கருவறைப் பூக்கள் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கருவறைப் பூக்கள்
இயக்கம்எஸ். லூர்து சேவியர்
தயாரிப்பு
 • [நிவேதிதா இண்டர்நேஷனல்
இசைதாமஸ் இரத்தினம்
நடிப்பு
 • பல்லவி
 • அசுவதா
 • லிவிங் ஸ்மைல் வித்யா
 • ஹாரிஸ்
 • ஜூலியா இராபர்ட்
ஒளிப்பதிவுவிஜய்
படத்தொகுப்புகீர்த்து மோகன்
வெளியீடுபெப்ரவரி 4, 2011 (2011-02-04)
ஓட்டம்145 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

கருவறைப் பூக்கள் (Karuvarai Pookkal), 2011 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படம். இத் திரைப்படத்தின் கதை உண்மை வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டது. எஸ். லூர்து சேவியரின் இயக்கத்தில் வெளியான இத் திரைப்படத்தில் ஜூலியா இராபர்ட்டும் லிவிங் ஸ்மைல் வித்யாவும் கோபி/கோபிகா என்ற திருநங்கை கதாபத்திரத்திலும், பல்லவி விதவைத் தாயாகவும், அசுவதாவும் ஹாரிசும் சகோதரி மற்றும் சகோதரனாகவும் நடித்துள்ளனர்.[1][2][3]

கதைச் சுருக்கம்[தொகு]

திருநங்கைகள் குறித்த முதல் தமிழ்த் திரைப்படம் கருவறைப் பூக்கள். இந்தியாவில் தமிழ்நாட்டில் வாழும் திருநங்கைகளின் வாழ்க்கை திரைப்படமாக்கப்பட்டுள்ளது. திருநங்கையாக ஒரு குடும்பத்தில் பிறந்த குழந்தை திருநங்கையாக இருந்தால் அக் குழந்தையும் அக்குடும்பமும் சந்திக்கும் பிரச்சனைகளையும் போராட்டங்களையும் மையமாகக் கொண்டுள்ளது.

உண்மையிலேயே திருநங்கைகளான ஜூலியா இராபர்ட் மற்றும் லிவிங் ஸ்மைல் வித்யா இருவரும் இப் படத்தில் வரும் கோபி/கோபிகா என்ற திருநங்கை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.[4]

இத்திரைப்படத்தின் இசை அமைப்பாளர் தாமஸ் இரத்தினம். இவர் தமிழ், ஆங்கிலம், கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் திரைப்படங்கள், தொடர்கள் மற்றும் ஆவணப் படங்களுக்கு இசை அமைத்துள்ளார்.

நடிப்பு[தொகு]

 • லிவிங் ஸ்மைல் வித்யா -கோபிகாவாக
 • ஜூலியா இராபர்ட் -சிறுவயது திருநங்கை கோபியாக
 • பல்லவி -தாயாக
 • ஹாரிஸ் -சகோதரனாக
 • அசுவதா -சகோதரியாக[5]
 • வேறுபல் திருநங்கைகள் -திருநங்கைகளாக

பாடல்கள்[தொகு]

பாடல் பாடகர் பாடலாசிரியர் நேரம் (நிமிடங்கள்)
கிராமத்து மனுஷங்க ஜெயதேவ் 2:50
சோகத்தைச் சொல்லி அழ கல்யாணி லூர்து சேவியர் 4.34
தொறந்து வச்ச புத்தகம் மாலதி குழுவினர் கே. செழியன் 3.56
தொறந்து வச்ச புத்தகம் (2) டாக்டர். வின்சென்ட் த்ரைசே நாதன் குழுவினர் கே.செழியன் 4.26
பாரத தேசம் அபிலாஷ், திவ்யா லூர்து சேவியர் 4.08
பச்சை மரம் அனுராதா ஸ்ரீராம் லூர்து சேவியர் 4.36

மேற்கோள்கள்[தொகு]