உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:தமிழர்/தொகுப்பு02

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தமிழர் பற்றிய ஆய்வும் தகவல் சேகரிப்பும்

[தொகு]

இந்தக் கட்டுரையை மேம்படுத்த தேவையான ஆய்வு இங்கு வார்ப்புரு:தமிழர் தகவல்கள் மேற்கொள்ளப்படுகின்றது. --Natkeeran 02:50, 22 ஜூன் 2007 (UTC)

உப தலைப்புகள்

[தொகு]
  • தமிழர் அடையாளம்
  • தமிழர் வரலாறு
  • புவியில் தமிழ் மக்கள் பரம்பல்
  • தமிழர் சமூக அமைப்பு
  • தமிழர் பண்பாடு
  • தமிழர் கலைகள்
  • தமிழர் சமயம்
  • தமிழர் அரசியல்
  • தமிழர் பொருளாதாரம்
  • தமிழர் அமைப்புகள்
  • தமிழ் ஊடகங்கள்

கட்டுரைக்கு தொடர்பு இல்லாத் படிமங்கள்

[தொகு]

இந்தப் படத்தோடு மக்கள் இருந்தான் பொருந்தும். மற்றப்படி வெறும் தேயிலத் தோட்டதின் படம் தமிழர் என்ற கட்டுரைக்கு பொருத்தமில்லை என்பது என் கருத்து. --Natkeeran 00:52, 11 மார்ச் 2008 (UTC)

மடகாஸ்கரில் தமிழர் ??

[தொகு]

மடகாஸ்கரின் தமிழர் இருப்பதற்கு எந்த ஆதாரமும் சிக்கவில்லை. எதாவது ஆதாரங்கள் இருந்தால் இங்கு குறிப்பிடவும். நன்றி. --Natkeeran 17:03, 12 ஏப்ரல் 2008 (UTC)

திருத்தி எழுதுதல் - மொழியும் இலக்கியமும்

[தொகு]
மதுரை தமுக்கம் மைதானத்தின் வாயிலிலுள்ள "தமிழன்னை" சிற்பம்

தமிழர்களுக்கு தமிழ் மொழியின் மீதுள்ள பற்று அளவிற்கறியது. ஏனைய பிற தென்னிந்திய மொழிகளைப் போல, தமிழும் ஒரு திராவிட மொழி. வட இந்தியாவில் பேசப்படும், இந்திய-ஐரோப்பிய மொழிகளிடமிருந்து பெரிதும் வேறுபட்டது. சமஸ்கிருத மொழியின் தாக்கம் மிக்க சிறிய அளவில் கொண்ட திராவிட மொழி, தமிழ். தமிழின் பழமை மற்றும் செழுமையின் காரணத்தால் 2005ஆம் ஆண்டில் இந்திய அரசால் தமிழ் செம்மொழி என அறிவிக்கப்பட்டது.

