பிரானித் தீவு
புலாவ் பிராணி, சிங்கப்பூரின் கேப்பெல் துறைமுகம் அருகே 1.22 சதுர கிலோமீட்டர் நிலப்பரப்பில் அமைந்துள்ள ஒரு தீவாகும். இந்த தீவு சென்தொசா தீவு மற்றும் சிங்கப்பூர் தீவிற்கு நடுவே அமைந்துள்ளது.
சொற்தோற்றம்
[தொகு]மலாய் மொழியில் பிராணி என்றால் வீரமிக்க என்று பொருள். முன்பு இந்த தீவை உயிரிழந்த போர் வீரர்களை புதைக்க பயன்படுத்தியதால், இந்த தீவிற்கு இந்த பெயர் வந்ததாக கூறப்படுகிறது. இங்கு நல்ல தண்ணீர் கிணறு ஒன்று இருந்த தாகவும், அதை மக்கள் குளிப்பதற்காக பயன்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.
துறைமுகம்
[தொகு]ஆதிகாலத்தில் ஒரு மீன்பிடி கிராமமாக இருந்த இந்த இடம் அதன் பின் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் உருமாற தொடங்கியது. அந்த இடம் கப்பல் கட்டும் தளமாக மாறியது . துறைமுகமாகவும், கப்பல்படை தளமாகவும் அது மாறியது .பின்னர் சிங்கபூரின் சுததந்திரத்திர்க்குப் பின்னர் இந்த இடம் ராணுவ தளமாக மாற்றப்பட்டது. 1974 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த கடற்படை தளம் பின்பு 2000 ஆம் ஆண்டு சாங்கி பகுதிக்கு மாற்றப்பட்டது . தற்பொழுது இங்கு சிங்கப்பூர் துறைமுக கழகம் தன் துறைமுக பணிக்கு தேவையான மேம்பாடுகளை சித்து அதை ஒரு கப்பல் போக்குவரத்து மாற்று பொருட்களை கையாளும் துறைமுக நகரமாக மாற்றயுள்ளது .