தாகூர் மாளிகை, ஜோரசங்கோ
தாகூர் மாளிகை, கொல்கத்தா, பெங்காலி மொழியில் தாகூர் பாரி என்றழைக்கப்படுகிறது. இது இந்தியாவின், மேற்கு வங்காளம் மாநிலத்தில் வட கொல்கத்தாவில் உள்ள ஜோரசங்கோ என்னுமிடத்தில் உள்ள தாகூர் குடும்பத்தாரின் முன்னோர்களின் இல்லமாகும். தற்போது அது கொல்கத்தா 700007 முகவரியில் ஜோரசங்கோவில் உள்ள 6/4 துவாரகநாத் தாகூர் சந்தில் உள்ள ரவீந்திர பாரதி பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ளது.[1][2] இது கவிஞரும் முதல் ஐரோப்பியர் அல்லாதவருமான நோபல் பரிசு பெற்ற ரவீந்திரநாத் தாகூர் பிறந்த வீடு ஆகும். அவர் தனது குழந்தைப் பருவத்தின் பெரும்பகுதியைக் கழித்த இடமும் இதுவே ஆகும். ஆகஸ்ட் 7, 1941 இல் அவர் இறந்த இடமும் இதுதான். தாகூர் மாறிகை என்பதானது ஒரு இடம் மட்டுமல்ல, அது வங்காளத்தின் உணர்ச்சியை வெளிப்படுத்துகின்ற அடையாளமாகும்.
பின்னணி
[தொகு]இது 18 ஆம் நூற்றாண்டில் இது கட்டப்பட்டது. புகழ்பெற்ற செட் குடும்பமான புர்ராபஜரால் 'இளவரசர்' துவாரகநாத் தாகூருக்கு ( ரவீந்திரநாத் தாகூரின் தாத்தா) நன்கொடையாக வழங்கப்பட்ட நிலத்தில் இந்த மாளிகை கட்டப்பட்டது. குருதேவ் ரவீந்திரநாத் தாகூர் (1861-1941) இங்குதான் பிறந்தார்.[3]
கி.பி.1785ஆம் ஆண்டில் இது கட்டப்பட்டது. ரவீந்திரநாத் தாகூரின் வாழ்க்கை மற்றும் அவருடைய பணிகள் பல நிலைகளில் இங்கு பதிவுகளாகக் காணப்படுகின்றன. இது 35,000 ச.மீ. பரப்பளவில் அமைந்து காணப்படுகிறது. தற்போது இந்த கட்டடத்தில் ரவீந்திர பாரதி பல்கலைக்கழகம் இயங்கி வருகிறது. அப்பல்கலைக்கழகம் 8 மே 1962இல் ஜவஹர்லால் நேருவால் திறந்து வைக்கப்பட்டது. இந்த வளாகத்தில் மகரிஷி பவன் என்ற ஒரு பவன் உள்ளது. ரவீந்திரநாத் தாகூரின் தந்தையான மகரிஷி தேவேந்திரநாத் தாகூர் நினைவாக அந்த பவன் அமைக்கப்பட்டது. இந்த பவனின் வெளியே உள்ள பலகையில் ரவீந்திரநாத் தாகூர் இங்குதான் தன் இறுதி மூச்சினை விட்டார் என்ற பொருள் படும்பாடியான சொற்றொடர்கள் பதித்து வைக்கப்பட்டுள்ளன. தற்போது அருங்காட்சியகமாக பொலிவு பெற்று அமைந்துள்ள இந்த வீட்டில் மூன்று காட்சிக்கூடங்கள் காணப்படுகின்றன. இங்குள்ள காட்சிக்கூடத்தில் அக்குடும்பத்தினரின் மிக அரிய புகைப்படங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. மேலும் ரவீந்திரநாத் தாகூர் கவிஞராக மாறிய பின்புலம் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. மிகச் சிறந்த திறமையான தாகூர் குடும்பத்தார் உலகிற்கு கலை, வரலாறு போன்ற பொருண்மைகளில் பெருமக்களை அளித்துள்ளனர். அவர்களில் முக்கியமானவராக குருதேவ் ரவீந்திரநாத் தாகூரைக் கூறலாம். கவிஞர்களுக்கெல்லாம் ஆசிரியர் என்பதைக் குறிக்கும் வகையில் அவர் கவி குரு என்றழைக்கப்படுகிறார். அவர் தற்கால கவிஞர்களுக்கும், எழுத்தாளர்களுக்கும், கலை ஆர்வலர்களுக்கும் பெரிய தூண்டுகோலாகவே இருந்துவந்துள்ளார்.[4]
தாகூர் அருங்காட்சியகம்
