உள்ளடக்கத்துக்குச் செல்

தாகூர் குடும்பம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாகூர் குடும்ப மரம்
கோபிநாதபூர்
பஞ்சனம்  · சுகதேவ்
ஜெயராம்
பாதுரியகட்டா
தர்பநாராயணன்
கோபி மோகன்
ஹரகுமார்  · சந்திரகுமார்  · பிரசன்ன குமார்
ஞானேந்திரமோகன்
ஜதிந்திரமோகன்  · சௌரிந்திர மோகன்
சௌரிந்திர மோகன்
ஜோரோசங்கா
நில்மோனி
இராமலோசன்  · இராம்மணி  · இராம்பல்லாவ்
துவாரகநாத்  · இராம்நாத்
தேபேந்திரநாத்  · கிரிந்திரநாத்  · நாகேந்திரநாத்
தேபேந்திரநாத்தின் குடும்பம்
தலைமுறை 1
திவிஜேந்திரநாத்  · சத்யேந்திரநாத்
ஹேமேந்திரநாத்  · பபிரேந்திரநாத்
ஜோதிரிந்திரநாத்  · சோமேந்திரநாத்
இரவீந்திரநாத்  · சௌதாமிணி
சுகுமாரி  · சரத்குமாரி
சுவர்ணகுமாரி  · பர்ணகுமாரி
தலைமுறை 2
துவிஜேந்திரநாத்தின் குழந்தைகள்
துவிஜேந்திரநாத்  · அருணேந்திரநாத்
நித்தேந்திரநாத்  · சுதீந்திரநாத்
கிருதேந்திரநாத்
சத்யேந்திரநாத்தின் குழந்தைகள்
சுரேந்திரநாத்  · இந்திரா  · கபிந்திரநாத்
ஹேமேந்திரநாத்தின் குழந்தைகள்
ஹித்தேந்திரநாத்  · சிக்சிதிந்திரநாத்
ரித்தேந்திரநாத்  · பிரதிபா
பிரக்னா ·அபி  · மணிசா
சோவனா  · சுஷ்மா
சுன்ரிதா  · சுதக்சணா
பூர்ணிமா தேவி  
பைரேந்திரநாத்தின் மகன்
பாலேந்திரநாத்
இரவீந்திரநாத்தின் குழந்தைகள்
இரதிந்திரநாத்  · சமிந்திரநாத்
மாதுரிலதா  · ரேணுகா
மீரா
கிரிந்திரநாத்தின் குடும்பம்
தலைமுறை 1
கனேந்திரநாத்  · குனேந்திரநாத்
தலைமுறைn 2
குனேந்திரநாத்தின் குழந்தைகள்
ககனேந்திரநாத்  · சமரேந்திரநாத்
அபனிந்திரநாத்  · சுனயானி
பினயானி

தாகூர் குடும்பம் (Tagore family) ( தாக்கூர் என்றும் உச்சரிக்கப்படுகிறது) [1][2] என்பது முந்நூறு ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றைக் கொண்டது.[3] இது, இந்தியாவின் கொல்கத்தாவின் முன்னணி குடும்பங்களில் ஒன்றாகும். இது வங்காள மறுமலர்ச்சியின் போது ஒரு முக்கிய செல்வாக்கான குடும்பமாகக் கருதப்பட்டது. வணிக, சமூக மற்றும் மத சீர்திருத்தம், இலக்கியம், கலை மற்றும் இசை ஆகிய துறைகளில் கணிசமான பங்களிப்பை வழங்கிய பல நபர்களை இந்த குடும்பம் உருவாக்கியுள்ளது.[4]

குடும்ப வரலாறு

[தொகு]

தாகூர்களின் அசல் குடும்பப்பெயர் குசாரி. அவர்கள் இரார்கி பிராமணக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். மேலும் முதலில் மேற்கு வங்கத்தில் வர்தமான் மாவட்டத்தில் குச் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். இரவீந்திரநாத் தாகூரின் வாழ்க்கை வரலாற்றை எழுதிய, பிரபாத் குமார் முகோபாத்தியாயா இரவீந்திராஜிபானி ஓ ரவீந்திர சாகித்ய பிரபேஷிகா என்ற தனது புத்தகத்தில் எழுதினார்: குசாரிகள் பட்டா நாராயணனின் மகன் தீன் குசாரியின் வழித்தோன்றல்கள்; தீன் குசாரிக்கு குசாவின் மகாராஜாவின் மூலம் (வர்த்தமான்) குச் என்ற கிராமத்தில் நிலம் வழங்கப்பட்டது. அவர் அதன் தலைவரானார். மேலும், குசாரி என்றும் அறியப்பட்டார்.[5]

தாகூர்களின் பின்னணி

[தொகு]

வங்காளப் பிராமணர்களான தாகூர்கள் [6] வங்காளத்தின் கிழக்குப் பகுதியிலிருந்து (இப்போதைய வங்காள தேசம் ) வந்து குடியேறியவர்கள் ஆவர். 18 ஆம் நூற்றாண்டில் ஹூக்லி ஆற்றின் வலது கரையில் அமைந்துள்ள பகுதியில் குடியேறினர் (பஞ்சனன் குசாரி என்பவர், 1720 ஆம் ஆண்டில் கோபிந்தபூர் பகுதியில் வில்லியம் கோட்டைக்கு அருகில் முதன்முதலில் குடியேறினார். பின்னர் பிரிட்டிசாரால் வெளியேற்றப்பட்ட பின்னர், சுதானூட்டிக்கு தெற்கே ஜோராசங்கோ பகுதிக்கு நகர்ந்தார்).

