உள்ளடக்கத்துக்குச் செல்

பெரிய எலிவால் வௌவால்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பெரிய எலிவால் வௌவால்
The image is a drawing of a bat
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
ரைனோப்போமேட்டிடே
பேரினம்:
ரைனோபாமா
இனம்:
ரை. மைக்ரோபில்லம்
இருசொற் பெயரீடு
ரைனோபாமா மைக்ரோபில்லம்
(புரூன்னிச், 1792)
பெரிய எலி வால் வெளவால் பரம்பல்

பெரிய எலி வால் வௌவால் (Greater mouse-tailed bat-ரைனோபாமா மைக்ரோபில்லம்) என்பது ரைனோபொமாடிடே குடும்பத்தைச் சேர்ந்த ஒரு வௌவால் சிற்றினம் ஆகும்.[2]

பரவலும் வாழிடமும்[தொகு]

இது அல்சீரியா, வங்களாதேசம், புர்க்கினா பாசோ, மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு, சாட், சீபூத்தி, எகிப்து, எரித்திரியா, எத்தியோப்பியா, இந்தியா, இந்தோனேசியா, ஈரான், இஸ்ரேல், ஈராக்கு, ஜோர்தான், லிபியா, மாலி, மூரித்தானியா, மொராக்கோ, மியான்மர், நைஜர், நைஜீரியா, ஓமான், பாக்கித்தான், சவூதி அரேபியா, செனிகல், சூடான், தாய்லாந்து, தூனிசியா, மேற்கு சகாரா மற்றும் ஏமன் ஆகிய நாடுகளில் காணப்படுகிறது. இதன் இயற்கையான வாழிடம் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல வறண்ட புதர் நிலமாகும்.

உயிரியல் மற்றும் சூழலியல்[தொகு]

இலண்டனின் அரச சமூகம் வெளியிட்ட சமீபத்திய ஆய்வின்படி, பெரிய எலி வால் வௌவால்கள் இசுரேலின் பெரும் பிளவுப் பள்ளத்தாக்கில் உள்ள குகைகளில் வழக்கத்திற்கு மாறாக 68 பாகை பாரன்கீட் வெப்பத்தில் குளிர் உறக்கத்தினை மேற்கொள்கின்றன. அக்டோபர் முதல் பிப்ரவரி வரை, இந்த வௌவால்கள் அரை நனவுடன், ஒவ்வொரு 15-30 நிமிடங்களுக்கும் ஒரு முறை மட்டுமே சுவாசிக்கின்றன. இதன் மூலம் இவை மிகக் குறைந்த ஆற்றலைச் செலவிடுகின்றன.[3]

ரைனோபோமா மைக்ரோபில்லம் சிற்றினம் பிரத்தியேகமாகப் பூச்சிகளைச் சாப்பிடுகின்றன.[4] இதன் உணவு குறித்த ஓர் ஆய்வில், இந்த சிற்றினம் முதன்மையாக இனப்பெருக்கக் காலத்திலும் கோடைக் காலத்திலும் இவை கோலியோப்டிரா பூச்சிகளை உண்பது தெரியவந்தது. இருப்பினும் கோடைக்காலத்தில் மிகவும் மாறுபட்ட உணவுப் பழக்கம் காணப்படுகிறது. இவற்றின் பிற இரை வகைகளில் டிப்டெரா, நியூரோப்டெரா மற்றும் கைமெனாப்டிரா ஆகியவை அடங்கும்.[5] இவை வசந்த காலத்தின் தொடக்கத்தில் இணை சேருகின்றன.

மேற்கோள்கள்[தொகு]

  1. Monadjem, A.; Palmeirim, J.; Aulagnier, S. (2017). "Rhinopoma microphyllum". IUCN Red List of Threatened Species 2017: e.T19600A21998943. doi:10.2305/IUCN.UK.2017-2.RLTS.T19600A21998943.en. https://www.iucnredlist.org/species/19600/21998943. பார்த்த நாள்: 17 November 2021. 
  2. Schlitter, Duane A.; Qumsiyeh, Mazin B. (1996). "Rhinopoma microphyllum". Mammalian Species (542): 1–5. doi:10.2307/3504243. https://academic.oup.com/mspecies/article-pdf/doi/10.2307/3504243/8071428/542-1.pdf. 
  3. Eran Levin; Brit Plotnik; Eran Amichai; Luzie J. Braulke; Shmulik Landau; Yoram Yom-Tov; Noga Kronfeld-Schor (April 2015). "Subtropical mouse-tailed bats use geothermally heated caves for winter hibernation". Proceedings of the Royal Society B: Biological Sciences 282 (1804): 20142781. doi:10.1098/rspb.2014.2781. பப்மெட்:25740890. பப்மெட் சென்ட்ரல்:4375864. http://www.sciguru.org/newsitem/18645/bat-species-first-mammal-found-hibernating-constant-warm-temperatures. 
  4. Krause, Jennifer. "Great Mouse-Tailed Rat".
  5. Hemmati, Zeinab; Sharifi, Mozafar. "Variation in the Diet of the Greater Mouse-Tailed Bat, Rhinopoma Microphyllum (Chiroptera: Rhinopomatidae) in South-Western Iran." Taylor & Francis. doi:10.1080/09397140.2002.10637923. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெரிய_எலிவால்_வௌவால்&oldid=3967157" இலிருந்து மீள்விக்கப்பட்டது