[தொகு]தாகூர் குடும்பத்தார் வாழ்ந்தபோது இருந்ததைப் பிரதிபலிக்கின்ற வகையில் இது தற்போது அமைக்கப்பட்டுள்ளது. கொல்கத்தாவுக்கான தாகூர் அருங்காட்சியகமாக அது செயல்பட்டுவருகிறது. கவிஞர் ரவீந்திரநாத் தாகூர், அவருடைய குடும்பத்தாருடைய வரலாறு, வங்காள மறுமலர்ச்சி மற்றும் பிரம்ம சமாஜ் ஆகியவற்றுடன் அக் குடும்பத்தாரின் ஈடுபாடு உள்ளிட்ட விவரங்களை இது வெளிப்படுத்துகிறது.[5]
செயல்பாடுகள்
[தொகு]பாரம்பரிய செயல்பாடுகளைத் தவிர, கவிஞரின் பிறந்த நாளில் ரவீந்திர பாரதி பல்கலைக்கழகம் பஞ்ச் பைசாக் விழா என்ற விழா உள்ளிட்டகலாச்சார நிகழ்ச்சிகளை நடத்துகிறது. அவ்விழாவில் கலந்து கொள்வதற்காக ஆயிரக்கணக்கானோர் தாகூர் மாளிகைக்கு வருகின்றனர்.[6][7] அவரது இறந்த நாள் நினைவு பைஷே ஷ்ரவன் போன்ற நாளில் நடத்தப்படுகிறது.[8] இங்கு அபான் மேளா என்ற கலை விழாவும் ஏற்பாடு செய்யப்பட்டு நடத்தப்படுகிறது.[9]
மேலும் காண்க
[தொகு]- பிர்லா தொழில்துறை, தொழில்நுட்ப அருங்காட்சியகம் - கொல்கத்தா
- இந்திய அருங்காட்சியகம் - கொல்கத்தா
- ரபீந்திர பாரதி அருங்காட்சியகம் - கொல்கத்தா
- கோச் பிகார் அரண்மனை அருங்காட்சியகம்
- அசர்துவாரி அரண்மனை அருங்காட்சியகம், முர்சிதாபாத்
- தொல்லியல் அருங்காட்சியகம், தம்லுக்
- சாந்திநிகேதன்
- இந்தியத் தொல்லியல் துறையின் அருங்காட்சியகங்கள்
- இந்தியாவில் உள்ள அருங்காட்சியகங்களின் பட்டியல்
வெளி இணைப்புகள்
[தொகு]விக்கிச்செலவில் செலவு வழிகாட்டி: Kolkata/North Kolkata
- ரவீந்திர பாரதி பல்கலைக்கழக வலைத்தளம்
- தாகூர் குடும்ப அருங்காட்சியகம் வலைத்தளம் பரணிடப்பட்டது 2013-11-11 at the வந்தவழி இயந்திரம்
- திரைப்பட விருதுகள் குறித்த பிஐபி செய்திக்குறிப்பு - 2001 ஆம் ஆண்டிற்கான சிறந்த இயக்கத்திற்கான விருது தாகூரின் வீட்டின் வரலாற்றை கலை ரீதியாக வெளிப்படுத்தியதற்காக ஜோராசங்கோ தகுர்பாரி படத்திற்காக புத்ததேப் தாஸ்குப்தாவுக்கு வழங்கப்பட்டது.
குறிப்புகள்
[தொகு]- ↑ "Rabindra Bharti Museum (Jorasanko Thakurbari),". Archived from the original on 28 July 2012.
- ↑ "Tagore House (Jorasanko Thakurbari)".
- ↑ "Jorasanko Thakurbari". Archived from the original on 28 July 2012.
- ↑ Rabindranath Tagore’s House
- ↑ [1] பரணிடப்பட்டது 2013-11-11 at the வந்தவழி இயந்திரம் Rabindra Bharati Museum Kolkata
- ↑ Looking at a landmark பரணிடப்பட்டது 26 செப்டெம்பர் 2007 at the வந்தவழி இயந்திரம் The Statesman
- ↑ Remembering Tagore, Statesman News Service பரணிடப்பட்டது 29 செப்டெம்பர் 2007 at the வந்தவழி இயந்திரம் The Statesman
- ↑ Tram fest tribute to Tagore death anniversary பரணிடப்பட்டது 29 செப்டெம்பர் 2007 at the வந்தவழி இயந்திரம் Statesman News Service
- ↑ ART REVIEW: Colours of Jorasanko பரணிடப்பட்டது 29 செப்டெம்பர் 2007 at the வந்தவழி இயந்திரம் The Statesman