16 ஆம் நூற்றாண்டில் ஐரோப்பியர்கள் வங்காளத்திற்கு வரத் தொடங்கினர். இதன் விளைவாக 1579 இல் போர்த்துகீசியர்களால் உகுலிம் ( கூக்ளி-சின்சுரா) என்ற நகரம் நிறுவப்பட்டது.[7] 1757 இல் நடந்த பிளாசி சண்டையின் விளைவாக வங்காளத்தின் கடைசி நவாப் பதவி நீக்கம் செய்யப்பட்டார். பக்சார் போருக்குப் பிறகு, கிழக்கிந்திய நிறுவனத்திற்கு வங்காளத்திலிருந்து வருவாய் வசூலிக்கும் உரிமை வழங்கப்பட்டது. 1793 வாக்கில்,பிரிட்டிசு கிழக்கிந்திய நிறுவனம் நவாப்பின் அலுவலகத்தை அழித்து, முன்னாள் முகலாய மாகாணமான வங்காளத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்றியது.

19 ஆம் நூற்றாண்டின் வங்காள மறுமலர்ச்சி சமூக மாற்றத்தின் குறிப்பிடத்தக்க காலகட்டமாகும். இதில் இலக்கிய, கலாச்சார, சமூக மற்றும் பொருளாதார - படைப்பு நடவடிக்கைகள் முழுவதுமாக வளர்ந்தன.[8] வங்காள மறுமலர்ச்சி என்பது அலாவுதீன் உசேன் ஷா (1493-1519) என்பவரது காலத்தில் தொடங்கிய வங்காள மக்களின் கலாச்சார பண்புகள் வெளிப்படும் செயல்முறையின் உச்சக்கட்டமாகும்.[9] இது சுமார் மூன்று நூற்றாண்டுகளை உள்ளடக்கியது. இது வங்காள சமுதாயத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. தற்செயலாக, அது தாகூர் குடும்பத்தின் எழுச்சியுடன் ஒத்துப்போனது. தாகூர் குடும்பம் இந்த காலகட்டத்தில் இந்திய மற்றும் ஐரோப்பிய தாக்கங்களுக்கு இடையிலான அசாதாரண சமூக நிலைப்பாட்டின் மூலம் முக்கியத்துவம் பெற்றது.

வங்காள பத்திரிக்கையாசிரியர் சித்ரா தேவியின் மேற்கோளின்படி,[10] "தாகூர்களின் கலாச்சாரப் பாத்திரம் இதுவரை மிகப் பெரிய கவனத்தைப் பெற்றிருந்தாலும், இறுதி மதிப்பீட்டில் அவற்றின் முக்கியத்துவம் ஒரு கலவையாகும்: வணிக மற்றும் அரசியல் மற்றும் இலக்கிய மற்றும் இசை. அவர்களின் காலத்தின் ஒவ்வொரு தேசபக்தி இயக்கத்திலும் அவர்கள் ஒரு கூட்டுப் பங்கைக் கொண்டிருந்தனர்: நவகோபால் மித்ராவின் இந்து மேளா, காங்கிரசு மற்றும் தேசிய மாநாடு, 1905 ராக்கி விழா மற்றும் பொதுவாக தேசியவாத இயக்கம். கொல்கத்தா, வங்காளம் மற்றும் இந்தியாவின் கதையிலிருந்து தாகூர்களின் கதை பிரிக்க முடியாதது.

பாதுரியகட்டா குடும்பம்

[தொகு]

கோபிமோகன் தாகூர் (1760-1819) தனது செல்வத்திற்காக நன்கு அறியப்பட்டவர். மேலும் 1812 ஆம் ஆண்டில், காளிகாட்டில் உள்ள காளிக் கோயிலுக்கு பரிசாக மிகப் பெரிய தங்கத்தினை பரிசாக வழங்கியிருக்கலாம்.[11] நாட்டில் மேற்கத்திய கல்வியைத் தொடங்கிய இந்துக் கல்லூரியின் நிறுவனர்களில் ஒருவராக இருந்தார். இவர் ஆங்கிலத்தில் சரளமாகவும், வங்காளத்தைத் தவிர பிரெஞ்சு, போர்த்துகீசியம், சமஸ்கிருதம், பாரசீக மற்றும் உருது மொழியிலும் பரிச்சயமானவராக இருந்தார்.[12]

கோபிமோகன் தாகூரின் மகனான பிரசன்ன குமார் தாகூர், (1801–1868) நில உரிமையாளர்களின் சங்கத்தின் தலைவர்களில் ஒருவராகவும் பின்னர் பிரிட்டிசு இந்திய சங்கத்தின் தலைவராகவும் இருந்தார். இது நாட்டில் இந்தியர்களின் ஆரம்பகால அமைப்புகளாகும். இவர் அரசாங்க வழக்கறிஞராக தனது பணிகளைத் தொடங்கினார். ஆனால் பின்னர் குடும்ப விஷயங்களில் தனது கவனத்தைத் திருப்பினார். இந்துக் கல்லூரியின் இயக்குநராக இருந்ததைத் தவிர, பல நிறுவனங்களின் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டார். இவர் செய்த நன்கொடைகளின் மூலம் கொல்கத்தா பல்கலைக்கழகத்தால் தாகூர் சட்ட விரிவுரைகள் இன்றளவும் ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றன. இவர் முதல் உள்ளூர் நாடக அரங்கத்தைத் தவிர - இந்து நாடக அரங்கத்தை நிறுவியவராவார்.[13] தலைமை ஆளுநரின் சட்டமன்ற சபைக்கு நியமிக்கப்பட்ட முதல் இந்தியராவார்.[14]

