டொம் சிப்லி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டொம் சிப்லி
Sibley playing for Warwickshire in 2019
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்டொமினிக் பீட்டர் சிப்லி
பிறப்பு5 செப்டம்பர் 1995 (1995-09-05) (அகவை 28)
எப்சம், சர்ரே, இங்கிலாந்து
உயரம்6 அடி 0[1] அங் (1.83 m)
மட்டையாட்ட நடைவலது-கை
பந்துவீச்சு நடைவலது-கை நேர்ச்சுழல்
பங்குமட்டையாளர்
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம் (தொப்பி 694)21 நவம்பர் 2019 எ. நியூசிலாந்து
கடைசித் தேர்வு5 பெப்ரவரி 2021 எ. இந்தியா
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள்அணி
2013–2017சர்ரே (squad no. 45)
2017→ வார்விக்ஷைர்
2018–தற்போதுவரைவார்விக்ஷைர் (squad no. 45)
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு மு.த. ப.அ. இ20
ஆட்டங்கள் 14 82 22 35
ஓட்டங்கள் 748 5,078 416 859
மட்டையாட்ட சராசரி 35.61 40.62 23.11 29.62
100கள்/50கள் 2/3 15/23 1/0 0/7
அதியுயர் ஓட்டம் 133* 244 115 74*
வீசிய பந்துகள் 6 380 54 228
வீழ்த்தல்கள் 0 4 1 5
பந்துவீச்சு சராசரி 67.75 62.00 66.70
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 0 0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 0 0
சிறந்த பந்துவீச்சு 2/103 1/20 2/33
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
9/– 64/– 10/– 17/–
மூலம்: ESPNcricinfo, 05 பெப்ரவரி 2020

டொமினிக் பீட்டர் சிப்லி (Dominic Peter Sibley, பிறப்பு: 5 செப்டம்பர் 1995) என்பவர் இங்கிலாந்துதுடுப்பாட்ட வீரராவார். இவர் உள்ளூர்ப் போட்டிகளில் வார்விக்ஷைர் அணிக்காக விளையாடுகிறார். 2019 நவம்பரில் இங்கிலாந்து துடுப்பாட்ட அணிக்காக தேர்வுப் போட்டிகளில் அறிமுகமானார்.

துடுப்பாட்ட வாழ்க்கை[தொகு]

உள்ளூர்ப் போட்டிகள்[தொகு]

இவர் ஒரு வலது-கை மட்டையாளர் ஆவார். சர்ரே அணிக்கு எதிராக 2 ஆகஸ்ட் 2013இல் எசெக்ஸ் அணிக்காக பட்டியல் அ போட்டிகளில் அறிமுகமானார். எனினும் அப்போட்டியில் அவர் காயம் காரணமாக ஓய்வு பெற வேண்டியிருந்தது.[2]

தனது மூன்றாவது முதல் தரத் துடுப்பாட்டப் போட்டியிலேயே, யார்க்ஷயர் அணிக்கு எதிராக இருநூறு எடுத்தார். அப்போது விட்கிஃப்ட் பள்ளியில் மாணவராக இருந்த சிப்லிக்கு வயது 18 ஆண்டுகள் மற்றும் 21 நாட்களாகும். இவ்வாறு இவர் கவுண்டி சாம்பியன்ஷிப் வரலாற்றில் மிக இளைய இருநூறாளரும் முதல் தர இருநூறு அடித்த இரண்டாவது இளைய ஆங்கிலேயரும் உலகளவில் பதின்மூன்றாவது இளைய இருநூறாளராகவும் ஆனார்.[3] நான்கு-நாள் போட்டியின் இறுதி நாளில், சிப்லி 242 ரன்களுக்கு ரியான் சைட்போட்டம் என்பவரின் இலக்கு வீச்சில் ஆட்டமிழந்தார்.[4]

ஆகஸ்ட் 2017 இல், 2018 பருவத்திற்கு முன்னதாக வார்விக்ஷயரில் சேரும் பொருட்டு சர்ரேவுடன் புதிய மூன்று ஆண்டு ஒப்பந்தத்தின் வாய்ப்பை சிபிலி நிராகரித்தார்.[5] 3 ஆகஸ்ட் 2017 அன்று, சிபிலி 2017 பருவத்தின் இடையே ரிக்கி கிளார்க் என்பவருக்கு மாற்றாக வார்விக்ஷைர் அணியில் சேர்ந்தார்.[6]

பன்னாட்டுப் போட்டிகள்[தொகு]