பழந்தமிழரின் அகப்பொருள் மற்றும் புறப்பொருள் பாடும் கவிதைகளும், அறவியல் நிலைப்பாடுகளை நிறுவும் கவிதைகள் போன்ற பல கவிதைகளும் கொண்ட சங்கத் தமிழ் இலக்கியம், ஏனைய பிற இந்திய மொழிகளின் இலக்கியத்திலிருந்தும் நவீன தமிழிலக்கியத்திலிருந்தும் முற்றிலும் வேறுபட்டது. தெற்காசிய இலக்கியத்தின் தொன்மையான மற்றும் பழமையான இலக்கியத்தில் மிகச் சிறப்பு வாய்ந்தது தமிழ் இலக்கியம் (ஜார்ஜ் ஹார்ட் 1975). தமிழின் எழுத்து நடையும், வார்ப்புருவும், மொழியும் மிகச் சிறிய அளவே தற்காலத்தில் மாற்றம் அடைந்துள்ளது. ஆகையால் தான், இன்றும் பழந்தமிழ் இலக்கியத்தினையும், சங்க கால இலக்கியத்தினையும் தமிழரால் பயிலமுடிகிறது, அதன் தாக்கமும் நவீன இலக்கியத்திலும், நவீன பண்பாட்டிலும் காணப்படுகிறது. நவீன தமிழ் இலக்கியம் பன்முகத்தன்மை கொண்டதாக உள்ளது. நவீன தமிழ் இலக்கியத்தின் முன்னோடியாக திகழ்ந்தவர் சுப்பிரமணிய பாரதியார். பின் வந்த பல்வேறு எழுத்தாளர்களாலும் நவீன தமிழ் இலக்கியம் செழுமை பெற்றுள்ளது. முற்போக்கான கருத்துக்களும் சமூக விமர்சனங்களையும் நுட்பமாக சிறுகதைகளில் உள்ளடக்கிய புதுமைப்பித்தன், மனவோட்டத்தின் பல்வேறு தளங்களில் எழும்பும் உணர்வுகளைப் பற்றியும் அதைச் சார்ந்த கேள்விகளையும் சிறந்த சிறுகதைகளாக பதிந்த மௌனி, வரலாற்று புனைகதைகள் படைத்த கல்கி கிருஷ்ணமூர்த்தி, விளிம்பு நிலை மனிதர்களின் வாழ்க்கையினை படம் பிடித்த ஜி.நாகராஜன், இசையின் நுட்பத்தின் சிறப்பையும் மனித உறவுகளைப் பற்றியும் பதிந்த தி.ஜானகிராமன், பெண்ணியம் சார்ந்த உலகினை எழுத்தோவியமாக தீட்டிய அம்பை, நவீன தமிழ் சிறுகதைகளின் முன்னோடியாக கருதப்பட்ட ஆதவன், இலங்கை வாழ் தமிழ் மக்களின் நிலைப் பற்றி பதிந்த எஸ்.பொன்னுத்துரை என்று பல சிறந்த எழுத்தாளர்களைக் கொண்டது நவீன தமிழ் இலக்கியம்.

திருத்தம்

[தொகு]

தமிழர்கள் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலான இலக்கண இலக்கிய வளம் மிக்க திராவிட மொழியான தமிழை தாய் மொழியாக கொண்டவர்கள். சமஸ்கிரததுக்கு இணையாக தமிழ் இந்திய நாட்டின் செம்மொழிகளில் ஒன்று. இந்திய அரசால் உத்யோகபூர்வமாக 2005 ம் ஆண்டு தமிழே முதலாவதாக செம்மொழியாக அங்கீகரிக்கப்பட்டது. இந்தியா, இலங்கை, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் தமிழ் அரச அலுவல் மொழியாகவும் இருக்கிறது.

தமிழுல் கிடைக்கப்பெற்ற தொன்மையான இலக்கண நூல் தொல்காப்பியம். இது தமிழ் மொழியின் இலக்கணத்தை வரையறுப்பதோடு, அக்கால தமிழ்ச் சூழலையும் விபரிக்கின்றது. தொல்காப்பியத்தில் செடிகள், பறவைகள், விலங்குகள் பற்றிய குறிப்புகள் குறிப்பிடத்தக்கவை. கி.மு 300 இருந்து கி.பி 300 வரை எழுதப்பட்ட இலக்கியம் சங்க இலக்கியம் எனப்படுகிறது. பழந்தமிழரின் அகப்பொருள் மற்றும் புறப்பொருள் பாடும் கவிதைகளும், அறவியல் நிலைப்பாடுகளை நிறுவும் கவிதைகளையும் சங்க இலக்கியத்தில் காணலாம். இக்காலத்தில் தோன்றிய இலக்கியங்களை எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, பதினெண் கீழ்க்கணக்கு என மூன்று தொகை நூற்களாக தொகுக்கப்பட்டுள்ளன.

கி.பி 300 இருந்து கி.பி 700 தமிழ் இலக்கிய வழக்கத்தில் சங்கம் மருபிய காலம் எனப்படுகிறது. இக்காலத்தில் எழுந்த அற நூல் திருக்குறள், இன்றும் அனைத்து தமிழர்களால் பேற்றப்படும் ஒரு நூலாக விளங்குகிறது. இக்கால்த்திலேயே பெளத்த தமிழ் காப்பியங்களான சிலப்பதிகாரம், மணிமேகலை, குண்டலகேசி ஆகியவையும், சமண தமிழ் காப்பியங்களான சீவக சிந்தாமணி, வளையாபதி, மற்றும் ஐஞ்சிறுகாப்பியங்களும் தோன்றின.