பிரசன்னகுமார் தாகூரின் மகன் ஞானேந்திரமோகன் தாகூர் (1826-1890) கிறிஸ்தவ மதத்திற்கு மாறி, கிருட்டிண மோகன் பானர்ஜியின் மகள் கமலமணி என்பவரை மணந்தார். இதனால் அவரது தந்தையால் சொத்துரிமை மறுக்கப்பட்டார். பின்னர், இவர் இங்கிலாந்து சென்று லிங்கன் விடுதியில் இருந்து சட்டம் படித்தார். மேலும் ஒரு வழக்கறிஞராகத் தகுதி பெற்ற முதல் இந்தியரானார். பின்னர் சிறிது காலம், இலண்டன் பல்கலைக்கழகத்தில் இந்து சட்டத்தையும் வங்காள மொழியையும் கற்பித்தார்.[15]

ஜதிந்திரமோகன் தாகூர், ஹரகுமார் தாகூரின் மகனான இவர் (1831-1908), பாதூரியகட்டா கிளையின் செல்வத்தை வாரிசுரிமையாகப் பெற்றார். கொல்கத்தாவில் நாடக வளர்ச்சிக்கு இவர் கணிசமான பங்களிப்பை வழங்கினார். மேலும் இவர் ஒரு தீவிர நடிகராகவும் இருந்தார். இவர் மைக்கேல் மதுசூதன் தத்தாவை திலோத்தமசம்பவ காவ்யம் என்பதை எழுத தூண்டினார். மேலும் அதை தனது சொந்த செலவில் வெளியிட்டார். 1865 ஆம் ஆண்டில், பாதுரியகட்டாவில் வஙக நாட்டியாலயத்தை நிறுவினார். இவர் இசையின் தீவிர புரவலராகவும், இசைக்கலைஞர்களை தீவிரமாக ஆதரித்தவராகவும் இருந்தார். அவர்களில் ஒருவரான சேத்ரமோகன் கோசுவாமி, இந்த நாட்டில் முதல்முறையாக குழு இசை என்ற வடிவத்தை இந்திய இசையில் அறிமுகப்படுத்தினார். இவர் பிரிட்டிசு இந்தியச் சங்கத்தின் தலைவராக இருந்தார். மேலும் அரச புகைப்படக் கலைஞர்கள் சங்கத்தில் உறுப்பினராக இருந்த முதல் இந்தியராவார்.[16]

இராமநாத் தாகூர் (1801-1877) மற்றும் ஜதிந்திரமோகன் ஆகியோர் ஐரோப்பிய கலையின் முக்கிய புரவலர்களாக இருந்தனர். அவர்களின் அரண்மனை வீடான, பாதூரியகட்டாத்தாவில் உள்ள தாகூர் கோட்டை [17] ஐரோப்பிய ஓவியங்களின் முக்கிய தொகுப்பைக் கொண்டிருந்தது. அரச அகாடமியில் படித்த முதல் இந்தியர்களில் சவுதிந்திரமோகன் தாகூரும் (1865-98) ஒருவராவார்.[18]

சர் சௌரிந்திர மோகன் தாகூர் (1840-1914), ஹரகுமார் தாகூரின் மகனாவார்.[19][20] 1875ஆம் ஆண்டில் பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தால் இசையில் முனைவர் பட்டமும் மற்றும் 1896 இல் ஆக்சுபோர்டு பல்கலைக்கழகத்தால் கௌரவமும் பெற்ற ஒரு சிறந்த இசைக்கலைஞராவார். இவர் இந்திய மற்றும் மேற்கத்திய இசையில் தேர்ச்சி பெற்றவர். இவர் 1871இல் வஙகாள சங்க வித்யாலயாவையும் 1881இல் வங்காள இசை நிறுவனத்தையும் நிறுவினார். ஈரானின் அரசர் ஷா அவர்கள் 'நவாப் ' பட்டத்தை வழங்கி கௌரவித்தார். பிரிட்டிசு அரசாங்கம் இவரை ஐக்கிய இராச்சியத்தின் வீரத்திருத்தகை என்று கௌரவப்படுத்தியது. ஒரு நாடக ஆசிரியரான இவர் அமைதிக்கான நீதிபதியாகவும் இருந்தார். இவர் தனது காலத்தில் ஒரு முன்னணி அறப்பணிகளை செய்து வந்தவராக அறியப்பட்டார்.[21]

மன்சூர் அலி கான் பட்டோடி பட்டோடி நவாப்பின் மனைவியான நடிகை ஷர்மிளா தாகூர், நடிகர் சயீப் அலி கான் மற்றும் நடிகை சோகா அலி கான் மற்றும் நகை வியாபாரி சபா அலி கான் போன்றோரும் இந்தக் கிளையைச் சேர்ந்தவர்கள் என நம்பப்படுகிறது.[22]

ஜதிந்திரமோகன் தாகூரின் மகனான சர் பிரத்யோத் குமார் தாகூர் (1873-1942) ஒரு முன்னணி அறப்பணிகளை செய்து வந்தவராகவும், கலை சேகரிப்பாளராகவும் மற்றும் புகைப்படக் கலைஞராகவும் இருந்தார்.

