உள்ளடக்கத்துக்குச் செல்

பிரவத் சௌத்ரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிரவத் சௌத்ரி
Pravat Chowdhury
சட்டமன்ற உறுப்பினர், திரிபுராவின் சட்டமன்றம்
பதவியில் உள்ளார்
பதவியில்
24 செப்டம்பர் 2014
முன்னையவர்ஜிதேந்திர சௌத்ரி
தொகுதிமனு
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு28 திசம்பர் 1976 (1976-12-28) (அகவை 47)[1]
சாப்ரூம், தெற்கு திரிப்புரா மாவட்டம்
அரசியல் கட்சிஇந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)
துணைவர்திபாளி திரிபுரா (சௌத்ரி)
பிள்ளைகள்2
பெற்றோர்கிருஷ்ண காந்தா சௌத்ரி (தந்தை)
தனுசிறீ சௌத்ரி (தாயார்)
முன்னாள் கல்லூரிநாகாலாந்து பல்கலைக்கழகம்

பிரவத் சௌத்ரி (Pravat Chowdhury)(பிறப்பு:28 திசம்பர் 1976) என்பவர் ஓர் இந்திய அரசியல்வாதியும் இந்தியப் பொதுவுடமை கட்சியின் (மார்க்சிஸ்ட்) உறுப்பினரும் ஆவார். சௌத்ரி 2014 முதல் தெற்கு திரிபுரா மாவட்டத்தில் உள்ள மனு சட்டமன்றத் தொகுதியின் திரிபுரா சட்டமன்ற உறுப்பினராக உள்ளார்.[2][3][4][5] 2014ஆம் ஆண்டு இந்தத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் சௌத்ரி முதன் முதலில் தேர்ந்தெடுக்கப்பட்டார், முந்தைய பதவியிலிருந்த ஜிதேந்திர சௌத்ரி, 2014இல் வெற்றி பெற்ற பின்னர் திரிபுரா கிழக்கு மக்களவைத் தொகுதியில் மக்களவை உறுப்பினராகப் பதவியேற்கப் பதவி விலகினார். இதன் காரணமாக நடைபெற்ற இடைத்தேர்தலில் பிரவத் சௌத்ரி அமோக வெற்றி பெற்றார். கிட்டத்தட்ட 16,000 வாக்குகள் வித்தியாசத்தில் இவர் வெற்றிபெற்றார்.[6] 2018 திரிபுரா சட்டப் பேரவைத் தேர்தலின் போது சவுத்ரி மீண்டும் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார், ஆனால் இந்த முறை மிகக் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். திரிபுரா பூர்வகுடி மக்கள் முன்னணியின் தனஞ்சோய் திரிபுராவுக்கு எதிராக 193 வாக்குகள் அல்லது 0.48% வாக்குகள் வித்தியாசத்தில் இவர் வெற்றி பெற்றது மாநிலத்தில் மிக நெருக்கமான போட்டியாக இருந்தது.

மேலும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "OATH / AFFIRMATION BY ELEVENTH LEGISLATIVE ASSEMBLY MEMBERS" (PDF). tripuraassembly.nic.in. பார்க்கப்பட்ட நாள் 13 April 2020.
  2. "Manu (ST) Vidhan Sabha Election - Manu (ST) Assembly Election Results, Polling Stations, Voters, Candidates". www.electionsinindia.com. பார்க்கப்பட்ட நாள் 26 April 2020.
  3. "Manu Election Result 2018 Live: Manu Assembly Elections Result Live Update, Vidhan Sabha Election Result & Live News". News18. https://www.news18.com/assembly-elections-2018/tripura/manu-election-result/. பார்த்த நாள்: 26 April 2020. 
  4. "Tripura Assembly Election 2018 Result, Tripura Vidhan Sabha Election 2018 Result". www.elections.in. பார்க்கப்பட்ட நாள் 26 April 2020.
  5. Mishra, Rajeev (16 Sep 2014). "त्रिपुरा उपचुनाव : माकपा उम्मीदवार की रिकॉर्ड मतों से जीत" (in hi). NDTVIndia. https://khabar.ndtv.com/news/india/tripura-cpm-won-by-election-for-manu-assembly-seat-665370. பார்த்த நாள்: 26 April 2020. 
  6. "Pravat Chowdhury of CPI-M wins Tripura seat with record margin". ummid.com. September 16, 2014. https://ummid.com/news/2014/September/16.09.2014/cpi-wins-tripurs.html. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரவத்_சௌத்ரி&oldid=3957900" இலிருந்து மீள்விக்கப்பட்டது