கி.பி 700 - கி.பி 1200 காலம் பக்தி இலக்கிய காலம் எனப்படுகிறது. இக்காலத்தில் தமிழ்ப் பக்தி இயக்கம் வலுப்பெற்றதது. சைவமும் வைணவமும் ஆதரவு பெற்றன. சைவ நாயன்மார்களின் பல ஆயிரம் தேவாரங்களைப் பாடினர். வைணவ ஆழ்வார்கள் நாலாயிரத்திவ்ய பிரபந்தம் பாடப்பெற்றன. தமிழகத்தில், இந்துக்கள் இதை வேதங்களுக்கு இணையாகக் கருதுவதால், இது திராவிடவேதம் என்று அழைக்கப்படுகிறது. இக்காலத்தில் திருமந்திரம் சிவஞானபோதம் உட்பட பதின்நான்கு சைவ சிந்தாத நூற்கள் இயற்றப்பட்டன். கலிங்கத்துப்பரணி, கம்ப இராமாயணம் ஆகியவையும் இக்காலத்தில் இயற்றப்பட்டன. 850 ஆண்டில் இருந்து 1250 ஆண்டு வரை சோழப் பேரரசு சிறப்புற்று இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

கி.பி 1200 - கி.பி 1800 காலப்பகுதி மத்திய காலம் எனப்படுகிறது. இக்காலத்தில் முகாலயர், நாயக்கர், மாராத்தியர், ஆங்கிலேயர்கள், பிரேஞ்சுகாரர்கள் ஆகியோர் தமிழப் பகுதிகளை ஆண்டனர். இக்காலமே தமிழ் இஸ்லாமிய இலக்கியம், தமிழ் கிறிஸ்தவ இலக்கியம் ஆகியவற்றின் தோற்றகாலம். பெரும்பாலான நிகண்டுக்கள் இயற்றப்பட்டதும் இக்காலமே.


18 ம் நூற்றாண்டு தொடக்கம் தமிழின் மறுமலர்ச்சி காலம் எனலாம். இக்காலத்திலேயே தமிழர்களின் இலக்கிய மரபு தமிழர்களுக்கே புலப்படத் தொடங்கியது. உ. வே. சாமிநாதையர், சி. வை. தாமோதரம்பிள்ளை, ஆறுமுக நாவலர் பல தமிழறிஞர்கள் ஏட்டு தமிழ் இலக்கியங்களை தேடி, பதிப்பித்து பாதுகாத்தனர். 1916 ம் ஆண்டில் அன்று தமிழில் மிகுதியாக காணப்பட்ட சமஸ்கிருத சொற்களையும் மணிப்பிரவாள நடையையும் தடுக்க மேற்கொள்ளப்பட்ட தொடங்கப்பட்ட இயக்கமே தனித்தமிழ் இயக்கமாகும். தேவநேயப் பாவாணர், மறைமலை அடிகள், பாரதிதாசன், பெருஞ்சித்திரனார் ஆகியோர் முன்னின்று தனித் தமிழ் இயக்கதை தொடங்கினர்.


தற்காலத் தமிழ் இலக்கியத்தின் முன்னோடிக் கவிஞராக சுப்பிரமணிய பாரதியார் கருதப்படுகிறார். இக்காலதில் புதுக் கவிதை பிறந்தது. உரைநடை வீச்சு பெற்றது. நாவல், சிறுகதை, கட்டுரை ஆகியவை தமிழில் வளர்ச்சி பெற்றன. 1954-1968 காலப்பகுதிகளில் தமிழ்க் கலைக்களஞ்சியம் பல அறிஞர்களின் கூட்டுழைப்பாக உருவாக்கப்பட்டது. தமிழ் இலக்கியத்தில் மரபு, மார்க்சிய, முற்போக்கு, நற்போக்கு போக்குகள் இனங்காணப்பட்டன. திராவிட இயக்கத்தினர் தமிழை கருவியாக பாவித்து தமது கருத்துக்களை மக்களுக்கு எடுத்துசெல்வதில் பெரும் வெற்றி கண்டனர். தற்கலாத்தல் பெண்ணிய கருத்துக்களையும் எடுத்துரைத்த அம்பை, மாலதி மைத்ரி, குட்டி ரேவதி, சுகிர்தராணி, உமாமகேஸ்வரி, இளம்பிறை, சல்மா, வெண்ணிலா, ரிஷி, மாலதி(சதாரா), வைகைச்செல்வி, தாமரை உட்பட தமிழ் பெண் எழுத்தாளர்களின் எழுத்துகக்ளும் வலுப்பெற்று இருக்கின்றன. புகலிட அல்லது உலகத்தமிழர்களின் எழுத்துக்களும் தமிழ் இலக்கியத்தில் ஒரு சிறப்பிடம் பெற்றுள்ளன. நாளிதழ், இதழ், வானொலி, தொலைக்காட்சி, சினிமா, இணையம் என பல்வேறு ஊடகங்களும் வேரூன்றி பரவி நிற்கின்றது. அறிவியல் தமிழின் அவசியம் அறிந்து தமிழ்நாடு அரசும் பிற அமைப்புகளும் அதை வளர்ப்பதைக் குறியாக கொண்டு செயற்பட்டு வருகிறார்கள். அதேவேளை தமிழ்நாட்டில் பரவாலக வழங்கும் தமிங்கிலம் தாய் மொழியின் பேணலை சாவலுக்கு உட்படுத்தியிருக்கிறது.