ஜோராசங்கோ குடும்பம்

[தொகு]

வணிகத் தளம்

[தொகு]

"ஜோராசங்கோ தாகூர்களின் புகழ் துவாரகநாத் தாகூரின் (1794-1846) காலத்திலிருந்தே உருவாகிறது." துவாரகநாத் நில்மோனி தாகூரின் இரண்டாவது மகன் இராம்மணி தாகூரின் மகனாவார். ஆனால் குழந்தை இல்லாத முதல் மகன் ராம்லோகன் தாகூரால் தத்தெடுக்கப்பட்டார். இவர் ஜோராசங்கோவின் சொத்துகளையும் மற்றும் இராம்லோகனின் பரந்த செல்வத்தையும் பெற்றார். துவாரகநாத் மேக்கிண்டோஷ் அண்ட் கோ என்ற நிறுவனத்தின் முகவராக இருந்து 24 பர்கானா மாவட்ட ஆட்சியரகத்தில் பலதரப்பட்ட பணிகளில் ஈடுபட்டார். இருப்பினும், இவரது வணிக வலிமையே இவருக்கு செல்வத்தையும் புகழையும் கொண்டு வந்தது. வில்லியம் கார் என்பவருடன் இணைந்து, இவர் கார், தாகூர் அன்ட் கம்பெனி என்ற நிறுவனத்தை நிறுவினார். இது ஐரோப்பிய மற்றும் இந்திய வணிகர்களுக்கும், இந்தியாவில் நிர்வாக நிறுவன அமைப்பின் தொடக்கத்திற்கும் இடையிலான முதல் சமமான கூட்டாண்மையாகும்.[23][24]

ஆன்மீக நோக்கங்கள்

[தொகு]

துவாரகநாத் தாகூருக்குப் பிறகு, குடும்பத்தின் தலைமை தேபேந்திரநாத் தாகூர் (1817-1905) மற்றும் துவாரகநாத் தாகூரின் இரண்டு மகன்களான கிரிந்திரநாத் தாகூர் ஆகியோருக்கு சென்றது. தேபேந்திரநாத் தாகூர் பிரம்ம மதத்தை நிறுவினார். மேலும் தத்வபோதினி பத்திரிக்கை என்ற இதழையும் தொடங்கினார். இவரது குழந்தைகள் பிரம்ம சமாஜத்தில் தொடர்ந்து இயங்கி வந்தனர். கிரிந்திரநாத் தாகூரும் பிரம்ம சமாஜத்தில் சேர்ந்தார். ஆனால் அவரது குழந்தைகள் கணேந்திரன் மற்றும் குனேந்திரன் ஆகியோர் இதில் சேரவில்லை. குணேந்திரனின் மகன்களான ககனேந்திரன், சமரேந்திரன் மற்றும் அபானிந்திரன் ஆகியோர் கிளைத்தனர். ஆனாலும் ஜோராசங்கோ குடும்பத்துடனும் நல்லுறவைத் தக்க வைத்துக் கொண்டனர்.[25] தேவேந்திரநாத் தாகூர் 1843 ஆம் ஆண்டில் பிரம்ம சமாஜத்தை கைப்பற்றினார். அதை உயிர்த்தெழுப்பியது மட்டுமல்லாமல் பல வழிகளில் வளப்படுத்தினார். இது வங்காள மறுமலர்ச்சியின் உத்வேகமாக மாறியது.[26] இவர்தான் பிரம்ம இயக்கத்திற்கு ஒரு தனி நம்பிக்கையின் பொறிகளைக் கொடுத்து அதன் தனித்துவமான சடங்குகளை அறிமுகப்படுத்தினார். பிரம்ம சமாஜம் இந்து சமுதாயத்தில் மிகவும் பரந்த செல்வாக்கை செலுத்தியது.[27]

வெளியீடுகள்

[தொகு]

தேவேந்திரநாத் தாகூரின் குழந்தைகள் பலர் அறிஞர்களாக இருந்தனர். திவிஜேந்திரநாத் தாகூர் (1840-1926) ஒரு சிறந்த அறிஞரும், கவிஞரும் மற்றும் இசை அமைப்பாளருமாவார். இவர் அன்றைய செய்தித்தாள்கள் மற்றும் பத்திரிகைகளில் இலக்கியம், தத்துவம் மற்றும் மதம் குறித்து விரிவாக எழுதினார். இவர் "பாரதி" மற்றும் தத்வபோதினி பத்திரிக்கையின் ஆசிரியராக இருந்தார். மேலும், பெங்காலி சுருக்கெழுத்தில் முன்னோடியாக இருந்த இந்து மேளாவின் அமைப்பாளர்களில் ஒருவராகவும் இருந்தார்.[28]

