வர்த்தமான்
வர்த்தமான்
বর্ধমান பர்த்தமான் | |
---|---|
கடிகாரச் சுற்று:மேலிருந்து: கர்சன் கேட், வர்த்தமான் அறிவியல் மையம் (வெளிப்புறம்) துர்கா பூஜை, வணிக வளாகம், சர்வமங்களம் கோயில் தொடருந்து நிலையம் | |
அடைபெயர்(கள்): அமைதி நகரம்*இராஜ பாரம்பரிய நகரம் | |
ஆள்கூறுகள்: 23°14′N 87°52′E / 23.233°N 87.867°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | மேற்கு வங்காளம் |
மாவட்டம் | கிழக்கு வர்த்தமான் மாவட்டம் |
அரசு | |
• வகை | நகராட்சி |
• தலைவர் | டாக்டர். சொரூப் தத்தா[1] |
பரப்பளவு | |
• நகராட்சி | 26.30 km2 (10.15 sq mi) |
ஏற்றம் | 30 m (100 ft) |
மக்கள்தொகை (2011) | |
• நகராட்சி | 3,47,016 |
• அடர்த்தி | 13,000/km2 (34,000/sq mi) |
• பெருநகர் | 5,22,445 |
மொழிகள் | |
• அலுவல் மொழிகள் | வங்காளி, ஆங்கிலம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் சுட்டு எண் | 713101, 713102, 713103, 713104 713141,713149 |
தொலைபேசி குறியீடு எண் | +91-342 |
வாகனப் பதிவு | WB42 |
நாடாளுமன்ற மக்களவைத் தொகுதி | வர்த்தமான் - துர்க்காப்பூர் மக்களவைத் தொகுதி |
சட்டமன்றத் தொகுதிகள் | வர்த்தமான் தெற்கு சட்டமன்றத் தொகுதி |
இணையதளம் | bardhaman |
வர்த்தமான் அல்லது பர்த்தமான் (Bardhaman) (Pron: ˈbɑ:dəˌmən) இந்தியாவின் மேற்கு வங்காள மாநிலத்தின் மேற்கில் உள்ள, கிழக்கு வர்த்தமான் மாவட்டத்தின் தலைமையிட நகரம் மற்றும் நகராட்சி ஆகும்.[2]
இப்பகுதியில் சமயப் பிரச்சாரங்களை மேற்கொண்ட சமண சமயத்தின் 24ஆவது தீர்த்தங்கரர் வர்த்தமான மகாவீரரை சிறப்பிக்கும் பொருட்டு, இந்நகரத்திற்கு வர்த்தமான் எனப் பெயரிடப்பட்டது. வர்த்தமான் என்பதற்கு செழிப்புடன் கூடிய வளமான பகுதி எனப் பொருளாகும்.[3]
புவியியல்
[தொகு]வர்த்தமான் நகரம், கொல்கத்தாவிற்கு வடமேற்கே பெரும் தலைநெடுஞ்சாலை வழியாக 100 கிமீ தொலைவிலும் உள்ளது. இந்நகரத்தின் வழியாக தாமோதர் நதி மற்றும் கங்கை ஆறுகள் பாய்கிறது.[4]
மக்கள் தொகையியல்
[தொகு]2011ம் ஆண்டின் மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, வர்த்தமான் நகரத்தின் மொத்த மக்கள் தொகை 346,639 ஆகும். அதில் 176,391 ஆண்கள் ஆகவும், பெண்கள் 170,248 ஆகவும் உள்ளனர். எழுத்தறிவு படைத்தவர்கள் 280,160 (87.84 %) ஆக உள்ளனர். பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு 965 பெண்கள வீதத்தில் உள்ளது. ஆறு வயதிற்குட்பட்டவர்களின் எண்ணிக்கை 27,705 ஆகவுள்ளது. மக்கள் தொகையில் இந்துக்கள் 83.42 % ஆகவும், இசுலாமியர்கள் 14.88 % ஆகவும், மற்றவர்கள் 1.70% ஆகவும் உள்ளனர். வங்காள மொழி மற்றும் ஆங்கிலம் பயிலப்படுகிறது.[5]
போக்குவரத்து
[தொகு]சாலைப் போக்குவரத்து
[தொகு]வர்த்தமான் நகரத்தின் வழியாக பெரும் தலைநெடுஞ்சாலை செல்கிறது. வர்த்தமான் நகரத்திற்கு அருகில் தேசிய நெடுஞ்சாலை எண் 19 (பழைய எண் 2) செல்கிறது.