சேர்க்க வேண்டிய தலைப்புகள்

[தொகு]
  • தமிழர் மெய்யியல்
  • உலகமயமாதலும் தமிழரும்
  • தமிழர் அறிவியல்
  • தமிழர் தொழில்நுட்பம்
  • தமிழ் காமிக்ஸ்
  • தமிழர் உடை ஒய்யாரம்
  • சித்தர்கள்
  • தமிழியல்
  • வாழ்வுச் சடங்குகள் (பிறப்பு, திருமணம், இறப்பு)
  • மூடநம்பிக்கைகள்
  • Calligraphy !!!????
  • கவிதை
  • தோட்டக்கலை, அலங்காரக்கலை, பூ அலங்காரம் ???
  • அணிகலங்கள் ???
  • பயணங்கள் ???
  • விருந்தோம்பல்?
  • Gifts - பரிசளித்தல்
  • கல்வி ?
  • உடல்நலம் ??
  • பழக்க வழக்கங்கள் - etiquette
  • குறியீடுகள்
  • கைத்தொழில்
  • Ceramics, உலோகம், மரம், மண், தந்தம்
  • வீடு
  • தோட்டம்
  • சமூக அமைப்பு - குடும்பம்
  • சமூக அமைப்பு - உறவு முறைகள்
  • ஊடகம் - நாளிதழ்
  • ஊடகம் - இதழ், சிற்றிதழ்
  • ஊடகம் - ஒலிபரப்பு
  • ஊடக்ம் - தொலைக்காட்சி
  • ஊடகம் - இணையம்
  • பெயர்கள்
  • போரியல்

தமிழ் நாட்டாரியல்

[தொகு]

முதன்மைக் கட்டுரை: தமிழ் நாட்டாரியல்

நாட்டாரியல் மக்களின் பழக்க வழக்கங்கள், மொழி, இலக்கியம், பண்பாடு, நம்பிக்கைகள் முதலானவற்றை நாட்டாரியல் குறிக்கிறது.[1] பெரும்பாலான தமிழர்கள் கிராமத்தில் (எ.கா: தமிழ்நாடு 53%) வாழ்வதால் நாட்டாரியல் கிராமத்து கூறுகளை சிறப்பாக சுட்டி நின்றாலும், நாட்டாரியல் நவீனத்துவதுக்கு முன்னைய அனைத்தையும் சேர்த்தே சுட்டுகிறது. மேலும், கானா பாடல்கள் நகரப்புறத்தில் தோன்றிய ஒரு நாட்டாரியல் வடிவம் எனலாம்.

முதல் பத்தி திருத்தம் - மறுப்பு என்றால் தெரிவிக்கவும்

[தொகு]

அசல்

[தொகு]

