சூன் 2022 ஆப்கானித்தான் நிலநடுக்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சூன் 2022 ஆப்கானித்தான் நிலநடுக்கம்
June 2022 Afghanistan earthquake
சூன் 2022 ஆப்கானித்தான் நிலநடுக்கம் is located in ஆப்கானித்தான்
சூன் 2022 ஆப்கானித்தான் நிலநடுக்கம்
சூன் 2022 ஆப்கானித்தான் நிலநடுக்கம் is located in பாக்கித்தான்
சூன் 2022 ஆப்கானித்தான் நிலநடுக்கம்
நிலநடுக்க அளவு6.2 Mw
5.9 Mwb
ஆழம்10.0 km (6.2 mi)
நிலநடுக்க மையம்33°05′31″N 69°30′50″E / 33.092°N 69.514°E / 33.092; 69.514ஆள்கூறுகள்: 33°05′31″N 69°30′50″E / 33.092°N 69.514°E / 33.092; 69.514
வகைசெங்குத்துப் பிளவு
அதிகபட்ச செறிவுVII (Very strong)
உயிரிழப்புகள்1,500 இறப்பு, 2,000 காயம்

சூன் 2022 ஆப்கானித்தான் நிலநடுக்கம் (June 2022 Afghanistan earthquake) ஆப்கானித்தான் நேரப்படி 2022 ஆம் ஆண்டு சூன் மாதம் 22 ஆம் தேதியன்று அதிகாலை 02:24 மணிக்கு ஆப்கானித்தானுக்கும் பாக்கித்தானுக்கும் இடையே உள்ள துராந்து எல்லைக்கோடு பகுதியில் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கத்தின் அளவு 6.2 என பதிவாகியது. இந்நிலநடுக்கம் பத்து கிலோமீட்டர் ஆழத்தில் 5.9 ரிக்டர்கள் அளவில் ஏற்பட்டது என்று அமெரிக்க புவியியல் ஆய்வு மையமும் தெரிவித்துள்ளது. குறைந்தது 1000 பேர் பலியானதாகவும் 1500 பேர் காயம் அடைந்ததாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.[1] இந்தியாவின் சில பகுதிகள், பாக்கித்தானின் தலைநகர் இசுலாமாபாத்து, கிழக்கு பஞ்சாப் மாகாணம் மற்றும் ஈரான்[2][3] போன்ற 500 கிலோமீட்டர் (310 மைல்) தொலைவில் வாழும் குறைந்தது 119 மில்லியன் மக்களால் நிலநடுக்கம் உணரப்பட்டதாக அறியப்படுகிறது.[4]

2022 ஆம் ஆண்டில் ஏற்பட்ட மிக மோசமான நிலநடுக்கமாக இந்நிகழ்வு கருதப்படுகிறது. நூற்றுக்கணக்கான கட்டடங்கள் இடிந்து, 25 எண்ணிக்கைக்கும் மேற்பட்ட கிராமங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. நிலநடுக்கம் அதன் அளவுடன் ஒப்பிடும்போது மிகவும் அழிவுகரமானதாக இருந்தது. நிலச்சரிவுகளுக்கு ஆளாகக்கூடிய அடர்த்தியான மக்கள்தொகை கொண்ட பகுதிக்கு அடியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ஆழமற்ற மையப்பகுதியும் நிலநடுக்கத்தைத் தாங்கும் வகையில் கட்டப்படாத மரம் மற்றும் மண்ணால் செய்யப்பட்ட குறைந்த தரமான கட்டடங்களும் அதிக சேதத்திற்கான காரணங்களாக பார்க்கப்படுகின்றன.[5][6]

பின்னணி[தொகு]

தெற்காசியப் பகுதியின் டெக்டோனிக் தட்டு எனப்படும் புவித்தட்டு எல்லை வரைபடம். ஆப்கானித்தான் இடதுபுறத்தில் அமைந்துள்ளது.

கடந்த பத்தாண்டுகளில் ஆப்கானித்தானில் 7,000 எண்ணிக்கைக்கும் அதிகமான மக்கள் நிலநடுக்கங்களால் இறந்துள்ளனர். சராசரியாக ஓர் ஆண்டிற்கு 560 பேர் இறந்துள்ளனர். வடகிழக்கு ஆப்கானித்தானில் 2015 ஆம் ஆண்டு ஏற்பட்ட ஒரு பெரிய நிலநடுக்கம் அந்நாட்டிலும் அண்டை நாடான பாக்கித்தானிலும் 200 எண்ணிக்கைக்கும் மேற்பட்டவர்களைக் கொன்றது. 2008 ஆம் ஆண்டில் மேற்கு பாக்கித்தானில் ஏற்பட்ட 6.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் 166 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் நிலச்சரிவுகளால் பல கிராமங்கள் அழிந்தன. முன்னதாக 2002 மற்றும் 1998 ஆம் ஆண்டுகளில் ஏற்பட்ட நிலநடுக்கங்களில் முறையே ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மற்றும் சுமார் 4,700 பேர் கொல்லப்பட்டனர்.[7]

மேற்கோள்கள்[தொகு]

  1. "ஆப்கனில் கடும் நிலநடுக்கம்: 1000 பேர் பலி". தினமணி. https://www.dinamani.com/world/2022/jun/23/at-least-1000-killed-in-afghanistan-earthquake-3867417.html. பார்த்த நாள்: 23 June 2022. 
  2. "Earthquake of magnitude 6.1 shakes Afghanistan, Pakistan". Reuters. 22 June 2022. 2022-06-22 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. 2022-06-22 அன்று பார்க்கப்பட்டது.
  3. "At least 1,000 killed after strong earthquake jolts Afghanistan". அல் ஜசீரா. 22 June 2022. https://www.aljazeera.com/news/2022/6/22/dozens-killed-as-6-1-magnitude-quake-shakes-afghanistan-pakistan. 
  4. "Afghanistan rocked by 6.1 magnitude quake leaving 280 dead, according to Taliban officials". ஆஸ்திரேலிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம். 22 June 2022. https://www.abc.net.au/news/2022-06-22/afghanistan-earthquake-kills-dozens/101174820. 
  5. Faizi, Fazel Rahman (22 June 2022). "News agency: 1,000 dead, 1,500 injured in Afghan quake". தி வாசிங்டன் போஸ்ட். https://www.washingtonpost.com/world/afghanistan-earthquake-kills-at-least-155-people/2022/06/22/9c555e1c-f1ea-11ec-ac16-8fbf7194cd78_story.html. 
  6. Dasgupta, Sravasti (22 June 2022). "Afghanistan earthquake: Death toll rises to 950 after major quake hits Paktika province". The Independent. https://www.independent.co.uk/asia/south-asia/afghanistan-earthquake-today-paktika-death-toll-b2106632.html. 
  7. CNN, Masoud Popalzai, Jessie Yeung, Ehsan Popalzai and Tara John (22 June 2022). "More than 1,000 people killed after magnitude 5.9 earthquake hits eastern Afghanistan". CNN. 2022-06-22 அன்று பார்க்கப்பட்டது.

வெளி இணைப்புகள்[தொகு]

ReliefWeb's main page for this event.