பயில்வான் ரங்கநாதன்
பயில்வான் ரங்கநாதன் (Bayilvan Ranganathan, பிறப்பு 19 மார்ச் 1944) என்பவர் ஓர் இந்திய நடிகர்,[1] திரைப்பட விமர்சகராவார். இவர் குறிப்பாகத் தமிழ் திரைப்படங்களில் நகைச்சுவை வேடங்களில் துணை பாத்திரங்களில் நடித்து வருகிறார்.
ரங்கநாதன் தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டம், சிறுதொண்டநல்லூரைச் சேர்ந்தவர். சிறுதொண்டநல்லூரில் உள்ள ஸ்ரீ முத்துமலையம்மன் மேல்நிலைப் பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்த இவர், சாயர்புரத்தில் உள்ள போப் கல்லூரியில் கல்லூரி படிப்பை மேற்கொண்டார். இவர் பளுதூக்குதலில் ஆர்வம் கொண்டவர். நடிகராவதற்கு முன் காவல் துறையில் இணைந்து பணியாற்றும் விருப்பம் கொண்டவராக இருந்தார். இவர் மிஸ்டர் சென்னை பட்டத்தைப் பெற்றார்.[2] இவரது உடல் வாகைப் பார்த்து எம். ஜி. இராமச்சந்திரன் பயில்வான் என்று அழைத்தார். அதுவே இவரது அடைமொழியாக ஆனது. இவர் முந்தானை முடிச்சு படத்தில் வைத்தியர் வேடத்தில் நடித்து நடிகராக அறிமுகமானார். மேலும் இவர் திரைப்படங்கள் பற்றி இதழ்களில் விமர்சனமும் எழுதிவருகிறார்.[3]
தேர்ந்தெடுத்த திரைப்படவியல்[தொகு]
- முந்தானை முடிச்சு (1983) வைத்தியராக
- ஆயுசு நூறு (1987)
- தர்மதுரை (1991)
- ஆவாரம் பூ (1992) பயில்வானாக
- ஊர் மரியாதை (1992) முனியாண்டியாக
- சேவகன் (1992)
- ஜெய்ஹிந்த் (1994) காவல் உயரதிகாரியாக
- ஆணழகன் (1995)
- ஆசை (1995)
- ஜமீன் கோட்டை (1995) பிரகாசாக
- எல்லாமே என் ராசாதான் (1995)
- அவ்வை சண்முகி (1996)
- வேட்டிய மடிச்சு கட்டு (1998)
- புதுமைப்பித்தன் (1998)
- மறுமலர்ச்சி (1998)
- இரத்னா (1998)
- மாயி (2000)
- தெனாலி (2000) காவல் ஆய்வாளராக
- பம்மல் கே. சம்பந்தம் (2002) முதலியார் சங்க உறுப்பினராக
- தமிழன்
- வில்லன் (2002) காவல் ஆய்வாளராக
- பகவதி 2002) போக்குவரத்து காவலராக
- எவனோ ஒருவன் (2007) காவல் ஆய்வாளராக
- அழகான பொண்ணுதான் (2010)
- கருவறைப் பூக்கள் (2011)
- முகம் நீ அகம் நான் (2013)
- சாமி 2 (2018)
- பெஸ்டி[4]
தொலைக்காட்சித் தொடர்[தொகு]
- கிருஷ்ண லீலை
குறிப்புகள்[தொகு]
- ↑ [1]
- ↑ [https://nettv4u.com/celebrity/tamil/supporting-actor/bayilvan-ranganathan nettv4u.com பார்த்த நாள் 2023 மார்ச் 27]
- ↑ சினிமா ஒரு சூதாட்டம் பயில்வான் ரங்கநாதன் காட்டம்!, செவ்வி, தினமலர் 2019 நவம்பர் 19
- ↑ BESTIE Official Trailer - Yashika Aannand | Ashok | Ranga, 2022-06-23 அன்று பார்க்கப்பட்டது