திராவிட மொழிக் குடும்பத்தில் முக்கிய மொழிகளில் ஒன்றாகிய தமிழ் மொழியைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் தமிழர் (Tamils,Tamilians) எனப்படுகிறார்கள். தமிழர்கள் ஏறத்தாழ 2000 ஆண்டுகள் எழுதப்பட்ட வரலாற்றைக் கொண்ட தென்னாசிய இனக்குழுவொன்றைச் சேர்ந்தவர்கள். மிகப் பழைய தமிழ்ச் சமுதாயங்கள் தென்னிந்தியா மற்றும் இலங்கையைச் சேர்ந்தவைகள் ஆகும். உலகம் முழுவதிலும் இன்று தமிழ் மக்கள் வாழ்கிறார்கள் எனினும், அவர்களில் பெரும்பாலானவர்களுடைய தாயகம் தென்னிந்தியாவேயாகும். இலங்கையிலும் வடக்கு, கிழக்குப் பகுதிகளைத் தாயகமாகக் கொண்டு ஏறத்தாழ 25 லட்சம் தமிழர்கள் வாழ்ந்து வருகிறார்கள். இலங்கையின் மத்திய பகுதியிலும், பிரித்தானியர் ஆட்சிக்காலத்தில் தென்னிந்தியாவிலிருந்து, பெருந்தோட்டப் பயிர்ச் செய்கையில் ஈடுபடுத்துவதற்காக அழைத்துவரப்பட்ட மேலும் பல லட்சம் பேர் உள்ளார்கள். இவர்களை விட இதே காலக்கட்டத்தில், தென்னிந்தியாவிலிருந்தும், இலங்கையின் வடபகுதியிலிருந்தும் குறிப்பிடத்தக்க அளவில் தமிழர்கள், மலாயா (இன்றைய மலேசியா), சிங்கப்பூர் போன்ற நாடுகளிலும் குடியேறினார்கள். பர்மாவிலும், மொரிசியசு, மடகாஸ்கர், தென்னாபிரிக்கா போன்ற ஆபிரிக்க நாடுகள் பலவற்றிலும் தமிழர்கள் குடியேறியுள்ளார்கள். இரண்டாம் உலகப்போருக்குப் பின்னர் தமிழர்கள் பிரித்தானியாவுக்கும் சென்றுள்ளார்கள். அண்மைக்காலங்களில் விசேடமாகப் பெருமளவு இலங்கைத் தமிழர்கள் கனடா, அவுஸ்திரேலியா போன்ற நாடுகளிலும், ஐரோப்பிய நாடுகளான பிரான்ஸ், ஜெர்மனி, சுவிற்சர்லாந்து, டென்மார்க், நோர்வே போன்ற நாடுகளிலும் வாழ்கிறார்கள்.

திருத்தம்

[தொகு]

தமிழ் பேசும் மக்கள் தமிழர் (Tamils,Tamilians) ஆவர். தமிழர்கள் ஏறத்தாழ 2000 ஆண்டுகளுக்கு மேற்பட்ட எழுதப்பட்ட வரலாற்றைக் கொண்ட தென்னாசிய திராவிட இனக்குழுவைச் சேர்ந்தவர்கள். மிகப் பழைய தமிழ்ச் சமுதாயங்கள் தென்னிந்தியா மற்றும் இலங்கையைச் சேர்ந்தவைகள் ஆகும். உலகம் முழுவதிலும் இன்று தமிழர் பரவி வாழ்ந்தாலும் அவர்களது தாயகம் தமிழ்நாடும், தமிழீழமே ஆகும். 1800 களில் பிரித்தானிய காலனித்துவ அரசால் பெருந்தோட்ட பயர்ச் செய்கைக்காக தென்னிந்தியாவிலிருந்தும், இலங்கையின் வடபகுதியிலிருந்தும் குறிப்பிடத்தக்க அளவில் தமிழர்கள் மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் குடியேற்றப்பட்டார்கள். இவ்வாறே பர்மாவிலும், மொரிசியசு, மடகாஸ்கர், தென்னாபிரிக்கா போன்ற ஆபிரிக்க நாடுகள் பலவற்றிலும் தமிழர்கள் குடியேறியுள்ளார்கள். 20 ம் நூற்றாண்டில் தொழில் வாய்ப்புகள் பெற்று மத்திய ஆசிய நாடுகளுக்கு சென்று வசிக்கின்றனர். 1950 களின் பின்னர் தமிழர் தொழில்வல்லுனர்களாக ஐரோப்பிய அமெரிக்க நாடுகளுக்கு புலம்பெயர்ந்தனர். 1983 இலங்கை இனக்கலவரங்களில் பாதிக்கப்பட்டு பெருமளவு ஈழத்தமிழர்கள் அவுஸ்திரேலியா, கனடா, அமெரிக்கா போன்ற நாடுகளிலும், ஐரோப்பிய நாடுகளான பிரித்தானியா, பிரான்ஸ், ஜெர்மனி, சுவிற்சர்லாந்து, டென்மார்க், நோர்வே போன்ற நாடுகளிலும் சென்று வாழ்கிறார்கள்.

