உள்ளடக்கத்துக்குச் செல்

விரிவுரை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆத்திரேலியப் பாதுகாப்புப் படை அகாதமியில் விரிவுரை
பதினான்காம் நூற்றாண்டின் மத்தியில் இத்தாலியில் உள்ள போலோக்னா பல்கலைக்கழகத்தில் சொற்பொழிவு நிகழ்த்தப்படும் போது

விரிவுரை (Lecture இலத்தீன்: lēctūra வாசித்தல்) என்பது ஒரு குறிப்பிட்ட பாடத்தைப் பற்றிய தகவல்களை வழங்க அல்லது மக்களுக்கு கற்பிப்பதனை நோக்கமாகக் கொண்ட ஒரு வாய்வழி விளக்கக்காட்சி ஆகும். எடுத்துக்காட்டாக பல்கலைக்கழகம் அல்லது கல்லூரிப் பேராசிரியர்களது கற்பித்தல் முறை . இவை முக்கியமான தகவல், வரலாறு, பின்னணி, கோட்பாடுகள் மற்றும் சமன்பாடுகளை வெளிப்படுத்தப் பயன்படுகிறது. ஒரு அரசியல்வாதியின் பேச்சு, ஒரு அமைச்சரின் பிரசங்கம் அல்லது ஒரு வணிக ரீதியிலான விற்பனை விளக்கக்காட்சி ஆகியவை விரிவுரை வடிவத்தின் ஒத்ததாக இருக்கலாம். வழக்கமாக விரிவுரையாளர் ஓர் அறையின் முன்புறத்தில் நின்று விரிவுரையின் உள்ளடக்கத்துடன் தொடர்புடைய தகவல்களை வாசிப்பார்.

விரிவுரைகள் முறையில் கற்பித்தல் நடைபெறுவது விமர்சிக்கப்பட்டாலும், பல்கலைக்கழகங்கள் தங்கள் பெரும்பான்மையான படிப்புகளுக்கு மாற்றுக் கற்பித்தல் முறைகளைக் கண்டறியவில்லை. [1] விரிவுரை என்பது முக்கியமாக ஒரு வழித் தொடர்பு முறையாகும் என்று விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர், இது பெரும்பான்மையான பார்வையாளர்களின் பங்கேற்பை உள்ளடக்காத செயலற்ற கற்றலைச் சார்ந்துள்ளது. எனவே, விரிவுரை என்பது பெரும்பாலும் செயல்வழிக் கற்றலுடன் முரண்படுகிறது. திறமையான பேச்சாளர்களால் வழங்கப்படும் விரிவுரைகள் மிகவும் ஊக்கமளிக்கும்; குறைந்த பட்சம், விரிவுரைகள் ஒரு குறிப்பிட்ட துறைக்கு அதிக எண்ணிக்கையிலான மாணவர்களை அறிமுகப்படுத்துவதற்கான விரைவான, மலிவான மற்றும் திறமையான வழியாக கல்விக் கூடங்களில் கருதப்படுகிறது.

சொற்பிறப்பியல்[தொகு]

கோலன் லெவின் ஒரு திட்டவட்டமான பக்கத்தைப் பயன்படுத்தி விரிவுரை செய்கிறார்

"விரிவுரை" என்ற பெயர்ச்சொல் 14 ஆம் நூற்றாண்டிலிருந்து தொடங்குகிறது, இலத்தீன் சொல்லான லெகெரே என்பதற்கு படிப்பது என்று பொருளாகும். 16 ஆம் நூற்றாண்டில், கல்வி தொடர்பாக வழங்கப்படும் வாய்வழி விரிவுரை என பொருள்பட்டது. "லெக்டர்ன்" என்ற பெயர்ச்சொல் விரிவுரையாளர்கள் பயன்படுத்தும் வாசிப்பு மேசையைக் குறிக்கிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Lecturing: Advantages and Disadvantages of the Traditional Lecture Method". CIRTL Network. Archived from the original on 11 March 2014. பார்க்கப்பட்ட நாள் 11 March 2014.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=விரிவுரை&oldid=3899531" இலிருந்து மீள்விக்கப்பட்டது