உள்ளடக்கத்துக்குச் செல்

பாக்கித்தான் வெள்ளம், 2022

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாக்கித்தான் வெள்ளம், 2022
செய்ற்கைகோள் புகைப்படம், பாகித்தானின் 27 ஆகத்து 2021 படம் 27 ஆக்த்து 2022 அன்று எடுக்கப்பட்ட படத்துடன் ஓராண்டு ஒப்பீடு
நாள்14 சூன் 2022 – முதல்
அமைவிடம்பலுச்சிசுத்தானம், வடக்கு நிலங்கள், பஞ்சாப் தென்பகுதிகள், சிந்து, காசுமீர், கைபர் பக்துன்வா மாகாணம்
காரணம்கனமழை
இறப்புகள்1,128[1] (as of 29th August deaths are increased to 1,136)[2]
சொத்து சேதம்$10 பில்லியன் அமெரிக்க டாலர் (மதிப்பீடு)[3][4]

பாக்கித்தான் வெள்ளம், 2022 (2022 Pakistan floods) என்பது சூன் 2022 முதல், காலநிலை மாற்றம், இந்திய துணைக்கண்டத்தின் பருவமழை மற்றும் பனிப்பாறைகள் உருகுவதால் பாக்கித்தானில் ஏற்பட்ட வெள்ளத்தினைக் குறிக்கின்றது. இந்த வெள்ளப்பெருக்கில் சுமார் 350 குழந்தைகள் உட்படக் குறைந்தது 1,136 பேர் உயிரிழந்துள்ளனர். ஆகத்து 2022-ல், வெள்ள நிவாரண நடவடிக்கையின் போது உலங்கூர்தி விபத்தில் ஆறு இராணுவ அதிகாரிகள் கொல்லப்பட்டனர். 2017ஆம் ஆண்டு தெற்காசியாவில் ஏற்பட்ட வெள்ளத்திற்குப் பிறகு இது உலகின் மிக மோசமான வெள்ளப் பெருக்காகும்.[1] ஆகத்து 25ஆம் நாளன்று, பாக்கித்தான் அரசு வெள்ளம் காரணமாக அவசர நிலையை அறிவித்தது.[5] தொடர்ச்சியாக இந்தியா மற்றும் ஆப்கானித்தானின் அருகிலுள்ள எல்லைப் பகுதிகளிலும் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.[6][7]

பின்னணி

[தொகு]

2022ல் பாக்கித்தானில் வழக்கத்தை விட அதிக மழை பெய்தது. சிந்து மாகாணத்தில் வழக்கத்தை விட 784% அதிக மழையும், பலூசிஸ்தானில் இயல்பை விட 500% அதிக மழையும் பெய்தது.[8] இக்காலத்தில் இந்தியாவிலும் வங்காளதேசத்திலும் சராசரியை விட அதிகமான பருவ மழைப் பதிவாகியுள்ளது.[9] இந்தியப் பெருங்கடல் உலகின் மிக வேகமாக வெப்பமடையும் பகுதிகளில் ஒன்றாகும். சராசரியாக 1 பாகை செல்சியஸ் வெப்பமடைகிறது (புவி வெப்பமடைதல் சராசரியான 0.7 பாகை செல்சியஸுக்கு மாறாக).[9] கடல் மேற்பரப்பு வெப்பநிலை உயர்வதால் பருவமழை அதிகரிக்கும் என நம்பப்படுகிறது.[10][9] கூடுதலாக, தெற்கு பாக்கிஸ்தானில் மே மற்றும் சூன் மாதங்களில் மீண்டும் மீண்டும் வெப்ப அலைகள் ஏற்பட்டன. இந்த அசாதாரண மாற்றம் காலநிலை மாற்றத்தால் அதிக மழை பெறுவதற்கான வாய்ப்புகளை உருவாக்கியது.[11] இதனால் ஒரு வலுவான வெப்ப தாழ்வு உருவாகியது. இது வழக்கத்தை விடக் கனமழையைக் கொண்டு வந்தது.[10] வெப்ப அலைகள் கில்கிட் பால்டிஸ்தானிலும் பனிப்பாறை உருகியதால் வெள்ளம் ஏற்படக் காரணமாக அமைந்தது.[11]

