பொருளாதாரப் புவியியல்
Appearance
பொருளாதாரப் புவியியல் என்பது, பரந்த அளவில் வேறுபட்டுக் காணும் பொருளாதார நிலைமைகளைப் பற்றி ஆராயும் ஒரு துறையாகும். புவியியற் பிரதேசமொன்றின் பொருளாதாரம், காலநிலை, நிலவியல், மற்றும் சமூக அரசியற் காரணிகளின் செல்வாக்குக்கு உட்பட்டிருக்கலாம். வளங்கள் கிடைக்கும் தன்மை, போக்குவரத்துச் செலவு, மற்றும் நிலப் பயன்பாட்டுத் தீர்மானங்கள் என்பவற்றின் மீது நிலவியல் தாக்கம் கொண்டுள்ளது. விவசாய மற்றும் வனவள உற்பத்திகள் போன்ற இயற்கை வளங்கள், தொழில் செய்வதற்குரிய நிலைமை, உற்பத்தித் திறன் போன்றவை காலநிலையில் தங்கியுள்ளன. பொருளாதாரத் தீர்மானங்களின்மீது, பிரதேசங்களின் தனிச்சிறப்பான சமூக-அரசியல் நிறுவனங்கள் செல்வாக்குச் செலுத்துகின்றன.
இவற்றையும் பார்க்கவும்
[தொகு]- பொருளாதாரப்புவியியல் தலைப்புக்களின் பட்டியல்
- இடஞ்சார் பொருளியல் (spatial economics)
- பிரதேச அறிவியல் (regional science)