சத்யேந்திரநாத் தாகூர், (1842-1923), இந்திய ஆட்சிப்பணியில் 1864 இல் சேர்ந்த முதல் இந்தியராவார். முன்னதாக, இவரும் இவரது சகோதரர் கணேந்திரநாத்தும் 1857 இல் கொல்கத்தா பல்கலைக்கழக நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களாக இருந்தனர். நிர்வாகப் பணியில் பணியாற்றியபோதும், இவர் ஒரு சிறந்த எழுத்தாளராகவும், கவிஞராகவும் மற்றும் பாடல் இசையமைப்பாளராகவும் இருந்தார். இவரது பல தேசியவாதப் பாடல்கள் இன்னும் பாடப்படுகின்றன. "தத்வபோதினி பத்திரிக்கை" என்ற இதழின் ஆசிரியராக இருந்த இவர் இந்து மேளாவில் தீவிர அக்கறை காட்டினார். இவர் தனது மனைவி ஞானதானந்தினி தேவியை மேற்கத்திய கருத்துகளை பின்பற்ற ஊக்குவித்தார். அந்த நோக்கத்திற்காக அவரை ஒரு ஆளுநரின் விருந்துக்கும், இங்கிலாந்திற்கும் அழைத்துச் சென்றார். அந்த நாட்களில் இதை நினைத்துக்கூடப் பார்க்க முடியாத ஒன்றாகும்.[29]

தேவேந்திரநாத்தின் மூன்றாவது மகன் ஹேமேந்திரநாத் கட்டுப்படுமிக்க ஒழுக்கமானவராவார். இவர் தனது இளைய சகோதரர்களின் கல்வியைக் கவனித்ததுடன், பெரிய குடும்பத் தோட்டங்களை நிர்வகிக்கும் பொறுப்பையும் ஏற்றுக் கொண்டார். தேவேந்திரநாத்தின் பெரும்பாலான குழந்தைகளைப் போலவே, இவருக்கும் பல்வேறு துறைகளிலும் மாறுபட்ட ஆர்வங்கள் இருந்தன. ஒருபுறம், இவர் பல "பிரம்ம சங்கீதங்களை" இயற்றினார், மறுபுறம், இயற்பியல் அறிவியல் பற்றிய கட்டுரைகளையும் எழுதினார். அதை இவர் பள்ளி மாணவர்களுக்கான பாடப்புத்தகத்தில் தொகுத்துத் திருத்தத் திட்டமிட்டார். இவர் உடல் வலிமை மற்றும் மல்யுத்த திறன்களுக்காக அறியப்பட்டார். விதிவிலக்காக, இவர் தனது மகள்களுக்கு முறையான கல்வியை வலியுறுத்தினார். இவர் அவர்களை பள்ளியில் சேர்த்தது மட்டுமல்லாமல், இசை, கலை மற்றும் பிரெஞ்சு மற்றும் ஜெர்மன் போன்ற ஐரோப்பிய மொழிகளிலும் பயிற்சி அளித்தார். இவர் தனது மகள்களுக்காக இந்தியாவின் பல்வேறு மாகாணங்களில் இருந்து தகுதி வாய்ந்த மணமகன்களை தீவிரமாகத் தேடி, உத்தரப்பிரதேசம் மற்றும் அசாம் போன்ற தொலைதூர இடங்களில் அவர்களை திருமணம் செய்து கொண்டார் என்பது அவரது முன்னோக்கு சிந்தனையின் மற்றொரு அடையாளமாகும்.

ஜோதிரிந்திரநாத் தாகூர் (1849-1925) ஒரு அறிஞரும், கலைஞரும், இசை அமைப்பாளரும் மற்றும் நாடக ஆளுமையுமாவார். இவருக்கு பெங்காலி, சமசுகிருதம், ஆங்கிலம், மராத்தி மற்றும் பாரசீக மொழிகள் போன்ற பல மொழிகள் தெரிந்திருந்தது. 1924 ஆம் ஆண்டில், பால கங்காதர் திலகரின் கீதை இரகசியம் என்பதை வங்காள மொழியில் மொழிபெயர்த்தார். அத்துடன் மேலும் பல புத்தகங்களையும் மொழிபெயர்த்தார். இவர் பல நாடகங்களை எழுதியுள்ளார். அவற்றில் இயக்கி நடித்தார். குறுந்தகடுகளில் இன்றும் கிடைக்கக்கூடிய பாடல்களை இயற்றினார். இவரது சுமார் 2,000 ஓவியங்கள் இரவீந்திர பாரதியிடம் உள்ளன. இவரது ஓவியங்களின் தேர்வு 1914 இல் இலண்டனில் ரோதன்ஸ்டீனின் வெளியீட்டில் வெளியிடப்பட்டது.[30]

இரவீந்திரநாத் தாகூர் (1861-1941), ஜோதிரிந்தரநாத்தின் இளைய மகனாவார். நோபல் பரிசு வென்ற முதல் ஆசியரான இவர், விதிவிலக்காக திறமையானவராக குடும்பத்தில் மிகவும் பிரபலமானவர். இந்தியா மற்றும் வங்காளதேசம் போன்ற நாடுகளின் தேசியகீதங்களை எழுதியதற்காகவும், இந்திய தேசியவாத தலைவர் மகாத்மா காந்திக்கு மகாத்மா என்ற பட்டத்தை உருவாக்கியதற்காகவும் இரவீந்திரநாத் வரலாற்றில் சிறப்பாக நினைவுகூரப்படுகிறார்.[31] தேவேந்திரநாத் தாகூரின் இளைய மகன் புத்தேந்திரநாத், அவரது மிகச் சிறிய வயதிலேயே இறந்து போனார்.