தாக்கம்

[தொகு]

வெள்ளத்தால் நூற்றுக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர் மற்றும் காயமடைந்தனர். வெள்ளம் காரணமாக 300,000 பேர் இன்னும் தற்காலிக முகாம்களில் (ஆகத்து 2022 வரை) தங்க வைக்கப்பட்டுள்ளனர்.[12] 2010-ம் ஆண்டுக்குப் பிறகு பாக்கித்தானில் ஏற்பட்ட மிக மோசமான வெள்ளம் இதுவாகும். இந்த வெள்ளத்தில் 2,000 பேர் இறந்தனர்.[13] பாக்கித்தான் நிதியமைச்சர் மிப்தா இசுமாயில், இந்த வெள்ளம் பாக்கித்தானுக்கு குறைந்தது 10 பில்லியன் டாலர் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது என்றார்.[4]

மாவட்ட வாரியாக சேதமடைந்த வீடுகள்

கனபருவமழை மற்றும் வெள்ளம் சூன் மாத நடுப்பகுதியிலிருந்து பாக்கித்தானில் 30 மில்லியன் மக்களைப் பாதித்துள்ளது. கிட்டத்தட்ட 218,000 வீடுகளை அழித்துள்ளது. இதனால் சுமார் இரண்டு மில்லியன் மக்கள் பாதிப்படைந்துள்ளனர்.[1][14][15] சிந்து மற்றும் பலூசிஸ்தான் ஆகிய இரண்டு மாகாணங்களில் மனிதர்கள் மற்றும் உள்கட்டமைப்பு பாதிப்பின் அடிப்படையில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளாகும். மில்லியன் கணக்கான கால்நடைகள் இந்த வெள்ளத்தில் கொல்லப்பட்டன.[1] இவற்றில் பெரும்பாலானவை பலூசிஸ்தான் மாகாணத்தில் நிகழ்ந்துள்ளது. மேலும் 3,600 கி.மீ. சாலைகள் மற்றும் 145 பாலங்கள் அழிக்கப்பட்டதால் வெள்ளம் பாதித்த பகுதிகளுக்குச் செல்வதற்கு பெரும் தடையாக உள்ளது.[14] 17,560 பள்ளிகள் சேதமடைந்துள்ளன அல்லது முற்றிலும் அழிக்கப்பட்டன.[14] பலூசிஸ்தான் மாகாண பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் வேண்டுகோளின் பேரில், பலூசிஸ்தானின் 10 மாவட்டங்களில் முன்னுரிமைத் தேவைகள் மற்றும் துறைகளில் உள்ள இடைவெளிகளைக் கண்டறிய பலதரப்பட்ட விரைவான தேவைகள் மதிப்பீடு மேற்கொள்ளப்பட்டது. மனிதாபிமான அடிப்படையில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அரசாங்கத்துடன் இணைந்து மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.


சிந்து

[தொகு]

சிந்து மாகாணத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் 351 பேர் உயிரிழந்துள்ளனர். சுமார் 701 பேர் காயமடைந்துள்ளனர்.[1][16] இறந்தவர்களில் மூன்று குழந்தைகளும் அடங்குவர். இவர்கள் கந்த்கோட்டில் வீட்டின் கூரை இடிந்து விழுந்ததில் உயிரிழந்தனர்.[16] சிந்துவில் 10 மில்லியன் மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். இவர்களின் 57,496 வீடுகள் கடுமையாகச் சேதமடைந்துள்ளன அல்லது முற்றிலும் அழிக்கப்பட்டன. பெரும்பாலும் ஐதராபாத் பிரிவில் 830 கால்நடைகள் கொல்லப்பட்டன.[16] 1.54 மில்லியன் ஏக்கர் விவசாய நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியதால், இப்பகுதியில் பயிரிடப்பட்ட பயிர்கள் வெள்ளப்பெருக்கில் அடித்துச் செல்லப்பட்டன.[14]