தொடருந்துகள்
[தொகு]ஹவுரா - தில்லி செல்லும் அனைத்து தொடருந்துகள் வர்த்தமான் தொடருந்து நிலையம் வழியாக நின்று செல்கிறது. எட்டு நடைமேடைகள் கொண்ட வர்த்தமான் தொடருந்து நிலையம் வழியாக நாள் ஒன்றுக்கு 188 தொடருந்துகள் நின்று செல்கிறது.[6]
கல்வி
[தொகு]- வர்த்தமான் பல்கலைக்கழகம்
- வர்த்தமான் கலை மற்றும் வடிவமைப்புக் கல்லூரி
- வர்த்தமான் ஹோமியோபதி மருத்துவக் கல்லூரி
- வர்த்தமான் மருத்துவம் & வாழ்க்கை அறிவியல் கல்லூரி
- வர்த்தமான் மருத்துவக் கல்லூரி
- வர்த்தமான் மன்னர் கல்லூரி
- வர்த்தமான் சைபர் ஆய்வு மற்றும் பயிற்சி நிறுவனம்
- மன்னர் விஜய் சந்த் பொறியியல் & தொழில்நுட்ப பாலிடெக்னிக் கல்லூரி
- மகாராஜ் உதய் சந்த் மகளிர் கல்லூரி
- பர்த்தமான் பல்கலைக்கழக தொழில் நுட்ப நிறுவனம்
- பர்த்தமான் பல்கலைக்கழக சட்டக் கல்லூரி
- பர்த்தமான் விவேகானந்தா மகாவித்தியாலயம்
- புனித சேவியர் கல்லூரி, பர்த்தமான்
முக்கியத் தலங்கள்
[தொகு]-
சர்வமங்கள கோயில்
-
சிவன் கோயில்
-
அவ்வா மகால்
-
மேகநாத சாஃகா கோளரங்கம்
-
கர்சன் கேட்
-
பர்த்தவான் அரண்மனை
-
அறிவியல் மையம்
-
கங்காளேஸ்வரி கோயில்
-
தாமோதரேஸ்வர் சிவன் கோயில்
-
பர்த்தமான் தொடருந்து நிலையம்
தட்பவெப்பம்
[தொகு]தட்பவெப்ப நிலைத் தகவல், பர்த்துவான், இந்தியா | |||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
மாதம் | சன | பிப் | மார் | ஏப் | மே | சூன் | சூலை | ஆக | செப் | அக் | நவ | திச | ஆண்டு |
உயர் சராசரி °C (°F) | 26 (78.8) |
27.5 (81.5) |
34.5 (94.1) |
37.44 (99.4) |
32.61 (90.7) |
34.94 (94.9) |
32.2 (90) |
32.28 (90.1) |
32.39 (90.3) |
32 (89.6) |
28 (82.4) |
26 (78.8) |
31.322 (88.38) |
தாழ் சராசரி °C (°F) | 12 (53.6) |
15 (59) |
20 (68) |
24.89 (76.8) |
25.89 (78.6) |
26 (78.8) |
25 (77) |
25 (77) |
25 (77) |
24.72 (76.5) |
17.5 (63.5) |
12.5 (54.5) |
21.1 (70) |
பொழிவு mm (inches) | 18 (0.7) |
38 (1.5) |
33 (1.3) |
48 (1.9) |
127 (5) |
244 (9.6) |
348 (13.7) |
312 (12.3) |
290 (11.4) |
157 (6.2) |
28 (1.1) |
5 (0.2) |
137 (5.4) |
சராசரி மழை நாட்கள் | 4 | 3 | 4 | 6 | 10 | 18 | 23 | 22 | 18 | 11 | 3 | 1 | 123 |
ஆதாரம்: Weather2[7] |
இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Burdwan Municipality". burdwanmunicipality.gov.in. Archived from the original on 25 டிசம்பர் 2018. பார்க்கப்பட்ட நாள் 14 July 2016.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ Barddhaman Municipality
- ↑ "Census of India 2011: District Census Handbook, Bardhaman, Part XII B" (PDF). Brief History of the district, pages 9 - 11. Directorate of Census Operations, West Bengal. பார்க்கப்பட்ட நாள் 12 April 2017.
- ↑ "Maps, Weather, and Airports for Barddhaman, India". fallingrain.com. பார்க்கப்பட்ட நாள் 25 July 2016.
- ↑ Barddhaman Metropolitan Region
- ↑ Barddhaman Railway Station
- ↑ "weather2.com". Weather2. 2013. Retrieved on 6 October 2013.
வெளி இணைப்புகள்
[தொகு]- Burdwan Town, The Imperial Gazetteer of India, 1909, v. 9, p. 102.
- Official website of Bardhaman District
- Official website of MGNREGS Cell, Bardhaman District பரணிடப்பட்டது 2019-05-06 at the வந்தவழி இயந்திரம்
- Bardhaman Utsav (Annual cultural programme of Bardhaman)
- Bardhaman Municipality
- Bardhaman darshan (பர்த்துவான் சுற்றுலா இணையத்தளம்)