தானிஷ் கனேரியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
தானிஷ் கனேரியா
Danish Kaneria 2.jpg
பாக்கித்தானின் கொடி பாக்கித்தான்
இவரைப் பற்றி
முழுப்பெயர் தனேஸ் பிரபா சங்கர் கனேரியா
பிறப்பு 16 திசம்பர் 1980 (1980-12-16) (அகவை 37)
கராச்சி, பாக்கித்தான்]]
உயரம் 6 ft 1 in (1.85 m)
துடுப்பாட்ட நடை வலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடை சுழல் பந்துவீச்சு
அனைத்துலகத் தரவுகள்
முதற்தேர்வு (cap 163) நவம்பர் 29, 2000: எ இங்கிலாந்து
கடைசித் தேர்வு சனவரி 3, 2010: எ ஆத்திரேலியா
முதல் ஒருநாள் போட்டி (cap 140) அக்டோபர் 31, 2001: எ சிம்பாப்வே
கடைசி ஒருநாள் போட்டி மார்ச்சு 21, 2007:  எ சிம்பாப்வே
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
தேர்வு ஒ.நா முதல்தர ஏ-தர
ஆட்டங்கள் 61 18 177 147
ஓட்டங்கள் 360 12 1,484 347
துடுப்பாட்ட சராசரி 7.05 6.00 10.62 9.91
100கள்/50கள் 0/0 0/0 0/1 0/1
அதிக ஓட்டங்கள் 29 6* 65 64
பந்து வீச்சுகள் 17,697 854 47,381 7,330
இலக்குகள் 261 15 880 227
பந்துவீச்சு சராசரி 34.79 45.53 25.98 22.85
சுற்றில் 5 இலக்குகள் 15 0 61 7
ஆட்டத்தில் 10 இலக்குகள் 2 n/a 10 0
சிறந்த பந்துவீச்சு 7/77 3/31 8/59 6/33
பிடிகள்/ஸ்டம்புகள் 18/– 2/– 59/– 28/–

சூலை 24, 2010 தரவுப்படி மூலம்: கிரிக்இன்ஃபோ

தானிஷ் பிரபா சங்கர் கனேரியா (Danish Prabha Shanker Kaneria, உருது: دانش پربھا شنکر کنیریا, ஹிந்தி: दिनेश प्रभा शंकर कनेरिया, பிறப்பு: டிசம்பர் 16 1980), ஒரு முன்னாள் பாக்கித்தானியத் துடுப்பாட்டக்காரர். இவர் பாக்கித்தன் அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார்.[1] 2000 இலிருந்து 2010 வரை பாக்கித்தான் அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் விளையாடியுள்ளார். இவர் பாக்கித்தான் கராச்சியைச் சேர்ந்தவர். வலது கை புறத்திருப்ப பந்து வீச்சாளரான இவர் சிறப்பாக கூக்ளி விசுவதன் மூலமாக பரவலாக அறியப்பட்டார். அதிக இலக்குகள் வீழ்த்திய பாக்கித்தானிய தரவரிசையில் இவர் நான்காவது இடத்தில் உள்ளார்.முதல் மூன்று இடங்களில் விரைவு வீச்சாளர்களான வசீம் அக்ரம், வக்கார் யூனிசு மற்றும் இம்ரான் கான் ஆகியோர் உள்ளனர். [2]பாக்கித்தான் அணிக்காக விளையாடிய இரண்டாவது இந்து சமயத்தைச் சேர்ந்தவர் ஆவார். இதற்கு முன் அனில் தல்பத் பாக்கித்தான் அணிக்காக விளையாடியுள்ளார்.[3][4]

