உள்ளடக்கத்துக்குச் செல்

தெற்கு ஆசியாவில் ஏற்பட்ட வெள்ளங்கள் 2017

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தெற்கு ஆசியாவில் ஏற்பட்ட வெள்ளங்கள் 2017
நாள்சூலை–செப்டம்பர் 2017
அமைவிடம்வங்காளதேசம் வங்காளதேசம்
இந்தியா இந்தியா
நேபாளம் நேபாளம்
பாக்கித்தான் பாக்கித்தான்
காரணம்பருவப் பெயர்ச்சிக் காற்று
இறப்புகள்சுமார் 1,300

தெற்கு ஆசியாவில் ஏற்பட்ட வெள்ளங்கள் 2017 (2017 South Asian floods) என்பது, தெற்காசிய நாடுகளான வங்காளதேசம், இந்தியா, நேபாளம் மற்றும் பாக்கித்தான் ஆகிய நாடுகளில் 2017ஆம் ஆணு சூலை முதல் செப்டம்பர் வரை பரவலான பருவமழை பெய்து வெள்ளம் ஏற்பட்டது. ஆகத்து 30 வரை, 410 இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த எண்ணிக்கையானது 3 தினங்களில் 10 சதவிகிதமாக ஆக அதிகரித்துள்ளது.[1] கடந்த இரண்டு தசாப்தங்களில் தெற்காசியாவில் ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக சுமார் 2,000 பேர் வெள்ளம் காரணமாக இறந்துள்ளனர் என்று த நியூயார்க் டைம்ஸ் ஆய்வு மையத்தின் பேரிடர்களின் தொற்றுநோயியல் பேரிடர் தரவுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

2017ஆம் ஆண்டில் குசராத்தில் ஏற்பட்ட வெள்ளப் பகுதிகளில் மீட்பு குழுவினர்[2] மீட்பு பணியில்

பின்னணி[தொகு]

ஒவ்வொரு ஆண்டும் சூன் மற்றும் செப்டம்பர் மாதங்களுக்கு இடையே பருவமழை தெற்காசியாவை தாக்குகிறது. ஆனால் 2017ஆம் ஆண்டு பெயத பருவமழையானது சராசரியை அளவைவிட மிக அதிகமாக இருந்தது.[3] சமீபத்திய ஆண்டுகளில் காணப்படாத அளவில் வெள்ளம் மற்றும் அதனுடன் தொடர்புடைய நிலச்சரிவுகள் இதனால் ஏற்பட்டது. இதனால் ஏற்பட்ட வெள்ளப் பாதிப்புகளை, பல தசாப்தங்களில் ஏற்பட்ட மிக மோசமான தெற்காசிய வெள்ளம் என்று வல்லுநர்கள் அழைத்துள்ளனர். வெள்ளத்தால் சேதமடைந்த விளைநிலங்கள் காரணமாக நீண்ட கால உணவு விநியோகம் கேள்விக்குறியாகியுள்ளது.[4] செப்டம்பர் 2 வரை, 1,288 பேர் வெள்ளத்தால் உயிரிழந்தது உறுதிசெய்யப்பட்டுள்ளது. மேலும் 450 இலட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.[5] 2017 ஆகத்து கடைசி வாரத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2.4 கோடியிலிருந்து இருந்து 4.1 கோடியாக அதிகரித்துள்ளது.[6][7][8] காலநிலை மாற்றம் மற்றும் மேம்பாட்டிற்கான பன்னாட்டு மையம் மற்றும் பிறர் இந்த வெள்ளம் காலநிலை மாற்றத்தால் ஏற்பட்டதாக கவலைத் தெரிவித்துள்ளனர்.[9][10]

பாதிக்கப்பட்ட நாடுகள்[தொகு]

சான்றுகள்[தொகு]

  1. Raj, Suhasini; Gettleman, Jeffrey (September 7, 2017). "They Thought the Monsoons Were Calm. Then Came the Deadly Floods". The New York Times. https://www.nytimes.com/2017/09/07/world/asia/bihar-india-monsoon-floods.html. 
  2. Raj, Suhasini; Gettleman, Jeffrey (7 September 2017). "They Thought the Monsoons Were Calm. Then Came the Deadly Floods". The New York Times. https://WWW.nytimes.com/2017/09/07/world/asia/bihar-india-monsoon-floods.html. 
  3. "South Asia floods: What's happening? – CBBC Newsround". BBC News. 2 September 2017. http://www.bbc.co.uk/newsround/41134580. 
  4. Reuters. "UN: Bangladesh Risks 'Devastating' Hunger after Major Floods" (in en). VOA. https://www.voanews.com/a/bangladesh-devastating-hunger-major-floods-un-says/3998059.html. 
  5. "16 million children affected by massive flooding in South Asia, with millions more at risk". UNICEF. 2 September 2017. பார்க்கப்பட்ட நாள் 4 September 2017.
  6. "Deadly South Asia floods affect 16m people". BBC News. 18 August 2017. https://www.bbc.com/news/world-asia-40975232. 
  7. Gettleman, Jeffrey (29 August 2017). "More Than 1,000 Died in South Asia Floods This Summer". The New York Times. https://www.nytimes.com/2017/08/29/world/asia/floods-south-asia-india-bangladesh-nepal-houston.html. 
  8. Leister, Eric (23 August 2017). "24 million people impacted by monsoon flooding in India, Nepal and Bangladesh". AccuWeather.com இம் மூலத்தில் இருந்து 24 ஆகஸ்ட் 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170824135457/https://www.accuweather.com/en/weather-news/16-million-plus-people-impacted-by-monsoon-flooding-in-india-nepal-and-bangladesh/70002518. 
  9. Ahmed, Farid. "South Asia Struggles to Contain Flood Damage". The Wire (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 24 August 2017.
  10. Watts, Jonathan (31 August 2017). "In an era of dire climate records the US and South Asia floods won't be the last". The Guardian. https://www.theguardian.com/us-news/2017/aug/30/in-an-era-of-unwelcome-climate-records-hurricane-harvey-wont-be-the-last.