லர்கானா மற்றும் சுக்கூர் பிரிவுகள் கனமழையால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. தாரி மிர்வா வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.[17][18]

கராச்சி நகரம் தற்போது ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்படவில்லை என்றாலும் முன்னர் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்டது.[19]

பலுச்சிசுத்தானம்

[தொகு]

பலுச்சிசுத்தானில் ஏற்பட்ட வெள்ளத்தில் 273 பேர் உயிரிழந்தனர்.[1] பல பகுதிகளில் மழைநீர் பல வீடுகளுக்குள் புகுந்து குடியிருக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் பல குடும்பங்கள் இடம்பெயர்ந்தன.[20][21] 426,897 வீடுகள் சேதமடைந்துள்ளன அல்லது முற்றிலும் அழிக்கப்பட்டுள்ளன. மேலும் 304,000 ஏக்கர் பயிர்கள் அழிக்கப்பட்டுள்ளன.[1][14][22] ஒரு மில்லியனுக்கும் அதிகமான கால்நடைகளும் கொல்லப்பட்டுள்ளன.[1]

நிவாரண ஆணையர் மாகாண பேரிடர் மேலாண்மையின்படி, பலுச்சிசுத்தானின் தலைநகர் குவெட்டா மழையின் காரணமாகப் பேரிடர் பாதிப்பு பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த மாகாணத்தில் அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது.[23]

கைபர் பக்துன்க்வா

[தொகு]

சூலையிலிருந்து, மொத்தம் குறைந்தது 235 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 450 பேர் வெள்ளத்தால் காயமடைந்துள்ளனர்.[1] இவர்களில் அப்பர் டிர் மாவட்டத்தில் ஐந்து சிறுவர்கள் பள்ளியிலிருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். இவர்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு வெள்ளத்தில் மூழ்கினர். வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக 326,897 வீடுகள் சேதமடைந்தன. மேலும் 7,742 கால்நடைகள் கொட்டகைகள் இடிந்து இறந்தன.[1] சுவாத் மாவட்டத்தில், அதிகப்படியான வெள்ளம் காரணமாகப் புதிதாகக் கட்டப்பட்ட உணவகம் இடிந்து விழுந்தது.[24] இரண்டு மாதங்களுக்கு முன்னர் அண்டை நாடான ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மாகாணத்தின் தென்மேற்குப் பகுதி முன்பு பாதிக்கப்பட்டது.

கீழ் கோகிசுதான் மாவட்டத்தில் மலைப்பாதையில் சிக்கித் தவித்த 5 பேர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர். இவர்களில் 4 பேர் கொல்லப்பட்டனர்; ஒருவர் மீட்கப்பட்டார்.[25] பாலகோட்டில் குன்ஹார் ஆற்றின் துணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் 8 நாடோடிகள் உயிரிழந்தனர்.[26] மலைப்பாதைகளில் திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாகத் தேரா இஸ்மாயில் கான் மாவட்டத்தின் வெவ்வேறு பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளத்தில் 12 பேர் இறந்தனர். .