இவர் பாக்கித்தான் அணிக்காக 61 தேர்வுத் துடுப்பாட்டங்களில் விளையாடி 261 இலக்குகளைக் கைப்பற்றியுள்ளார்.இவரின் பந்துவீச்சு சராசரி 34.79 ஆகும். மேலும் 18 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடி 15 இலக்குகளைக் கைப்பற்றினார். இவரின் சரசரி 45 ஆகும். வங்காளதேசத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியின் முதல் ஆட்டப்பகுதியில் 77 ஓட்டங்கள் கொடுத்து 7 இலக்குகளைக் கைப்பற்றினார். பின் மற்றொரு போட்டியில் 94 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 12 இலக்குகளைக் கைபப்ற்றினார். இதுவே இவரின் சிறந்த பந்துவீச்சாக உள்ளது. இவர் தேர்வுப் போட்டிகளில் 15 முறை 5 இலக்குகளைக் கைப்பற்றியுளார். இவர் வங்காளதேசத் துடுப்பாட்ட அணி மற்றும் இலங்கைத் துடுப்பாட்ட அணிக்கு எதிராக ஒரே போட்டியில் 10 இலக்குகளைக் கைப்பற்றியுள்ளார். 2003 ஆம் ஆண்டில் நியூசிலாந்து துடுப்பாட்ட அணிக்கு எதிரான ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் 34 ஓவர்களை விட்டுக்கொடுத்து 3 இலக்குகளைக் கைப்பற்றினார். இதுவே இவரின் சிறந்த பந்துவீச்சாக உள்ளது. 2004 மற்றும் 2010 ஆம் ஆண்டுகளில் எச்செக்ஸ் அணிக்காக இங்கிலாந்து மாகாணத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடினார்.[5]

தேர்வுப் போட்டிகள்[தொகு]

2000 ஆம் ஆண்டில் இங்கிலாந்துத் துடுப்பாட்ட அணி பாக்கித்தானில் சுற்றுப்பயணம் செய்து விளையாடியது . டிசம்பர் 3, இல் பைசலாபாத்தில் நடைபெற்ற இங்கிலாந்துத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான இரண்டவது தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் அறிமுகமானார்.[6] இந்தப் போட்டியின் முதல் ஆட்டப் பகுதியில் 8 பந்துகளில் 8 ஓட்டங்களை எடுத்தார். பின் பந்துவீச்சில் 34 ஓவர்கள் வீசி 9 ஓவரை மெய்டனாக வீசி 89 ஓட்டங்களை விட்டுக் கொடுத்தார். இதில் 2 இலகுகளைக் கைப்பற்றினார். பின் இரண்டாவது ஆட்டப் பகுதியில் பந்துவீச்சில் 7 ஓவர்கள் வீசி 30 ஓட்டங்களை விட்டுக் கொடுத்தார். ஆனால் இலக்கினைக் கைப்பற்றவில்லை.இந்தப் போட்டி சமனில் முடிந்தது.

இறுதிப் போட்டி[தொகு]

2010 ஆம் ஆண்டில் பாக்கித்தான் துடுப்பாட்ட அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடியது .சூலை 29, நாட்டின்ஹாமில் நடைபெற்ற இங்கிலாந்துத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் இறுதியாக விளையாடினார்[7]. இந்தப் போட்டியின் முதல் ஆட்டப் பகுதியில் 21 ஓவர்கள் வீசி 100 ஓட்டங்களை விட்டுக்கொடுத்தார். ஆனால் இலக்கினைக் கைப்பற்றவில்லை. இரண்டாவது ஆட்டப்பகுதியில்20 பந்துகளில் 7 ஓட்டங்கள் எடுத்தார். பின் பந்துவீச்சில் 12 ஓவர்கள் வீசி 71 ஓட்டங்களை எடுத்தார். 1 இலக்கினைக் கைப்பற்றினார்.[8]

சான்றுகள்[தொகு]

  1. Danish Kaneria, http://www.espncricinfo.com/ci/content/player/40043.html, பார்த்த நாள்: 2018-05-27 
  2. "Pakistan / Records / Test matches / Most wickets". ESPNcricinfo. பார்த்த நாள் 11 July 2013.
  3. "No country for Pakistan Hindus: On 66th Independence Day, Mail Today gives a ground report on those stuck in No Man's Land".
  4. Varma, Devarchit (27 March 2014). "7 Non-Muslim cricketers who played for Pakistan".
  5. Danish Kaneria, http://www.espncricinfo.com/ci/content/player/40043.html, பார்த்த நாள்: 2018-05-27 
  6. Danish Kaneria, http://www.espncricinfo.com/ci/content/player/40043.html, பார்த்த நாள்: 2018-05-27 
  7. Danish Kaneria, http://www.espncricinfo.com/ci/content/player/40043.html, பார்த்த நாள்: 2018-05-27 
  8. Danish Kaneria, http://www.espncricinfo.com/ci/content/player/40043.html, பார்த்த நாள்: 2018-05-27 

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தானிஷ்_கனேரியா&oldid=2531531" இருந்து மீள்விக்கப்பட்டது