ஜாக் ஹாப்ஸ்
தனிப்பட்ட தகவல்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
முழுப்பெயர் | சர் ஜான் பெரி ஹாப்ஸ் | |||||||||||||||||||||||||||||||||||||||
பட்டப்பெயர் | The Master | |||||||||||||||||||||||||||||||||||||||
மட்டையாட்ட நடை | வலது கை | |||||||||||||||||||||||||||||||||||||||
பந்துவீச்சு நடை | வலது-கை வேகம் / மித வேகம் | |||||||||||||||||||||||||||||||||||||||
பங்கு | துவக்க ஆட்டக்காரர் | |||||||||||||||||||||||||||||||||||||||
பன்னாட்டுத் தரவுகள் | ||||||||||||||||||||||||||||||||||||||||
நாட்டு அணி | ||||||||||||||||||||||||||||||||||||||||
தேர்வு அறிமுகம் (தொப்பி 157) | சனவரி 1 1908 எ. ஆத்திரேலியா | |||||||||||||||||||||||||||||||||||||||
கடைசித் தேர்வு | 16 ஆகஸ்ட் 1930 எ. ஆத்திரேலியா | |||||||||||||||||||||||||||||||||||||||
உள்ளூர் அணித் தரவுகள் | ||||||||||||||||||||||||||||||||||||||||
ஆண்டுகள் | அணி | |||||||||||||||||||||||||||||||||||||||
1905 – 1934 | சர்ரி | |||||||||||||||||||||||||||||||||||||||
வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||
மூலம்: கிரிக்இன்ஃபோ, 21 டிசம்பர் 1963 |
சர் ஜான் பெரி ஹாப்ஸ் (Sir John Berry Hobbs (16 டிசம்பர் 1882 – 21 டிசம்பர் 1963) ஜேக் ஹாபஸ் என்றே பெரும்பாலும் அழைக்கப்படும் இவர் முன்னாள் இங்கிலாந்து துடுப்பாட்ட அணியின் முன்னாள் வீரர் ஆவார். இவர் 1905 முதல் 1934 ஆண்டுகள் சர்ரே துடுப்பாட்ட சங்கத்திற்காகவும், 1908 முதல் 1930 ஆம் ஆண்டுகள் வரை இங்கிலாந்து அணிக்காக 61 தேர்வுத் துடுப்பாட்டங்களில் விளையாடியுள்ளார். தெ மாஸ்டர் என அறியப்படுகிறார். அனைத்துக் கால துடுப்பாட்டங்களில் உள்ள சிறந்த வீரர்களில் ஒருவராக அறியப்படுகிறார். முதல் தரத் துடுப்பாட்டங்களில் அதிக ஓட்டங்கள் சேர்த்துள்ளவர் எனும் சாதனையைப் படைத்துள்ளார். இவர் மொத்தம் 61,720ஓட்டங்கள் எடுத்துள்ளார். இதில் 199 நூறுகள் அடங்கும். வலது கை மட்டையாளர், இவ்வப்போது வலது கை மித வேகப்பந்து வீச்சாளராகவும் செயல்படுவார்.
1882 ஆம் ஆண்டில் ஒரு ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தார். இவரின் இளம்வயதிலேயே துடுப்பாட்டத்தை தனது வாழ்க்கையாகக் கொண்டார். துவக்கத்தில் முறைப்படுத்தப்படாது இருந்த இவரின் துடுப்பாட்ட உத்திகள் 1901 ஆம் ஆண்டிலிருந்து மேம்பட்டது. அதனால் உள்ளூர் அணியினரின் கவனத்திற்கு இவர் செல்லப்பட்டார்.பின் 1903 ஆம் ஆண்டில் இங்கிலாந்து துடுப்பாட்ட வீரர் டாம் ஹய்வார்டின் உதவியுடன் சர்ரே அணியில் சேர்ந்தார். முதல் தரத் துடுப்பாட்டத்தின் முதல்போட்டியில் 88 ஓட்டங்களும் அதற்கு அடுத்த போட்டியில் நூறு ஓட்டங்களும் அடித்தார். அதன்பின் வந்த தொடர்களிலும் சிறப்பான பங்களிப்பை அளித்ததன் மூலம் சிறந்த மாகாண அணி வீரர் எனப் பரவாலக அறியப்பட்டார். 1908 ஆம் ஆண்டில் இங்கிலாந்து துடுப்பாட்ட அணிக்காக தனது முதல் தேர்வுத் துடுப்பாட்டத்தில் அறிமுகம் ஆனார். அதன் முதல் பகுதியில் 83 ஓட்டங்கள் எடுத்தார். இவர் தென்னாபிரிக்கத் துடுப்பாட்ட அணி வீரர்களின் கூக்ளி பந்திற்கு எதிராகச் சிறப்பாக விளையாடினார். பின் 1911-1912 ஆம் ஆண்டில் ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான தேர்வுத் துடுப்பாட்டத்தில் மூன்று நூறுகள் அடித்தார். இதனால் துடுப்பாட்ட விமர்சகர்கள் இவர் சிறந்த வீரர் எனத் தீர்மானித்தனர்.