கில்கிட்-பால்டிஸ்தான்

[தொகு]
{{{content}}}

சூலை முதல், ஏற்பட்ட வெள்ளத்தினால் சுமார் 19 பேர் கொல்லப்பட்டனர். நான்கு பேர் காணவில்லை. வெள்ளம் காரகோரம் நெடுஞ்சாலையை மோசமாகப் பாதித்தது.[1] நிலச்சரிவு காரணமாக பல இடங்களில் சாலைகள் மூடப்பட்டன.[27][28] கிசார், நகர், டயமர், காஞ்சே மற்றும் அஸ்தோர் மாவட்டங்கள் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட மாவட்டங்களாகும். வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக 420 வீடுகள் அழிந்தும், 740 வீடுகள் சேதமடைந்தும் உள்ளன.[1] இதற்கிடையில், சிந்து ஆற்றில் அதிக நீர் பாய்வதால் எசு-1 மூலோபாய நெடுஞ்சாலையும் மண் அரிப்பைச் சந்தித்தது. இஷ்கோமான் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் குட்காஷில் இஷ்கோமான் பள்ளத்தாக்கு சாலை துண்டிக்கப்பட்டது.[29] காஞ்சே மாவட்டத்தில் உள்ள சோர்பத் என்ற இடத்தில் உள்ள ஒரு பாலமும் வெள்ளத்தில் மூழ்கியது. நகர் மாவட்டத்தில் பள்ளத்தாக்கு சாலைகள் மற்றும் இரண்டு பாலங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன.[30] டயமர் மாவட்டத்தில் உள்ள கானார் மற்றும் போனார் பகுதிகளிலும் சேதம் ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.[31] ஆகத்து 26 நிலவரப்படி, புபெர் பள்ளத்தாக்கு, காகுச் மற்றும் குல்முட்டி ஆகிய கிராமங்களில் பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தால் அழிக்கப்பட்டன. வெள்ளம் பாதித்த பகுதிகளில் வசிக்கும் மக்கள் வெளியேறுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனர். ஆற்றின் நீர்மட்டம் மிகவும் ஆபத்தான உயரத்திற்கு உயர்ந்து வருகிறது.

பஞ்சாப்

[தொகு]

பஞ்சாபில், சமீபத்திய வெள்ளத்தில் மொத்தம் 203 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 233 பேர் காயமடைந்துள்ளனர்.[1][32][33] தவுன்சா ஷெரீப்பில், பல குடியிருப்புகள் வெள்ள நீரில் மூழ்கின. தவுன்சா ஷெரீப்பின் மேற்கில் உள்ள வரலாற்று நகரமான மாங்கடோதவில், நூற்றுக்கணக்கான வீடுகள் மற்றும் கால்நடைகள் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டன.[34] வெள்ளம் சூழ்ந்த ஆறுகளை ஒட்டிய பகுதிகளில் வசிப்பவர்கள் இடம்பெயரத் தொடங்கினர், பெரும்பாலான குடும்பங்கள் இடம் பெயர்ந்தன. சாலைகள், பாலங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதால் பெரும்பாலான குடும்பங்கள் கால்நடையாகவும், ஒட்டகமாகவும் அத்தியாவசியப் பொருட்களுடன் பாதுகாப்பான இடங்களுக்குச் சென்றுள்ளனர்.[35][36]

ஆசாத் காஷ்மீர்

[தொகு]

ஆசாத் காஷ்மீரில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 47 பேர் உயிரிழந்துள்ளனர்.[1][33] சூலை 31 அன்று, பூஞ்ச் மாவட்டத்தில், கூரை இடிந்து விழுந்ததில் பத்து பேர் இறந்தனர். நான்கு பேர் காயமடைந்தனர். ஆகத்து 19 அன்று நீலம் பள்ளத்தாக்கில் ஐந்து சுற்றுலாப் பயணிகள் அடித்துச் செல்லப்பட்டனர். பின்னர் இவர்கள் வெள்ளத்தினால் கொல்லப்பட்டது உறுதி செய்யப்பட்டது.[37] இவர்கள் அனைவரும் மியான்வாலியைச் சேர்ந்தவர்கள்.