--Natkeeran 15:52, 17 ஏப்ரல் 2008 (UTC)

கொடி தேவையா?

[தொகு]

நற்கீரன், கட்டுரையில் திருத்தங்கள் செய்ய வேண்டியுள்லன, ஆனால், இப்பொழுது உடனே என்னால் செய்ய இய்லாமல் இருக்கின்றேன். முக்கியமாக, உலகத்தமிழர் பேரவை பரிந்துரைத்த கொடியை ஏன் அங்கு இட்டுள்ளீர்கள் என்று தெரியவில்லை. தமிழர்கள் யாவருக்குமான ஒரு கொடி இருந்தால் நல்லது என்று பலர் நினைக்கிறார்கள், இல்லை என்று சொல்லவில்லை. ஆனால் பரவலான ஏற்பில்லாத பொழுது அப்படி முத்திரை குத்துவது ஒற்றுமையைவிட வேற்றுமையை வளர்க்கலாம். எனவே, கொடியைப் பற்றி கூறுவதாயின், உள்ளே கட்டுரையில் சிறு குறிப்பு இடலாமே தவிர, இப்படி முதன்மைப்படுத்தி இடுவது சரியென்று தோன்றவில்லை. பிற கருத்துக்களை, விரைவில், இயன்றவுடன் வந்து அளிக்கின்றேன். முதற்பக்க கட்டுரையாக இதனை இட்டுவிடாதீர்கள்!!--செல்வா 19:13, 17 ஏப்ரல் 2008 (UTC)

கருத்துக்களுக்கு நன்றி. உலகத்தமிழர் பேர்வைக் கொடியை நான் முதலில் இங்கு இணைக்க வில்லை என்றே நினைக்றேன். 77 மில்லியன் கொண்ட ஒரு சமூகத்தில் எந்த ஒரு விடயத்திலும் ஒத்துக்கொள்ளாதோர் இருக்கவே செய்வர். யார் யார் எக்காரணங்களுக்காக எதிர்கின்றனர் என்று விபரித்தால் நன்று. இக்கட்டுரையில் எழுத்துப்பிழைகள் உண்டு. சில இடங்களில் சுருக்க வேண்டும். பொருந்தாத கருத்துகளும் இருக்கலாம். இன்னும் சில பகுதிகள் இருக்கின்றன. அவற்றையும் இணைத் பின்பு ஒரு பரந்த விமர்சனத்துக்கு உட்படுத்தாம் என்று இருந்தேன். உங்கள் கருத்துகளை வரவேற்கிறேன்.

--Natkeeran 19:34, 17 ஏப்ரல் 2008 (UTC)

கொடி பயன்படுத்தத் தேவையில்லை. ஒரு குறைந்தபட்ச அறிமுகம் கூட இல்லாத கொடியைக் காட்சிப்படுத்துவது தவறு--ரவி 22:46, 17 ஏப்ரல் 2008 (UTC)


நான் இந்தக் கட்டுரையை மாற்ற முன்னரே இந்தக் கொடி இங்கே இருந்தது. யார் இட்டார் என்று குறிப்பாக தெரியாவில்லை. ஒரு குறைந்தபட்ச் அறிமுகமும் இல்லை என்பதை மறுக்கிறேன். இதன் பின்னால் இருக்கும் அரசியலை சற்று விளக்கினால் நன்று. --Natkeeran 23:28, 17 ஏப்ரல் 2008 (UTC)
இந்தக்கொடி நாம் அப்போதைய ஆங்கில விக்கி கட்டுரையிலிருந்து கவர்ந்து ஒட்டியபோது இங்கு வந்தது. இதை வடக்கன் அங்கு இட்டது ஏனென்றால் சிறப்புக்கட்டுரைகள் ஒரு படிமமாவது கொண்டிருக்க வேண்டும் என்பதால்தான். பின்னர் பல படிமங்கள் இணைத்தபின் இந்த உரையாடலின்பின் இதை இங்கு நகர்த்தினார். -- சுந்தர் \பேச்சு 03:48, 18 ஏப்ரல் 2008 (UTC)

