சனாங்கு தீவு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

புலாவ் செனாங், சிங்கப்பூரின் தெற்கே 13 கிளிமீட்டார் தொலைவில், 81.7 ஹெக்டர் நிலப்பரப்பில் அமைந்துள்ள ஒரு தீவாகும்.

பெயர்க்காரணம்[தொகு]

மலாய் மொழியில் செனாங் என்றால் சுலபம் என்று பொருள்.

வரலாறு[தொகு]

முன்பு இந்த தீவு சிங்கப்பூரில் குற்றவாளிகளை நாடுகடத்தி வைக்க படன்பட்டு வந்தது. 1960, 18 மே அன்று சுமார் 50, கைதிகளுடன் டானியல் தட்டான் என்ற அதிகரி இந்த தீவிற்கு வந்தார். கடின உழைப்பால் கைதிகளை திருத்த முடியும் என்று நம்பிய அவர், மூன்றே வருடங்களில் மேலும் 320 கைதிகளை கொண்டு அந்த தீவில் பல கட்டுமானங்களை எழுப்பினார். கைதிகளிக் மேல் அதீத நம்பிக்கை கொண்ட அதிகாரி அவர்களின் கைவிலங்குகளை அவிழ்த்து விட்டார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்ட கைதிகள் கலவரத்தில் ஈடுபட்டு, பல இடங்களை தீக்கி இறையாகினர். அதிகாரி டானியல், காவலர்களான ஆறுமுகம் வீரசிங்கம் மற்றும் டான் கோக் ஹிஆன், ஆகிய மூன்று பெரும் கொல்லப்பட்டனர்.

இதன்பேரில் நடந்த விசாரணை 64 நாட்கள் நடந்தன. இறுதியில், கொளைகுற்றம் சாற்றப்பட்ட 18 பேர் தூக்கிலடப்பட்டனர்.

தடை செய்யப்பட்ட பகுதி[தொகு]

1980 ஆம் ஆண்டு முதல் இந்த தீவும், அதன் அருகில் உள்ள புலாவ் சுடோங், புலாவ் பவை ஆகிய மூன்றும் சிங்கப்பூர் ராணுவத்தின் பயிற்சி இடமாக உள்ளது. எனவே இந்த இடம் ராணுவம் அல்லாத மற்ற நபர்களுக்கு தடை செய்யப்பட்ட இடமாகும்.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சனாங்கு_தீவு&oldid=2760007" இருந்து மீள்விக்கப்பட்டது