ஜோதிரிந்தரநாத்தின் மகளான சுவர்ணகுமாரி தேவி (1855-1932) ஒரு சிறந்த எழுத்தாளராக்வும், ஆசிரியராகவும், பாடல்-இசையமைப்பாளராகவும் மற்றும் சமூக சேவகராகவும் இருந்தார். இவர் பாரதி என்றா இதழின் ஆசிரியராக இருந்தா. மிகச் சில பெண்களே பள்ளிக்குச் சென்ற அந்த காலத்தில் இது ஒரு குறிப்பிடத்தக்க சாதனையாகும். பாலாக் என்ற சிறுவர் இதழையும் திருத்தி, பெண்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கான ஒரு வழியாக சாகி சமிதியை உருவாக்கினார். மேலும் இவர் பல புத்தகங்களையும் எழுதியுள்ளார்.[32] இவரது கணவர் ஜானகிநாத் கோசல் இந்திய தேசிய காங்கிரசின் நிறுவனர்களில் ஒருவராக இருந்தார்.எனவே இவரும் தனது கணவருடன் சேர்ந்து தேசியவாத நடவடிக்கைகளில் பங்கேற்றார்.

கலைஞர்கள்

[தொகு]

இரவீந்திரநாத்துக்குப் பிறகு, ஜோரசங்கோ குடும்பத்தில் மிகவும் குறிப்பிடத்தக்கவர்களாக ககனேந்திரநாத் தாகூர் (1867-1938), அபனிந்திரநாத் தாகூர் (1871-1951), மற்றும் இந்திய கலைக்கு மகத்தான பங்களிப்புகளை வழங்கிய சுனயாணி தேவி (1875-1962) ஆகியோர் இருந்தனர்.[33] முன்னதாக, அபனிந்திரநாத் தாகூரின் தாத்தா கிரிந்திரநாத் (1820–1854), மற்றும் தந்தை குனேந்திரநாத் (1847–81), பின்னர் அபனிந்திரநாத் தாகூரின் உறவினர் ஹிதேந்திரநாத் தாகூர் (1867–1908) மற்றும் அவரது மருமகன் ஜாமினிபிரகாஷ் கங்குலி ஆகிய அனைவருமே பரிசளிக்கப்பட்டவர்கள் ஆவர்.

ககனேந்திரநாத் பல வழிகளில் ஒரு முன்னோடியாக இருந்தார் - மேற்கத்திய கலையில் பயிற்சி பெற்ற பின்னர் இந்திய ஓவிய ஓவியங்களை பின்பற்றுவதிலும், பின்னர் ஜப்பானிய பாணியையும் உள்வாங்கினார்.[34] இருப்பினும், "வங்காளப் பள்ளி" அல்லது "நியோ-ஓரியண்டல் பள்ளி" என்று அறியப்பட்டதை இவரது சகோதரர் அபனிந்திரநாத் திறந்து வைத்தார். தெற்காசிய செல்வாக்கின் பல்வேறு விகாரங்களை உள்ளடக்கிய அதே வேளையில் அதன் செல்வாக்கு நாடு முழுவதும் பரவியது.[35]

இந்த கலைஞர்கள் அடங்கிய தாகூர் குடும்பங்கள் அனைத்தும் இந்தியாவின் மேற்கு வங்காளத்தைச் சேர்ந்தவையாகும்.

இளைய தலைமுறை

[தொகு]

இளைய தலைமுறையும் கணிசமாக தங்களின் பங்கை அளித்தது. திவிஜேந்திரநாத்தின் இரண்டாவது மகன் சுதீந்திரநாத் (1869-1929) ஒரு புகழ்பெற்ற எழுத்தாளராக இருந்தார். அவரது மகன் சௌமியேந்திரநாத் (1901–74) ஒரு இடதுசாரி அரசியல்வாதியாக நன்கு அறியப்பட்டார். சௌமியாந்திரநாத் நாஜி எதிர்ப்பு மற்றும் ஹிட்லரை படுகொலை செய்வதற்கான சதி தொடர்பாக 1933 இல் சில காலம் கைது செய்யப்பட்டு சிறையிலிருந்தார்.[36] சத்யேந்திரநாத்தின் மகன் சுரேந்திரநாத் (1872-1940) என்பவருக்கும் அரசியல் தொடர்புகள் இருந்தன. சத்யேந்திரநாத்தின் மகள் இந்திரா தேவி சௌதுராணி (1873-1960) இலக்கியம், இசை மற்றும் பெண்கள் இயக்கத்தில் தன்னை வேறுபடுத்திக் கொண்டார். இவர் ஒரு புகழ்பெற்ற அறிஞரும் எழுத்தாளருமான பிரமாதா சௌத்ரியை மணந்தார். இரவீந்திரநாத் தாகூரின் மகன் இரதிந்திரநாத் தாகூர் (1888-1961) பல திறமைகள் கொண்ட ஒருவராக இருந்தார். அமெரிக்காவில் படித்த ஒரு விவசாயி என்பதைத் தவிர, ஒரு திறமையான கட்டிடக் கலைஞராகவும், வடிவமைப்பாளராகவும், தச்சராகவும், ஓவியராகவும் மற்றும் எழுத்தாளராகவும் இருந்தார். மேலும், விஸ்வ-பாரதி பல்கலைக்கழகத்தின் முதல் 'உபாச்சார்யா' வாகவும் இருந்தார்.[37] இரதிந்திரநாத் தாகூரின் மனைவி பிரதிமா தேவி (1893-1969), சில்பா சதன், விஸ்வ பாரதி ஆகியவற்றுடன் தொடர்புடைய ஒரு கலைஞராகவும், நடனங்கள் மற்றும் நடன நாடகங்களுடனும் தொடர்புடையவராகவும் இருந்தார்.[38]

