உள்ளடக்கத்துக்குச் செல்

பூஞ்ச் மாவட்டம், பாகிஸ்தான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பூஞ்ச் மாவட்டம், பாகிஸ்தான்
மாவட்டம்
பூஞ்ச்
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு செய்த பூஞ்ச் மாவட்டப் பகுதிகளின் வரைபடம்
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு செய்த பூஞ்ச் மாவட்டப் பகுதிகளின் வரைபடம்
நாடுபாகிஸ்தான்
தலைமையிடம்ராவலாகோட்
பரப்பளவு
 • மொத்தம்855 km2 (330 sq mi)
மக்கள்தொகை
 (1998)
 • மொத்தம்4,59,000
 • அடர்த்தி548/km2 (1,420/sq mi)
நேர வலயம்ஒசநே+5 (பாகிஸ்தான் சீர் நேரம்)

பூஞ்ச் மாவட்டம், பாகிஸ்தான், காஷ்மீர் பிரச்சினை விளைவாக நடந்த முதலாம் இந்திய -பாகிஸ்தான் போரின் போது, காஷ்மீர் அரசிடமிருந்து, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு செய்த ஆசாத் காஷ்மீரின் 10 மாவட்டங்களில் ஒன்றாகும். இதன் நிர்வாகத் தலைமையிடம் ராவலாகோட் நகரம் ஆகும். இம்மாவட்டம், இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநில மாவட்டமான பூஞ்ச் மாவட்டதின் ஒரு பகுதியாகும்.[1]

இதன் தலைமையிடமாக ராவலாகோட் உள்ளது. இம்மாவட்டத்தில் சுதன் மற்றும் அவான் இன பழங்குடி இசுலாமிய மக்கள் அதிகம் வாழ்கின்றனர். பூஞ்ச் மாவட்டம் இமயமலையின் பிர் பாஞ்சல் மலைத்தொடரில் அமைந்துள்ளது.

பூஞ்ச் மாவட்டப் பிரிவினை

[தொகு]

ஆங்கிலேயேர்களிடமிருந்து விடுதலையான இந்தியா - பாகிஸ்தான் நாடுகள் நடத்திய 1947 இந்திய பாகிஸ்தான் போரின் விளைவாக ஒன்றிணைந்த பூஞ்ச் மாவட்டம் இரண்டாக பிரிந்தது. பூஞ்ச் மாவட்டத்தின் மேற்கு பகுதி பாகிஸ்தான் கட்டுப்பாட்டிலும், பூஞ்ச் மாவட்டத்தின் கிழக்குப் பகுதி இந்தியாவின் கட்டுப்பாட்டிலும் உள்ளது.

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]