செப்டம்பர் 2019 இல், நியூசிலாந்திற்கு எதிரான தேர்வுத் தொடருக்கான இங்கிலாந்து அணியில் இடம்பெற்றார்.[7] நவம்பர் 21, 2019 அன்று நியூசிலாந்திற்கு எதிரான போட்டியின் மூலம் இங்கிலாந்து அணிக்காக தேர்வுப் போட்டிகளில் அறிமுகமானார்.[8] அவரது தேர்வுத் துடுப்பாட்ட வாழ்க்கையின் தொடக்கத்தில், "ஃப்ரிட்ஜ்" என்ற புனைப்பெயரால் அழைக்கப்பட்டார். கவுண்டி துடுப்பாட்டத்தில் இருந்து வந்திருந்த அவரது உடற்தகுதி, ஐந்து நாள் ஆட்டத்தின் கடுமைக்கு போதுமானதாக இல்லை. பிறகு ஜனவரி 6, 2020 அன்று, தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2வது போட்டியில், சிப்லி தனது முதல் தேர்வு நூறை எடுத்தார்.[9] இது 1910இல் ஜாக் ஹோப்ஸுக்குப் பிறகு நியூலாண்ட்ஸில் ஒரு இங்கிலாந்து தொடக்க ஆட்டக்காரர் எடுத்த முதல் நூறாகும்.

29 மே 2020 அன்று, கோவிட்-19 தொற்றைத் தொடர்ந்து இங்கிலாந்தில் பன்னாட்டுப் போட்டிகளுக்கான பயிற்சியைத் தொடங்க 55 பேர் கொண்ட வீரர்கள் குழுவில் சிப்லி இடம்பெற்றார்[10][11] 17 ஜூன் 2020 அன்று , மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான தேர்வுத் தொடருக்கான மூடிய கதவுகளுக்குப் பின்னால் பயிற்சியைத் தொடங்க இங்கிலாந்தின் 30 பேர் கொண்ட அணியில் சிப்லி சேர்க்கப்பட்டார்.[12][13] ஜூலை 4, 2020 அன்று, தொடரின் முதல் டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்தின் 13 பேர் கொண்ட அணியில் சிப்லி பெயரிடப்பட்டார்.[14][15] அத்தொடரின் 2ஆவது போட்டியின் முதல் ஆட்டப்பகுதியில் சிப்லி தனது 2ஆவது தேர்வு நூறை எடுத்தார்.[16]

குறிப்புகள்[தொகு]

  1. Dominic Sibley பரணிடப்பட்டது 2021-02-24 at the வந்தவழி இயந்திரம், Warwickshire County Cricket Club. Retrieved 20 சூலை 2020.
  2. "Yorkshire Bank 40, Group B: Surrey v Essex at London, August 2, 2013". ESPNcricinfo. http://www.espncricinfo.com/ci/engine/match/593414.html. பார்த்த நாள்: 7 August 2013. 
  3. Record-breaking Sibley shows Surrey the light Retrieved 27 September 2013
  4. Dominic Sibley: Surrey youngster's historic innings ended Retrieved 27 September 2013
  5. "Sibley leaves Surrey after Stewart refuses to give guarantees". ESPNcricinfo. 2 August 2017. பார்க்கப்பட்ட நாள் 3 August 2017.
  6. "Rikki Clarke & Dom Sibley: Pair to move to Surrey and Warwickshire immediately". BBC Sport. 3 August 2017. பார்க்கப்பட்ட நாள் 10 August 2017.
  7. "Bairstow dropped from England Test squad for New Zealand series". International Cricket Council. பார்க்கப்பட்ட நாள் 23 September 2019.
  8. "1st Test, England tour of New Zealand at Mount Maunganui, Nov 21-25 2019". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 20 November 2019.
  9. "Sibley scores maiden Test century as dominant England pile on runs". Evening Express. Archived from the original on 29 ஜனவரி 2020. பார்க்கப்பட்ட நாள் 6 January 2020. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  10. "England Men confirm back-to-training group". England and Wales Cricket Board. பார்க்கப்பட்ட நாள் 29 May 2020.
  11. "Alex Hales, Liam Plunkett left out as England name 55-man training group". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 29 May 2020.
  12. "England announce 30-man training squad ahead of first West Indies Test". International Cricket Council. பார்க்கப்பட்ட நாள் 17 June 2020.
  13. "Moeen Ali back in Test frame as England name 30-man training squad". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 17 June 2020.
  14. "England name squad for first Test against West Indies". England and Wales Cricket Board. பார்க்கப்பட்ட நாள் 4 July 2020.
  15. "England v West Indies: Dom Bess in squad, Jack Leach misses out". BBC Sport. பார்க்கப்பட்ட நாள் 4 July 2020.
  16. Staff, Scroll. "England vs West Indies, 2nd Test: Watch – Stokes, Sibley hit tons to put hosts on top after day two". Scroll.in (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-07-18.
"https://ta.wikipedia.org/w/index.php?title=டொம்_சிப்லி&oldid=3930575" இலிருந்து மீள்விக்கப்பட்டது