இரவீந்திரநாத் தாகூருடன் தொடர்பு கொண்ட பிரபல மும்பை நடிகை ஷர்மிளா தாகூர் ஒரு நேர்காணலில், தனது தாயின் தாயார் இலத்திகா தாகூர் இரவீந்திரநாத் தாகூரின் சகோதரர் திவிஜேந்திரநாத்தின் பேத்தி என்று கூறினார்.[39] பிரணாதி தாகூர் ஒரு புகழ்பெற்ற மற்றும் புகழ்பெற்ற சொற்பொழிவாளர், செய்தி வாசகர் மற்றும் பெங்காலி நடிகர் ஆவார். இவர் சத்யேந்திரநாத் தாகூரின் பேரன் சுனந்தோ தாகூரை மணந்தார்.[40] மகரிசி தேவேந்திரநாத் தாகூரின் பேத்தி பிரக்னசுந்தரி தேவி, அசாமின் மிகவும் பிரபலமான எழுத்தாளர் சாகித்யாரதி இலட்சுமிநாத் பெஸ்பருவாவை மணந்தார். அவர் ஒரு இலக்கிய நிகழ்வாகவும் இருந்தார். அவரது அமிஷ் ஓ நிரமிஷ் அஹர் (1900, மறுபதிப்பு 1995) என்ற சமையல் புத்தகம் ஒவ்வொரு வங்காள மணமகனுக்கும் வழங்கப்படும் ஒன்றாகும். மேலும் "இந்தியாவின் திருமதி பீட்டன்"என்ற பட்டத்தையும் பெற்றார்.[41] இரவீந்திரநாத் தாகூரின் இளைய மகள் மீரா தேவியின் மகள் நந்திதா, சுதந்திர போராட்ட வீரரும், எழுத்தாளரும் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினருமான கிருட்டிண கிருபாளாணியை மணந்தார்.[42]

குடும்பச் சூழல்

[தொகு]

ஜோராசங்கோவின் சூழல் இலக்கியம், இசை, ஓவியம் மற்றும் நாடகங்களால் நிறைந்திருந்தது. மேலும் அவர்களுக்கு சொந்தமாக கல்வி முறையும் இருந்தது. முந்தைய நாட்களில், பெண்கள் பள்ளிக்குச் சென்றதில்லை. ஆனால் இவர்கள் அனைவரும் வீட்டிலேயே படித்தார்கள். சுவர்ணகுமாரி தேவி தனது ஆரம்ப நாட்களில் சிறுமிகள் நகலெடுக்க வேண்டிய ஒரு பலகையில் எதையாவது எழுதுவதை ஒருசமயம் நினைவு கூர்ந்தார்.[43] குடும்பத்தில் உள்ள சூழல் அதன் உறுப்பினர்களின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகித்தது. இலக்கியத்திற்கான நோபல் பரிசை வெல்லச் சென்ற இரவீந்திரநாத் தாகூருக்கு கூட முறையான கல்வி மிகக் குறைவாகவே இருந்தது.[44]

ஓரளவு பழமைவாதியாக இருந்ததால், தேவேந்திரநாத் தாகூர் குடும்ப உறுப்பினர்கள் வீட்டிற்கு வெளியே சில வகையான நடவடிக்கைகளில் பங்கேற்பது குறித்து பல கட்டுப்பாடுகளை விதித்திருந்தார். எனவே, அவர்கள் வெளி உலகத்தை தங்கள் வீட்டிற்குள் கொண்டு வந்து பெண்கள் உட்பட முழு குடும்பமும் பங்கேற்றனர்.

குடும்பத்தின் ஜோராசங்கோ கிளை சிலெய்தாகாவுடன் நெருங்கிய தொடர்புகளைக் கொண்டிருந்தாலும், குஸ்தியா மாவட்டத்தில், இப்போது வங்காள தேசத்திலும், சாந்திநிகேதனிலும், இரவீந்திரநாத் விஸ்வ பாரதியை வளர்த்தார்.[45] அவற்றின் வேர்கள் ஜோராசங்கோ வீட்டில் இருந்தன. இது தாகூரின் ஜோரசங்கோ தாக்கூர் மாளிகை என்று பிரபலமாக இருந்தது. இது இப்போது இரவீந்திர பாரதி பல்கலைக்கழகம் என்றப் பெயரில் உள்ளது .