ஆரம்பகால, வாழ்க்கை மற்றும் துடுப்பாட்டம்
[தொகு]ஹாப்ஸ் டிசம்பர் 16, 1882 இல் கேம்பிரிட்ச்சில் பிறந்தார்.[1] இவரின் தந்தை ஜான் கூப்பர் , கற்பலகை இடுவோராக பணிபுரிந்தவர். தாய் ஃபுளோரா மதிலா பெர்ரி. இவர்களுக்கு மொத்தம் பன்னிரண்டு குழந்தைகள்.[2] இதில் ஹாப்ஸ் முதல் குழந்தையாகப் பிறந்தார். நகரத்தின் ஏழ்மையான பகுதியில் வாழ்ந்து வந்தார்[3]. ஹாப்சின் சிறுவயதின் பெரும்பகுதியானது ஏழ்மையாகவே வாழ்ந்தார்.[1] பின் துடுப்பாட்டத்தையே தனது தொழிலாகக் கொண்டார்[4]. 1889 ஆம் ஆண்டில் ஜீசஸ் கல்லூரியில் தோட்டக்காரராகவும் துடுப்பாட்ட நடுவராகவும் இவருக்கு வேலை கிடைத்தது.[5]
ஹாப்சின் சிறுவயதில் தனக்கு எப்போதெல்லாம் நேரம் கிடைக்குமோ அப்போதெல்லாம் துடுப்பாட்டம் விளையடியுள்ளார். இவரின் வீட்டிற்கு அருகில் தான் முதல்முறையாக துடுப்பாட்டம் விளையாடியுள்ளார்.[6] புனித மேத்யூ துவக்கப்பள்ளியில் ஆரம்பக் கல்வி பயின்றார். பின் 1891 ஆம் ஆண்டில் யார்க் ஸ்ட்ரீட் ஆண்கள் பள்ளியில் பயின்றார். கற்றலில் சுமாரான மாணவராகத் திகழ்ந்த போதிலும் விளையாட்டில் சிறப்பான மாணவராகத் திகழ்ந்தார்.[6] இவரின் விடுமுறைக் காலத்தில் தனது தந்தை பணிபுரிந்த ஜீசஸ் கல்லூரிக்குச் சென்று இவருக்கு உதவி செய்வார்.[7] தனது பள்ளிப் படிப்பின் இறுதி ஆண்டின் போது தனது குடும்ப வறுமையின் காரணமாக காலையில் வீட்டு வேலை செய்து வந்தார்.[8][9] 1895 ஆம் ஆண்டிலிருந்து பள்ளிப்படிப்பை முடித்தபிறகு இவரின் தந்தை பணிபுரிந்த கல்லூரியில் உதவியாளராகப் பணிபுரிந்தார். மேலும் துடுப்பாட்ட அணிகளுக்கு உதவியாளராகப் பணிபுரிந்தார்.[9]
குடும்ப வாழ்க்கை
[தொகு]1900 ஆம் ஆண்டில், கேம்ப்ரிட்ஜின் செயின்ட் மத்தேயுவில் நடைபெற்ற ஒரு மாலை தேவாலய சேவையில் இருந்த போது ஹோப்ஸ் அடா எலன் கேட்ஸை சந்தித்தார். ஹோப்ஸின் கூச்சம் மற்றும் துடுப்பாட்டம் மீதான அதீத ஆர்வம் ஆகியவற்றால் இவர்களது திருமணம் சற்று தள்ளிப்போனது. ஆனால் இந்த தம்பதி, இறுதியில் செப்டம்பர் 26, 1906 அன்று இவர்கள் சந்தித்த தேவாலயத்தில் திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் திருமண நிகழ்வை ரகசியமாக வைக்கத் திட்டமிட்டனர், ஆனால் அது பத்திரிகைகளில் வெளியானது. மேலும், இந்தத் தம்பதி ஹோப்ஸின் சர்ரே குழு உறுப்பினர்களிடமிருந்து பரிசுகளையும் செய்திகளையும் பெற்றது. [10] துடுப்பாட்ட சுற்றுப்பயணங்களினால் தனது மனைவியிடமிருந்து பிரிக்கப்படுவதை ஹோப்ஸ் விரும்பவில்லை, பிற்காலத்தில் இவர் பெரும்பாலும் வெளிநாடுகளில் சுற்றுப் பயணங்களின் போது தனது மனைவியினையும் அழைத்துச் சென்றார். [11] இவர்களுக்கு நான்கு குழந்தைகள் இருந்தன: ஜாக், 1907 இல் பிறந்தார், 1909 இல் லியோனார்ட், 1913 இல் வேரா மற்றும் 1914 இல் ஐவர் ஆகியோர் ஆவர். [12]
