நடைபெற்ற நிருவாகி தரத்துக்கான வாக்கெடுப்பில் எனக்கு ஆதரவாக வாக்களித்து உதவியமைக்கு தமிழ் விக்கிபீடியாவின் தூண்களில் ஒருவரான தங்களுக்கு எனது இதயங்கனிந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றேன்! --செந்தி--ஃ உரையாடுக ஃ--02:04, 16 அக்டோபர் 2013 (UTC)Reply
திரு. சிவகோசரன், நிர்வாகி தரத்துக்கான வாக்கெடுப்பில் எனக்கு ஆதரவாக வாக்களித்து உதவியமைக்கு மிக்க நன்றி! தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சிக்கு என்னால் இயன்ற உதவிகளை செய்ய வாக்களிக்கின்றேன் --ஜெயரத்தின மாதரசன்\உரையாடுக03:54, 16 அக்டோபர் 2013 (UTC)Reply
நீங்கள் கடந்த மாதம் 100 தொகுப்புகளுக்கு மேல் பங்களித்துள்ளதற்கு என் மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். தொடர்ந்து இவ்வாறு பங்களித்து தமிழ் விக்கிப்பீடியாவின் முனைப்பான பங்களிப்பாளர் எண்ணிக்கையைக் கூட்ட உதவுமாறு விக்கித்திட்டம் 100 சார்பாக கேட்டுக் கொள்கிறேன். அடுத்து 250 தொகுப்புகளைத் தாண்டும் போது மீண்டும் உங்கள் பேச்சுப் பக்கத்துக்கு வருவேன் :)
குறிப்பு: வெறும் தொகுப்பு / கட்டுரை எண்ணிக்கையைக் கருத்திற் கொண்டு நாம் தமிழ் விக்கிப்பீடியாவின் தரத்தை நோக்குவதில்லை. ஆயினும், முனைப்பான பங்களிப்பாளர்களை இனங்காண உள்ள முக்கிய வழிகளில் தொகுப்பு எண்ணிக்கையும் ஒன்று. எனவே, வழமை போலவே எண்ணிக்கையைக் கருத்தில் கொள்ளாமல் பயன் கருதி மட்டும் பங்களிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி.
நன்றி இரவி, நந்தினி. இந்த மாதம் பெரும்பாலும் 250 தொகுப்புக்களைத் தாண்டுவது உறுதி! மேலும் அடுத்த ஆண்டு ஒவ்வொரு மாதமும் பயனுள்ள 100 தொகுப்புக்களாவது செய்ய முயற்சிப்பேன். --சிவகோசரன் (பேச்சு) 13:39, 3 திசம்பர் 2013 (UTC)Reply
வணக்கம் சிவகோசரன்! நீங்கள் விக்கிப்பீடியா:விக்கித் திட்டம் மருத்துவம்/மொழிபெயர்ப்புச் சிறப்புப் பணிப்பிரிவு திட்டத்தில் இஐந்திருப்பதுடன், அந்தப் பக்க உருவாக்கத்திலும் பங்கெடுத்துள்ளீர்கள். தற்போது ஆங்கில விக்கித்திட்டத்தின் (எமது திட்டப் பக்கத்தில் ஏற்கனவே இணைப்புக்கள் கொடுக்கப்பட்டுள்ளன) மூலமாக தமிழ்விக்கிப் பயனரல்லாதவர்களால் சில கட்டுரைகள் மொழிபெயர்ப்புச் செய்யப்பட்டு வருவதை அறிவீர்கள்தானே. கவனித்திராவிட்டால், பேச்சுப்பக்கத்தில் அது தொடர்பான விபரங்களைப் பார்க்கலாம். மேலும் ஆங்கிலத் திட்டத்தில், இதனை முன்னின்று செயற்படுத்தும், James Heilman, MD யின் பயனர் பேச்சுப் பக்கத்திலும் மேலதிக விபரங்களைப் பார்க்கலாம். நீங்களும் இதில் இணைந்து செயற்படுவீர்கள் என நம்புகின்றேன். தயவு செய்து அறியத் தருவீர்களா?--கலை (பேச்சு) 19:58, 20 சனவரி 2014 (UTC)Reply
வணக்கம் Sivakosaran/தொகுப்பு 3!
தமிழ் விக்கிப்பீடியாவில் சிறப்பாக பங்களித்தமைக்கும், பங்களிக்கின்றமைக்கும் எனது நன்றிகள். தமிழ் விக்கிப்பீடியாவில் ஒரு மாதம் (சனவரி 2015) 100 தொகுப்புக்கள் செய்யும் 100 பயனர்களை உருவாக்கும் இலக்கைக் கொண்ட ஓர் அரிய திட்டம் துவங்கப்பட்டுள்ளது. வரும் சனவரி மாதம் 100 தொகுப்புக்கள் செய்யும் 100 பயனர்களுள் ஒருவராக பிரகாசிக்க தங்களை அன்புடன் அழைக்கிறேன். இலக்கை அடைபவர்களுக்கு பதக்கங்களும், முதல் நாளில் இலக்கை அடைபவர்களுக்கு சிறப்புப் பதக்கங்களும் வழங்கப்படும். :) :) . மேலதிக விபரங்களுக்கு திட்டப்பக்கம் வருக. நன்றி.
திட்டம் நிறைவேற இன்னும் 48 மணி நேரங்களுக்குக் குறைவாகவே உள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு தொகுப்புகளைச் செய்து இலக்குக் கோட்டை அடைய வாழ்த்துகள் :) --இரவி (பேச்சு) 01:47, 30 சனவரி 2015 (UTC)Reply
நன்றிங்க. இங்கு பாருங்கள். கொசுறையும் சேர்த்து இன்னும் ஒரு 15 தொகுப்புகள் செய்தால் இலக்கு தொட்டு விடும் தொலைவு தான் :) இலக்குக் காலம் முடிய 10 மணி நேரங்களுக்குக் குறைவாகவே உள்ளது :)--இரவி (பேச்சு) 13:21, 31 சனவரி 2015 (UTC)Reply
ஜா-எல கட்டுரையை விக்கித் தரவில் புதிய தரவாக இணைத்திருக்கிறீர்கள். ஆனால் அது ஆங்கில விக்கி கட்டுரைக்கு இணைக்கப்படவில்லை. ஆங்கில விக்கியில் கட்டுரை ஏற்கனவே இருந்தால், அக்கட்டுரை இணைக்கப்படுள்ள விக்கித்தரவு எண்ணுக்கே தமிழ்க் கட்டுரையும் இணைக்கப்பட வேண்டும். விக்கித் தரவில் திருத்தியுள்ளேன்.--Kanags\உரையாடுக04:07, 19 சூலை 2015 (UTC)Reply
ஜா-எல கட்டுரையில், இடப்பக்கத்தில் உள்ள சுட்டுகளில் Add links என்பதைச் சொடுக்குங்கள். அடுத்துவரும் பெட்டியில் Language என்பதில் "EN" எனவும் Page என்பதில் Ja-Ela என்பதை உள்ளிட்டு, "Link with page" என்பதை அழுத்தவும்.--Kanags\உரையாடுக05:34, 19 சூலை 2015 (UTC)Reply