மேற்கோள்கள்

[தொகு]
  1. Original Bengali word is ঠাকুর
  2. From Thakur to Tagore, Syed Ashraf Ali, The Star May 04, 2013
  3. Deb, Chitra, pp 64–65.
  4. "The Tagores and Society". Rabindra Baharati University. Archived from the original on 26 ஜூன் 2009. பார்க்கப்பட்ட நாள் 24 April 2007. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  5. "https://ia801600.us.archive.org/BookReader/BookReaderImages.php?zip=/5/items/in.ernet.dli.2015.339410/2015.339410.Rabindrajibani-O_jp2.zip&file=2015.339410.Rabindrajibani-O_jp2/2015.339410.Rabindrajibani-O_0041.jp2&scale=13.50599520383693&rotate=0"
  6. Mukherjee, Mani Shankar (May 2010). "Timeless Genius". Pravasi Bharatiya: 89, 90. 
  7. Sengupta, Nitish, pp 119–126
  8. Sengupta, Nitish, pp 209–216
  9. History of Bengali-speaking People by Nitish Sengupta, p 210, 212–213.
  10. Chitra Deb is a writer on social and historical subjects. She is attached to Ananda Bazar Patrika and has made an enormous contribution in the field of study of the Tagores.
  11. Dutta, Kalyani, "Kalighat", in "Calcutta, the Living City", Vol I, edited by Sukanta Chaudhuri, p 25, Oxford University Press, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-19-563696-1.
  12. Sengupta, Subodh Chandra and Bose, Anjali, p 141
  13. Sengupta, Subodh Chandra and Bose, Anjali, p 313
  14. Cotton, H.E.A., Calcutta Old and New, 1909/1980, pp344-345, General Printers and Publishers Pvt. Ltd.
  15. Sengupta, Subodh Chandra and Bose, Anjali, pp 184, 313
  16. Sengupta, Subodh Chandra and Bose, Anjali, p 433
  17. It was so named because it was built like a castle. It was one of the landmarks of old Kolkata, off old Chitpore.
  18. Guha Thakurta, Tapati, Art in Old Calcutta, the Melting Pot of Western Styles, in Calcutta, the Living City, Vol I, edited by Sukanta Chaudhuri, pp 148–151, Oxford University Press, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-19-563696-1.
  19. Flora, Reis W (2004). "Raja Sourindro Mohun Tagore (1840–1914): the Melbourne connection". South Asia: Journal of South Asian Studies 27 (3): 289–313. doi:10.1080/1479027042000327147. 
  20. Maharajah Sir Sourindra Mohan Tagore picture பரணிடப்பட்டது 2013-01-26 at Archive.today on page Imheritage India பரணிடப்பட்டது 2012-11-09 at the வந்தவழி இயந்திரம்
  21. Sengupta, Subodh Chandra and Bose, Anjali, p 532
  22. Her own Wikipedia page describes her as the great-great-granddaughter of painter Gaganendranath Tagore, but Bengali newspapers and other local sources consistently refer to her as coming from the Pathuriaghata branch of the family.
  23. Deb, Chitra, Jorasanko and the Thakur Family, Pages 64-65, in Calcutta: The Living City, Volume I, edited by Sukanta Chaudhuri, Oxford University Press.
  24. Sarkar, Suvobrata. "Bengali Entrepreneurs and Western Technology in the Nineteenth Century: A Social Perspective" (PDF). Indian Journal of History of Science, 48.3 (2013) 447-475. பார்க்கப்பட்ட நாள் 2 August 2018.
  25. Deb, Chitra, p 65.
  26. Sengupta, Subodh Chandra and Bose, Anjali, p 219
  27. Sengupta, Nitish, p 242
  28. Sengupta, Subodh Chandra and Bose, Anjali, p 225
  29. Sengupta, Subodh Chandra and Bose, Anjali, pp 554–555
  30. Sengupta, Subodh Chandra and Bose, Anjali, pp 184–185
  31. Sengupta, Subodh Chandra and Bose, Anjali, pp 454–455.
  32. Sengupta, Subodh Chandra and Bose, Anjali, pp 609–610.
  33. Deb, Chitra, p
  34. Sengupta, Subodh Chandra and Bose, Anjali, pp 124–125.
  35. Mitra, Tapan, Art and Artists in Twentieth Century Calcutta, in "Calcutta, the Living City", Vol I, edited by Sukanta Chaudhuri, p 261-62, Oxford University Press, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-19-563696-1.
  36. Cultural Transfers in Dispute: Representations in Asia, Europe and the Arab World since the Middle Ages
  37. "New book discloses Rabindranath Tagore son's untold story". DNA. பார்க்கப்பட்ட நாள் 1 August 2019.
  38. "Pratima Devi (1893-1969)". Visva-Bharati. பார்க்கப்பட்ட நாள் 1 August 2019.
  39. "The Tagore connection!". The Times of India.
  40. Mukherjee Pandey, Jhimli. "Being Rabindranath Tagore". The Times of India, 1 June 203. பார்க்கப்பட்ட நாள் 26 July 2019.
  41. Utsa Ray, Culinary Culture in Colonial India (Cambridge University Press 2015): 63. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781107042810
  42. "Padma Bhusan Krishna Kripalani". The Sindhu World. பார்க்கப்பட்ட நாள் 5 August 2019.
  43. Jorasanko and the Thakur Family by Chitra Deb in Calcutta, the Living City, edited by Sukanta Chaudhuri, Vol I, page 66
  44. Please see Life of Rabindranath Tagore
  45. "Visva Bharati". visvabharati.ac.in.

குறிப்புகள்

[தொகு]

மேலும் படிக்க

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]

வார்ப்புரு:Tagore family வார்ப்புரு:Bengal Renaissance

"https://ta.wikipedia.org/w/index.php?title=தாகூர்_குடும்பம்&oldid=3930741" இலிருந்து மீள்விக்கப்பட்டது