நெறிமுறை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நெறிமுறை (Protocol/ Norm) என்பது சமுதாயத்தில் மனிதர்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்று அச் சமுதாயத்தினால் நடைமுறைப் படுத்தப்படும் விதிகளாகும். இந்த சமூக நடைமுறைப் படுத்தல் என்ற அம்சமே நெறிமுறைகளை விழுமியம் போன்றவற்றிலிருந்து வேறுபடுத்துகின்றது. தவிரவும் விழுமியம் கருத்தியல் அடிப்படையைக் கொண்டது, நெறிமுறை குறிப்பிட்ட விடயங்களில் மக்கள் இவ்வாறுதான் நடந்து கொள்ள வேண்டும் போன்ற நெறிப்படுத்தல் தன்மை கொண்டது. நெறிமுறைகளின் தாக்கம் பல்வேறு வகையான மனித நடத்தைகளில் இருப்பதாகக் கருதப்படுகிறது.

எல்லாச் சமுதாயங்களிலும் நெறிமுறைகள் ஒன்றுபோல் இருப்பதில்லை. நெறிமுறைகளை வகுத்துக் கொள்வதில் சமுதாயங்களுக்குள் வேறுபாடுகள் காணப்படுகின்றன. திருமணம், கணவன் - மனைவி தொடர்பு, பிள்ளைகள் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் எனப் பலவகையான நெறிமுறைகள் ஒன்றுக்கொன்று வேறுபட்டுக் காணப்படுவது மட்டுமின்றி முற்றிலும் எதிர் மாறானவையாகவும் இருக்கக்கூடும். எடுத்துக்காட்டாகச் சில சமுதாயங்கள் ஒருவனுக்கு ஒருத்தி என்ற நிலைப்பாட்டைத் திருமணத்தில் கடைப்பிடிக்க, வேறு சில சமுதாயங்களில் பலதார மணம் வழக்கில் உள்ளது.

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நெறிமுறை&oldid=3398843" இலிருந்து மீள்விக்கப்பட்டது