பிரமாதா சௌத்ரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிரமாதாநாத் சௌத்ரி
பிறப்பு(1868-08-07)7 ஆகத்து 1868
ஜெசோர், பிரிட்டிசு இந்தியா
இறப்பு2 செப்டம்பர் 1946(1946-09-02) (அகவை 78)
கொல்கத்தா, பிரிட்டிசு இந்தியா
புனைபெயர்பீர்பால்
தொழில்கவிஞர், கட்டுரையாளர், எழுத்தாளர்
தேசியம்பிரிட்டிசு இந்தியன்
காலம்வங்காள மறுமலர்ச்சி

பிரமாதநாத் சௌத்ரி (Pramathanath Chaudhuri) (1868 ஆகத்து 7 - 1946 செப்டம்பர் 2) [1] பிரமாதா சௌத்ரி, அல்லது பீர்பால் எனவும் அழைக்கப்படும் இவர், ஒரு பெங்காலி எழுத்தாளரும் மற்றும் பெங்காலி இலக்கியத்தில் செல்வாக்கு மிக்கவருமாவார். ஆழ்ந்த தேசபக்தி மற்றும் சமசுகிருத ஆர்வலரான பிரமாதா சௌத்ரிக்கு வங்காளப் பூர்வீகத்தின் மீது மிகுந்த நம்பிக்கை இருந்தது. சபுஜ் பத்ராவின் ஆசிரியராகவும் (பசுமை இலைகள்", 1914) இந்த பத்திரிகையைச் சுற்றி கூடியிருந்த குழுவின் வழிகாட்டியாகவும், சௌத்ரி வங்காள இலக்கியத்திற்கு ஒரு நீடித்த பாரம்பரியத்தை உருவாக்கிச் சென்றார். [2]

ஆரம்ப கால வாழ்க்கை[தொகு]

பப்னாவில் (இப்போது வங்காளதேசம் ) ஹரிபூர் கிராமத்தின் புகழ்பெற்ற ஜமீந்தார் குடும்பத்தைச் சேர்ந்த துர்காதாசு சௌத்ரி மற்றும் அவரது மனைவியும், இரவீந்திரநாத் தாகூரின் இரண்டாவது சகோதரியான சுகுமாரி தேவி, ஆகியோர் ஹரிபூரில் அவர்களது முதல் ஐந்து ஆண்டுகளையும், அடுத்த பத்து ஆண்டுகளை நதியா மாவட்டத்தின் கிருட்டிணா நகரிலும் கழித்தனர். (இப்போது மேற்கு வங்காளம் ). பிரிட்டிசு அரசாங்கத்தின் உயர் அதிகாரியான இவரது தந்தையின் பணி காரணமாக இவர் பீகார் மற்றும் வங்காள மாகாணத்தின் பல இடங்களுக்கு செல்ல வேண்டியிருந்தது.

கிருட்டிணா நகரில் வாழ்க்கை[தொகு]

இவர், கிருட்டிணா நகரில் உள்ள கிருட்டிணாநகர் தேவிநாத் உயர்நிலைப் பள்ளியில் பயின்றார். தனது ஐந்தாம் முதல் பதின்மூன்றாம் வயது வரை, சௌத்ரி கிருட்டிணாநகரில் வசித்து வந்தார்.

இந்த காலகட்டத்தில், சௌத்ரி வங்காளத்தின் பாரம்பரிய இந்து கிராம தொடக்கப் பள்ளிகளில் படித்தார். 1881 ஆம் ஆண்டில், இவர் நுழைவு வகுப்பில் இருந்தபோது, கிருட்டிணாநகரில் மலேரியா ஒரு தொற்றுநோய் வடிவத்தில் வெடித்தது. அந்த தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட சௌத்ரி எட்டு நாட்கள் மயக்கமடைந்து பின்னர் பீகாரில் உள்ள அவரது தந்தை பணி செய்துவந்த அர்ராவுக்கு அகற்றப்பட்டார். அடுத்த மூன்று மாதங்களுக்கு, இவர் தனது நூல்களை ஒதுக்கி வைத்துவிட்டு, புல்வர் லிட்டன், ஜார்ஜ் எலியட் மற்றும் பால்கிரேவின் கோல்டன் டிரெசெரி போன்ற நூல்களைப் படித்தார். 1882 ஆம் ஆண்டில், சௌத்ரி கொல்கத்தாவுக்குத் திரும்பி, முதல் பிரிவு மதிப்பெண்களுடன் ஹரே பள்ளியில் நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்றார்.

இளம் வயது[தொகு]

சௌத்ரி முதல் கலைப் பாடப்பிரிவுக்காக கொல்கத்தாவின் மாநிலப் பல்கலைக் கழகக் கல்லூரியில் சேர்ந்தார். ஆனால் கொல்கத்தாவில் டெங்குக் காய்ச்சல் பரவியதால் இவர் மீண்டும் கிருட்டிணாநகருக்கு மாற வேண்டியிருந்தது. மேலும் கிருட்டிணாநகர் கல்லூரியில் கலை வகுப்பில் சேர்ந்தார். துரதிர்ஷ்டவசமாக காய்ச்சல் காரணமாக இவர் மீண்டும் தனது படிப்பை நிறுத்தி, தொடர்ந்து தினஜ்பூரில் உள்ள தனது தந்தையிடம் சென்றார். பின்னர் இவரது மூத்த சகோதரர் சர் அசுதோசு சௌத்ரி பிரெஞ்சு மொழியைக் கற்க இவரை ஊக்கப்படுத்தினார். மேலும் சௌத்ரி பிரெஞ்சு இலக்கியத்தின் தீவிர மாணவராக ஆனார். மேலும் இரபேலைட்டுக்கு முந்தைய கவிஞர்களிடமும் ஒரு புனித சேவியர் கல்லூரியில் கலைத் தேர்வில் இரண்டாம் பிரிவு மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றார்.

குறிப்புகள்[தொகு]

மேலும் படிக்க[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரமாதா_சௌத்ரி&oldid=2990264" இலிருந்து மீள்விக்கப்பட்டது