நற்கீரன், உலகத் தமிழர் பேரவை பற்றிய கட்டுரையில் இந்தக் கொடி இடம்பெறுவதே பொருத்தமானது. உலகத் தமிழர் பேரவை என்றால் என்ன, இந்தக் கொடி என்ன என்று 7.7 கோடித் தமிழரில் எத்தனை பேருக்குத் தெரிந்து உளப்பூர்வமாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது? இதை ஒட்டியயே குறைந்தபட்ச அறிமுகம் கூட இல்லாத கொடி என்று சொன்னேன். இந்தக் கொடியை முதன் முதலில் பார்த்ததே விக்கிப்பீடியா கட்டுரையில் தான். இந்தக் கொடிக்குப் பின் உள்ள அரசியல் என்ன என்று எனக்குத் தெரியாது. ஆனால், நிகழ் உலகில் பரவலான அறிமுகம் இல்லாத கொடி போன்ற உணர்வுப்பூர்வமான விசயங்களை இது போன்ற முக்கியமான கட்டுரைகளில் முதன்மைபடுத்துவது தவறு. --ரவி 14:22, 18 ஏப்ரல் 2008 (UTC)

தமிழர் கொண்டாட்டங்கள்

[தொகு]

கட்டுரையில் குறிப்பிட்டுள்ளபடி பொங்கல், தமிழ் ஆண்டுப் பிறப்பு ஆகியவை எல்லா சமயத்தாராலும் பின்பற்றப்படுவதில்லை. தமிழ்நாட்டில் இவை பெருமளவு இந்துக்கள் கொண்டாட்டம் போலே நோக்கப்படுகிறது. --ரவி 19:46, 20 ஏப்ரல் 2008 (UTC)

கட்டுரை ஆசிரியர் கருத்துகள்

[தொகு]

கட்டுரையின் இறுதியில் உள்ள உலகமயமாதலில் தமிழர் பற்றிய வரிகள் கட்டுரை ஆசிரியரின் கருத்துகளைத் தெரிவிப்பது போல் உள்ளது. மாற்றுக் கருத்துக்களையும் தொகுக்காத நிலையில், உசாத்துணைகள் இல்லாத நிலையில் இது போன்ற கட்டுரையாசிரியரின் புரிதல்களைத் தொகுக்கும் வரிகளைத் தவிர்க்கலாம். --ரவி 19:48, 20 ஏப்ரல் 2008 (UTC)

ரவி, விரைவில் தகுந்த ஆதாரங்களை சேக்கிறேன். எனது கருத்துக்கள் சில வரிகளில் தென்படுகிறது என்பது சரிதான். பொருந்த விட்டால் நீக்கி விடுகிறேன். நன்றி. --Natkeeran 18:09, 23 ஏப்ரல் 2008 (UTC)

ஆளுமைகள்

[தொகு]

முதல் தகவற் சட்டத்தில் இருக்கும் ஆளுமைகளில் முத்தையா முரளிதரன், செல்லப்பன் ராமநாதன் ஆகியோர் படங்களையும் இணைக்கலாம்.--ரவி 03:25, 21 ஏப்ரல் 2008 (UTC)

திரைப்படக் கலைஞர்கள், விளையாட்டு வீரர்கள் ஆகியோரின் படங்கள் விக்கியில் அரிதாக கிடைக்கின்றன. அது தான் சற்று கடினமாக இருக்கிறது. நாளடைவில் சேர்க்கலாம். நன்றி. --Natkeeran 18:10, 23 ஏப்ரல் 2008 (UTC)

தமிழறிஞர் படங்கள்

[தொகு]

http://www.thamizham.net/128images.htm --ரவி 10:08, 3 ஜூலை 2008 (UTC)

16 நபர்களின் பெயர் பட்டியல்

[தொகு]

--Natkeeran 01:31, 7 நவம்பர் 2008 (UTC)[பதிலளி]

யோகக்கலை பற்றி திருமந்திரத்தில் கூறப்பட்டுள்ளதா?

[தொகு]

--Natkeeran 17:44, 13 டிசம்பர் 2008 (UTC)

  1. கி. விசாகரூபன். (2004). நாட்டார் வழக்காற்றியல். யாழ்ப்பாணம்: மலர் பதிப்பகாம்.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:தமிழர்/தொகுப்பு02&oldid=3342408" இலிருந்து மீள்விக்கப்பட்டது