நிவாரணம்

[தொகு]
  • ஐக்கிய நாடுகள் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு உதவ ஐக்கிய நாடுகள் சபை தனது மத்திய அவசரக் கால பதில் நிதியத்திலிருந்து (CERF) $3m அமெரிக்க டாலந் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.[38]
  • ஐரோப்பிய ஒன்றியம் ஆகத்து 23 அன்று, மனிதாபிமான உதவிக்காக €350,000 (கிட்டத்தட்ட 76 மில்லியன் PKR) உதவியினை பாக்கித்தானுக்கு உடனடியாக வழங்குவதாக ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்தது.[39]
  • ஐக்கிய அமெரிக்கா ஆகத்து 18 அன்று, அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன், வெள்ளத்தால் ஏற்படும் சவால்களைச் சமாளிக்கப் பாக்கித்தானுக்கு $1 மில்லியன் பேரிடர் உதவியை அறிவித்தார்.[40][41]
  • சீனா ஆகத்து 25 அன்று, சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஒரு அறிக்கையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்தார். 25,000 கூடாரங்கள் மற்றும் நிவாரணப் பொருட்கள் உட்பட அவசர மனிதாபிமான உதவிகள் உடனடியாக அனுப்பப்படுகின்றன என்றும் தெரிவித்தார். இதே நேரத்தில் 4,000 கூடாரங்கள், 50,000 போர்வைகள், 50,000 தார்பாலின்கள் மற்றும் பிற இருப்புக்கள் சீனா-பாகிஸ்தான் பொருளாதார சமூக மற்றும் சமூக நெறிமுறைகளின் கட்டமைப்பின் கீழ் சீனாவால் வழங்கப்பட்டன. சீனாவின் செஞ்சிலுவைச் சங்கம் ஏற்கனவே பாக்கித்தான் செஞ்சிலுவைச் சங்கத்திற்கு 300,000 அமெரிக்க டாலர்களை அவசரக்கால பண உதவியாக வழங்கியுள்ளது.[42][43]
  • ஐக்கிய இராச்சியம் ஆகத்து 27 அன்று, ஐக்கிய இராச்சிய அரசாங்கம் பாக்கித்தானுக்கு £1.5m வெள்ள நிவாரண நிதியை அறிவித்தது.[44][45]
  • அசர்பைஜான் ஆகத்து 27 அன்று, அசர்பைஜான் பாக்கித்தானுக்கு $2 மில்லியன் உதவி வழங்குவதாக அறிவித்தது.[46][47]
  • அயர்லாந்து குடியரசு ஆகத்து 28 அன்று, அயர்லாந்து வெளியுறவு அமைச்சர் சைமன் கோவேனி டுவிட்டர் பதிவு ஒன்றில், பாக்கித்தானுக்கு அயர்லாந்து "அவசர மனிதாபிமான நிதியாக €500,000 ஆரம்ப பங்களிப்பை அளித்துள்ளது" என்று கூறினார்.

பாரிய வெள்ளத்தை அடுத்து நிவாரண நடவடிக்கைக்குத் தலைமை தாங்க முடிவு செய்த பாக்கித்தான் பிரதமர் செபாஷ் செரீப், ஆகத்து 25 அன்று பன்னாட்டஉ நேசத் தலைவர்களைச் சந்தித்தார். இவர்கள் வெள்ளத்தால் ஏற்பட்ட அழிவைத் தணிக்க நாட்டிற்கு 500 மில்லியன் டாலர்களை வழங்குவதாக உறுதியளித்தார்.

இராணுவ உலங்கூர்தி விபத்து

[தொகு]

ஆகத்து 1, 2022 அன்று, பலூசிஸ்தானின் லாஸ்பேலா பகுதியில் வெள்ள நிவாரண நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த பாக்கித்தான் இராணுவ வான்படை உலங்கூர்தி வான் போக்குவரத்துக் கட்டுப்பாட்டுடனான தொடர்பை இழந்தது.[48][49][50] இந்த விபத்தில் படைத்துறை தலைவர் சர்ப்ராஸ் அலி உட்பட XII கார்ப்ஸின் தளபதி உட்பட 6 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.[51] பாக்கித்தானிய அதிகாரிகளின் ஆரம்ப விசாரணைகளின் அறிக்கைகள் மோசமான வானிலையே விபத்துக்குக் காரணம் என்று கூறுகின்றன.[51] அதேசமயம் பலோச் கிளர்ச்சி குடை குழுவான பலோச் ராஜி உலங்கூர்தியினை சுட்டு வீழ்த்தியதாக ஆஜோய் சங்கரின் சரிபார்க்கப்படாத செய்திகள் குறித்து ராய்ட்டர்ஸ் தெரிவித்தது.

