பாதல் சௌத்ரி
பாதல் சவுத்ரி Badal Choudhury বাদল চৌধুরী | |
---|---|
அமைச்சர், திரிபுரா | |
பதவியில் மார்ச்சு 2013 – 9 மார்ச்சு 2018 | |
சட்டப் பேரவை உறுப்பினர், திரிபுரா | |
பதவியில் 1998–2023 | |
முன்னையவர் | திலிப் சவுத்ரி |
பின்னவர் | அசோக் சந்திர மித்ரா |
தொகுதி | கிருஷ்யமுக் |
நாடாளுமன்ற உறுப்பினர்-மக்களவை, இந்திய நாடாளுமன்றம் மேற்கு திரிபுரா | |
பதவியில் 1996–1998 | |
முன்னையவர் | சந்தோசு மோகன் தேவ் |
பின்னவர் | சமர் சவுத்ரி |
தொகுதி | மேற்கு திரிபுரா |
சட்டமன்ற உறுப்பினர், திரிபுரா | |
பதவியில் 1977–1993 | |
முன்னையவர் | சந்திர சேகர் தத்தா |
பின்னவர் | திலிப் சவுத்ரி |
தொகுதி | கிருஷ்யமுக் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 1 நவம்பர் 1951[1] பெலோனியா |
அரசியல் கட்சி | இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) |
துணைவர் | நமிதா கோபி (சவுத்ரி) |
பாதல் சவுத்ரி (Badal Choudhury) ஓர் இந்திய அரசியல்வாதியும் இந்திய பொதுவுடமைக் கட்சியின் (மார்க்சிஸ்ட்) உறுப்பினரும் ஆவார். சவுத்ரி தெற்கு திரிபுரா மாவட்டத்தில் உள்ள கிருஷ்யமுக் தொகுதியிலிருந்து திரிபுரா சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஆவார். இவர் 2013-18-ல் (மாணிக் சர்க்கார் அரசாங்கத்தில்) சுகாதாரம் மற்றும் குடும்ப நலன் மற்றும் வருவாய் மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்தார்.[2][3][4]
அரசியல் வாழ்க்கை
[தொகு]பாதல் சவுத்ரி தனது மாணவப் பருவத்திலேயே மாணவர் இயக்கங்களில் மிகவும் தீவிரமாக இருந்தார். 1968ஆம் ஆண்டு தனது 17வது வயதில் இந்திய பொதுவுடமைக் கட்சியின் (மார்க்சிஸ்ட்) உறுப்பினரானார். 1972 முதல் 1981 வரை சவுத்ரி, பெலோனியா பிரதேசக் குழுவின் செயலாளராக இருந்தார். 1974-ல், இவர் பொதுவுடைமைக் கட்சியில் திரிபுரா மாநிலக் குழு உறுப்பினராகப் பதவி உயர்வு பெற்றார். 1977-ல் திரிபுரா சட்டமன்ற உறுப்பினராக முதல் முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் 1993 வரை இப்பதவியிலிருந்தார். 2008-ல், இந்திய பொதுவுடமைக் கட்சியின் (மார்க்சிஸ்ட்) மத்தியக் குழு உறுப்பினரானார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Oath / Affirmation by Eleventh Legislative Assembly Members" (PDF). tripuraassembly.nic.in. பார்க்கப்பட்ட நாள் 13 April 2020.
- ↑ "Shri Manik Dey". பார்க்கப்பட்ட நாள் 16 February 2017.
- ↑ Railway Minister Suresh Prabhu Flags Off Rail Line In Tripura
- ↑ World Bank sanctions Rs 1,376 cr for Tripura power upgradation