் சிமித் காலமானார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆடம்_சிமித்&oldid=2231246" இருந்து மீள்விக்கப்பட்டது