மேலும் பார்க்கவும்

[தொகு]
  • பாகிஸ்தானில் வெள்ளப்பெருக்கு பட்டியல்
  • 2022 ஆப்கானிஸ்தான் வெள்ளம்
  • 2022 தெற்காசிய வெள்ளம்

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.00 1.01 1.02 1.03 1.04 1.05 1.06 1.07 1.08 1.09 1.10 1.11 1.12 1.13 "Worst rains and floods; 1128 people dead, more than 4 crore people homeless – Pakistan". hoshyarpakistan. 27 August 2022. Archived from the original on 27 August 2022. பார்க்கப்பட்ட நாள் 27 August 2022.
  2. [[1]]
  3. "Pakistan Flood Death Toll Passes 1,000 in 'Climate Catastrophe'" (in en). Bloomberg.com. 2022-08-29. https://www.bloomberg.com/news/articles/2022-08-29/floods-ravage-pakistan-passing-1-000-dead-10-billion-in-damage. 
  4. 4.0 4.1 Shah, Saeed (28 August 2022). "Pakistan Says It Has Secured Financing Needed for IMF Bailout". Wall Street Journal. https://www.wsj.com/articles/pakistan-says-it-has-secured-financing-needed-for-imf-bailout-11661691679. 
  5. "Pakistan declares emergency in the face of calamitous floods". 26 August 2022. https://www.dawn.com/news/1706862. 
  6. "Northern India: 40 killed in floods and landslides as forecasters warn of more heavy rain to come". Sky News (United Kingdom). 21 August 2022 இம் மூலத்தில் இருந்து 22 August 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220822200558/https://news.sky.com/story/northern-india-40-killed-in-floods-and-landslides-as-forecasters-warn-of-more-heavy-rain-to-come-12678863. 
  7. "Afghanistan floods kill more than 180, Taliban say". Al Jazeera. 25 August 2022 இம் மூலத்தில் இருந்து 29 August 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220829110745/https://www.aljazeera.com/news/2022/8/25/afghanistan-floods-kill-more-than-180-taliban-say. 
  8. "Pakistan floods have affected over 30 million people: climate change minister". 27 August 2022. https://www.reuters.com/world/asia-pacific/pakistan-floods-have-affected-over-30-million-people-climate-change-minister-2022-08-25/. 
  9. 9.0 9.1 9.2 Zoha Tunio (2 August 2022). "After Unprecedented Heatwaves, Monsoon Rains and the Worst Floods in Over a Century Devastate South Asia". Archived from the original on 14 August 2022. பார்க்கப்பட்ட நாள் 27 August 2022.
  10. 10.0 10.1 M Waqar Bhatti. "Climate change blamed for above normal rains in Sindh, Balochistan". https://www.thenews.com.pk/print/983748-climate-change-blamed-for-above-normal-rains-in-sindh-balochistan. 
  11. 11.0 11.1 "Deadly heat wave in India and Pakistan was 30x more likely due to climate change, scientists say". https://www.weforum.org/agenda/2022/06/deadly-heat-wave-in-india-and-pakistan-was-30x-more-likely-due-to-climate-change-scientists-say/. 
  12. "Officials:Floods kill 777 in Pakistan over last 2 months". The Washington Post. 22 August 2022 இம் மூலத்தில் இருந்து 27 August 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220827153908/https://www.washingtonpost.com/world/officials-floods-kill-777-in-pakistan-over-last-2-months/2022/08/22/b6a4f5fc-2228-11ed-a72f-1e7149072fbc_story.html. 
  13. UNDRR. "Human Cost of Disasters – An Overview of the Last 20 Years 2000–2019" (PDF). Archived from the original (PDF) on 28 April 2022.
  14. 14.0 14.1 14.2 14.3 14.4 "Pakistan: 2022 Monsoon Floods – Situation Report No. 03: As of 26 August 2022". ReliefWeb. 26 August 2022. Archived from the original on 26 August 2022. பார்க்கப்பட்ட நாள் 26 August 2022.