ஹோப்ஸும் இவரது மனைவியும் திருமணமான முதல் ஆண்டுகளில் வாடகை வீட்டில் வசித்து வந்தனர். இவர் குழந்தை பருவத்தில் இருந்ததை விட சற்று செல்வந்தராக இருந்த போதிலும் குடும்பம் துவக்க காலத்தில் போதுமான நிதி வசதி இல்லாமல் இருந்தது. [13] இவரது நற்பெயர் அதிகரித்ததால் ஹோப்ஸின் ஊதியம் அதிகரித்தது, இதனால் 1913 வாக்கில் இவர் ஆண்டுதோறும் 375 அமெரிக்க டாலர்களைச் சம்பாதித்து வந்தார் (2018 இல் சுமார் 32,000 க்கு சமம்). 1913 ஆம் ஆண்டில் லண்டனின் வசதியான மற்றும் வளமான பகுதியான கிளாபம் காமனில் தனது சொந்த வீட்டை வாங்கினார். [14] 1920 களின் நடுப்பகுதியில், இங்கிலாந்தில் துடுப்பாட்ட விளையாட்டு மிகவும் பிரபலமானதாக இருந்தது. மேலும், சிறந்த வீரர்கள் தேசிய அளவில் பிரபலமானவர்களாக இருந்தனர். ஹோப்ஸ் மற்ற துடுப்பாட்ட வீரரகளை விட மிகப் பெரிய துடுப்பாட்ட நட்சத்திரமாக இருந்தார். 1925 ஆம் ஆண்டில் இவரது ஆண்டு வருமானம் 1500 அமெரிக்க டாலர்களாக இருந்தது.அந்த சமயத்தில் அது மருத்துவர்களின் ஊதியத்தினை விட அதிகமாக இருந்தது. இதன் விளைவாக, 1928 ஆம் ஆண்டில் இவரது குடும்பம் ஒரு பெரிய வீட்டிற்கு குடிபெயர்ந்தது. ஹோப்ஸ் தனது குழந்தைகளை தனியார் பள்ளிகளுக்கு அனுப்பினார். [15] இவர் பெரும்பாலான சமகால துடுப்பாட்ட வீரர்களை விட அதிக நிதி சுதந்திரத்தை அடைந்தார்.ஆனால் எப்போதும் தனது மனைவி மற்றும் குழந்தைகளுக்கு தனது குழந்தைப் பருவத்தில் கிடைக்காத பாதுகாப்பை வழங்குவதில் முதலில் அக்கறை கொண்டிருந்தார். [16]
ஓய்விற்குப் பிறகு
[தொகு]1934 இல் துடுப்பாட்டத்தில் இருந்து ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து, ஹோப்ஸ் ஒரு பத்திரிகையாளராகத் தொடர்ந்து பணியாற்றினார், முதலில் ஜாக் இங்காமுடன், பின்னர் ஜிம்மி போல்டனுடன் இணைந்து எழுத்தாளராகப் பணியாற்றினார். இவர் எம்.சி.சி குழுவுடன் 1936-37 இல் ஆஸ்திரேலியாவுக்குச் சென்று நான்கு நூல்களை வெளியிட்டார். இவை 1930 ஆம் ஆண்டுகளில் அதிகமாக விற்பனையானது. இவர் பொதுவாக சுய விளம்பரம் அல்லது சர்ச்சைகளைத் தவிர்த்தார். [17] 1930 ஆம் ஆண்டுகளின் மத்தியில் இவரது மனைவி மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் பலவீனமடைந்து கொண்டிருந்தார். [18] ஹோப்ஸ் தனது ஓய்வு நேரத்தில் பல தொண்டு நிறுவனஙளுக்கு சேவை செய்தார். அதே வேளையில் சங்கங்களில் துடுப்பாட்டம் விளையாடினார்[19]
சான்றுகள்
[தொகு]- ↑ 1.0 1.1 Howat, Gerald M. D. (2011) [2004]. "Hobbs, Sir John Berry (Jack) (1882–1963)". Oxford Dictionary of National Biography (online ed.). Oxford University Press. பார்க்கப்பட்ட நாள் 11 March 2012.