  15. "Flood toll tops 800 in Pakistan's 'catastrophe of epic scale'". France 24. 24 August 2022 இம் மூலத்தில் இருந்து 24 August 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220824130719/https://amp.france24.com/en/live-news/20220824-flood-toll-tops-800-in-pakistan-s-catastrophe-of-epic-scale. 
  16. 16.0 16.1 16.2 "Sindh rains: Three children die as roof collapses in Kandhkot". ARY News இம் மூலத்தில் இருந்து 24 August 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220824044423/https://arynews.tv/sindh-rains-three-children-die-as-roof-collapses-in-kandhkot/amp/. 
  17. "Floods Cripple Sindh: PM To Visit Flood-Affected Areas Of Sindh Today". www.ptv.com.pk (in அமெரிக்க ஆங்கிலம்). Archived from the original on 28 August 2022. பார்க்கப்பட்ட நாள் 28 August 2022.
  18. "PM to pay aerial visit to flood-affected areas of Sindh". www.radio.gov.pk (in ஆங்கிலம்). Archived from the original on 28 August 2022. பார்க்கப்பட்ட நாள் 28 August 2022.
  19. "COAS reaches Karachi, oversees rescue, relief op". 26 August 2022.
  20. "Three women killed in Quetta rain-related incidents". The News International. 5 July 2022. Archived from the original on 15 July 2022. பார்க்கப்பட்ட நாள் 28 July 2022.
  21. "Heavy rains flood low-lying areas of Quetta". Dunya News. 4 July 2022. Archived from the original on 15 July 2022. பார்க்கப்பட்ட நாள் 5 August 2022.
  22. "Pakistan floods: 'I lost everything'" (in en-GB). BBC News. 10 August 2022 இம் மூலத்தில் இருந்து 10 August 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220810015229/https://www.bbc.com/news/world-asia-62469448. 
  23. "کوئٹہ آفت زدہ علاقہ قرار، ایمرجنسی نافذ". 5 July 2022. Archived from the original on 15 July 2022. பார்க்கப்பட்ட நாள் 28 July 2022.
  24. "Pakistan: Moment raging floods destroy and wash away iconic hotel in northwestern resort". Sky News. 26 August 2022. Archived from the original on 26 August 2022. பார்க்கப்பட்ட நாள் 26 August 2022.
  25. Khan, Nisar Ahmad (2022-08-28). "'One by one they were swallowed by floodwater'". DAWN.COM (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-08-29.
  26. "Eight dead as floods wreak havoc in Balakot". The Express Tribune. 2022-08-26. பார்க்கப்பட்ட நாள் 2022-08-29.
  27. Nagri, Saleem Shahid | Jamil (7 July 2022). "Floods, post-rain accidents kill 15 in GB, Balochistan". DAWN.COM. Archived from the original on 9 August 2022. பார்க்கப்பட்ட நாள் 18 August 2022.{{cite web}}: CS1 maint: multiple names: authors list (link) CS1 maint: numeric names: authors list (link)
  28. Diameri, Roshan Din. "Four dead, serveral missing as flash floods wreak havoc in Ghizer, GB – SUCH TV". www.suchtv.pk. Archived from the original on 8 August 2022. பார்க்கப்பட்ட நாள் 18 August 2022.
  29. "Threatening glaciers | Special Report | thenews.com.pk". www.thenews.com.pk. Archived from the original on 25 August 2022. பார்க்கப்பட்ட நாள் 27 August 2022.
  30. "Glacial outburst destroys strategic bridge connecting Pakistan with China". Arab News PK. 8 May 2022. Archived from the original on 27 August 2022. பார்க்கப்பட்ட நாள் 27 August 2022.
  31. "Two youths brave gushing flood waters to save minor girls in G-B". The Express Tribune. 30 July 2022. Archived from the original on 7 August 2022. பார்க்கப்பட்ட நாள் 27 August 2022.
  32. Raheela Nazir (25 August 2022). "Pakistan monsoon rains, floods leave over 900 dead, international community urged for prompt assistance". Xinhua News Agency இம் மூலத்தில் இருந்து 25 August 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220825103400/https://english.news.cn/20220825/7f4b682742cb4dfeac7e129c82986fe4/c.html. 
  33. 33.0 33.1 Sana Jamal (23 August 2022). "820 killed in rains in Pakistan, KP declares emergency in flood-hit districts". Gulf News இம் மூலத்தில் இருந்து 25 August 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220825105658/https://gulfnews.com/amp/world/asia/pakistan/820-killed-in-rains-in-pakistan-kp-declares-emergency-in-flood-hit-districts-1.90078759. 
  34. "Taunsa city submerged by floodwater". 18 August 2022. Archived from the original on 20 August 2022. பார்க்கப்பட்ட நாள் 27 August 2022.
  35. "Govt mulls evacuation after flood warning in DG Khan". www.thenews.com.pk. Archived from the original on 18 August 2022. பார்க்கப்பட்ட நாள் 27 August 2022.
  36. Birmani, Tariq Saeed (18 August 2022). "Taunsa city submerged by floodwater". DAWN.COM. Archived from the original on 20 August 2022. பார்க்கப்பட்ட நாள் 27 August 2022.
  37. "Death of five tourists in flash flooding confirmed". 19 August 2022.
  38. "Media Update: United Nations Pakistan, 25 August 2022". United Nations. 26 August 2022. Archived from the original on 25 August 2022. பார்க்கப்பட்ட நாள் 26 August 2022.
  39. "European Union provides €350,000 to assist floods victims in Pakistan | EEAS Website". www.eeas.europa.eu.
  40. "US to give Pakistan aid for 'immediate disaster relief'". The Express Tribune. 18 August 2022. Archived from the original on 18 August 2022. பார்க்கப்பட்ட நாள் 27 August 2022.
  41. "US announces $1mn in flood aid for Pakistan". Pakistan Today. 18 August 2022. Archived from the original on 19 August 2022. பார்க்கப்பட்ட நாள் 27 August 2022.
  42. "China announces aid for flood-ravaged Pakistan". Anadolu Agency. Archived from the original on 26 August 2022. பார்க்கப்பட்ட நாள் 27 August 2022.
  43. "China announces emergency aid for flood victims of Pakistan". The News International. 25 August 2022. Archived from the original on 25 August 2022. பார்க்கப்பட்ட நாள் 27 August 2022.
  44. "UK to donate £1.5 million to flood relief fund". dunyanews.tv. Archived from the original on 27 August 2022. பார்க்கப்பட்ட நாள் 27 August 2022.
  45. "UK assisting Pakistan in flood relief efforts". GOV.UK. Archived from the original on 27 August 2022. பார்க்கப்பட்ட நாள் 27 August 2022.
  46. "Azerbaijan to provide $2 million in aid to Pakistan". Report News Agency (in ஆங்கிலம்). 27 August 2022. Archived from the original on 28 August 2022. பார்க்கப்பட்ட நாள் 28 August 2022.
  47. BERNAMA (28 August 2022). "Azerbaijan offers US$2 million to help Pakistan flood victims". BERNAMA (in ஆங்கிலம்). Archived from the original on 28 August 2022. பார்க்கப்பட்ட நாள் 28 August 2022.
  48. "Pakistan Army Helicopter Carrying Senior General, 5 Others, Missing". VOA. Archived from the original on 12 August 2022. பார்க்கப்பட்ட நாள் 18 August 2022.
  49. "Pakistan Army aviation helicopter goes missing". www.thenews.com.pk. Archived from the original on 18 August 2022. பார்க்கப்பட்ட நாள் 18 August 2022.
  50. "Army copter on flood relief operation goes missing near Lasbela". The Express Tribune. 1 August 2022. Archived from the original on 8 August 2022. பார்க்கப்பட்ட நாள் 18 August 2022.
  51. 51.0 51.1 Siddiqui, Naveed (2 August 2022). "Wreckage of missing Pakistan Army helicopter found, 6 officers, soldiers aboard martyred: ISPR". DAWN.COM (in ஆங்கிலம்). Archived from the original on 2 August 2022. பார்க்கப்பட்ட நாள் 2 August 2022.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாக்கித்தான்_வெள்ளம்,_2022&oldid=3824437" இலிருந்து மீள்விக்கப்பட்டது