- ↑ McKinstry, p. 21.
- ↑ McKinstry, pp. 21–24, 29.
- ↑ Arlott, p. 18.
- ↑ McKinstry, p. 31.
- ↑ 6.0 6.1 McKinstry, p. 27.
- ↑ Arlott, p. 22.
- ↑ Arlott, pp. 21–22.
- ↑ 9.0 9.1 McKinstry, p. 35.
- ↑ McKinstry, pp. 66–67.
- ↑ Howat, Gerald M. D. (2011) [2004]. "Hobbs, Sir John Berry (Jack) (1882–1963)". Oxford Dictionary of National Biography (online ed.). Oxford University Press. பார்க்கப்பட்ட நாள் 11 March 2012. (subscription or UK public library membership required)
- ↑ McKinstry, pp. 68–69.
- ↑ McKinstry, p. 69.
- ↑ McKinstry, p. 142.
- ↑ McKinstry, pp. 240–45.
- ↑ Howat, Gerald M. D. (2011) [2004]. "Hobbs, Sir John Berry (Jack) (1882–1963)". Oxford Dictionary of National Biography (online ed.). Oxford University Press. பார்க்கப்பட்ட நாள் 11 March 2012. (subscription or UK public library membership required)
- ↑ McKinstry, pp. 366–67.
- ↑ McKinstry, p. 368.
- ↑ McKinstry, pp. 369–70.
உசாத்துணைகள்
[தொகு]- அர்லாட், ஜான் (1981). ஜாக் ஹாப்ஸ்: தெ மாஸ்டர். இலண்டன்: ஜான் முர்ரே. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7195-3886-6.
- கிரீன், Bennyஅபென்னி, ed. (1982). விசுடன் ஆந்தோலஜி. London: Queen Anne Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7472-0706-2.
{{cite book}}
: Unknown parameter|editor1link=
ignored (help) - Mason, Ronald (1960). ஜாக் ஜாப்ஸ் சிறந்த துடுப்பாட்ட வீரர். London: Hollis & Carter. இணையக் கணினி நூலக மைய எண் 752987944.
- மார்ஷல், மைக்கேல் (1987). ஜென்டில்மன் அண்ட் பிளேயர்ஸ். இலண்டன்: Grafton Books. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-246-11874-1.
- McKinstry, Leo (2011). இங்கிலாந்தின் சிறந்த துடுப்பாட்டக்காரர்:ஹாப்ஸ். London: Yellow Jersey Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-224-08329-4.
- பர்பி, பட்ரிக் (2009). தெ செஞ்சூரியன். Fairfield Books. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-9560702-4-1.
- Robertson-Glasgow, R. C. (1943). சில பந்து வீச்சாளர்கள், மட்டையாளர்கள் 1920–1940. London: T. Werner Laurie. இணையக் கணினி நூலக மைய எண் 3257334.
- Swanton, E. W. (1999). எனது காலத்தின் சிறந்த துடுப்பாட்டக்காரர்கள். London: Andre Deutsch. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-233-99746-6.
வெளியிணைப்புகள்
[தொகு]கிரிக்கின்ஃபோவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு: ஜாக் ஹாப்ஸ்