செரங்காவ் ஜாபோர் நெடுஞ்சாலை
|
மலேசிய கூட்டரசு சாலை 14 Malaysia Federal Route 14 Laluan Persekutuan Malaysia 14 | |
|---|---|
| செரங்காவ் ஜாபோர் நெடுஞ்சாலை Jerangau–Jabor Highway Lebuhraya Jerangau-Jabor | |
| வழித்தடத் தகவல்கள் | |
| நீளம்: | 179.63 km (111.62 mi) |
| பயன்பாட்டு காலம்: | 1977[1] – |
| வரலாறு: | கட்டுமானம் முடிவு 1979[2] |
| முக்கிய சந்திப்புகள் | |
| வடக்கு முடிவு: | கோலா திராங்கானு, திராங்கானு |
புக்கிட் பாயோங்-தெலிமுங் | |
| தெற்கு முடிவு: | குவாந்தான் மாற்றுவழி, குவாந்தான், பகாங் |
| அமைவிடம் | |
| முதன்மை இலக்குகள்: | கோலா பெராங்; அஜில்; ஜெரங்காவ்; புக்கிட் பீசி; பண்டார் அல்-முக்தாபி பில்லா சா; பண்டார் செனி பாரு |
| நெடுஞ்சாலை அமைப்பு | |
மலேசிய கூட்டரசு சாலை 14 அல்லது செரங்காவ் ஜாபோர் நெடுஞ்சாலை (ஆங்கிலம்: Malaysia Federal Route 14 அல்லது Jerangau–Jabor Highway; மலாய்: Laluan Persekutuan Malaysia 14 அல்லது Lebuhraya Jerangau-Jabor) என்பது தீபகற்ப மலேசியா, திராங்கானு, கோலா திராங்கானு மாவட்டம், கோலா திராங்கானு நகரத்தையும்; [பகாங்]], குவாந்தான் நகரத்தையும் இணைக்கும் கூட்டரசு சாலையாகும்.[3]
179.63 கி.மீ (111.62 மைல்) நீளம் கொண்ட இந்தச் சாலை மலேசியாவின் இரு முக்கிய நகரஙகளான கோலா திராங்கானு நகரம்; மற்றும் குவாந்தான் நகரம்; ஆகிய இரு மாநிலத் தலைநகரங்களையும் இணைக்கும் மிக முக்கியமான சாலையாக அறியப்படுகிறது.
அமைவு
[தொகு]மலேசிய கூட்டரசு சாலை 14; மலேசிய கூட்டரசு சாலை 3-யுடன் இணையாகச் செல்கிறது. இதில் மலேசிய கூட்டரசு சாலை 3 என்பது ஒரு கடலோர நெடுஞ்சாலையாகும்; செரங்காவ் ஜாபோர் நெடுஞ்சாலை எனும் மலேசிய கூட்டரசு சாலை 14; உட்புறப் பகுதி வழியாகச் செல்கிறது.
மலேசிய கூட்டரசு சாலை 14; மலேசிய கூட்டரசு சாலை 3; ஆகிய இரண்டு நெடுஞ்சாலைகளும் ஒரே மாதிரியானவை (சுமார் 200 கி.மீ.) நீளம் கொண்டவை. எனினும் மலேசிய கூட்டரசு சாலை 3 எனும் செரங்காவ் ஜாபோர் நெடுஞ்சாலை தன் வழியில் குறைவான நகரங்களைக் கடந்து செல்கிறது. அந்த வகையில் செரங்காவ் ஜாபோர் நெடுஞ்சாலை பயண நேரத்தையும் கணிசமாகக் குறைக்கிறது.
2001-ஆம் ஆண்டில் கிழக்கு கடற்கரை விரைவுச்சாலை கட்டப்படும் வரையில் செரங்காவ் ஜாபோர் நெடுஞ்சாலைதான், தீபகற்ப மலேசியாவின் கிழக்குக் கரையில் மிக அதிகமாகப் பயன்படுத்தப்பட்ட நெடுஞ்சாலையாகும்.[4]
பொது
[தொகு]மலேசிய கூட்டரசு சாலை 13-இன் கிலோமீட்டர் 0 (Kilometre Zero) என்பது பகாங் மாநிலத்தின் [[குவாந்தான்] நகரத்தின் மாற்றுவழிச்சாலையில் (Kuantan Bypass) உள்ளது.
மலேசிய கூட்டரசு சாலை 13-இன் பெரும்பாலான பிரிவுகள், ஜேகேஆர் R5 (JKR R5) சாலைத் தரத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ளன; மேலும் அதிகபட்ச வேக வரம்பு 90 கி.மீ. (56 மைல்) வரை அனுமதிக்கப் படுகிறது.
இடைமாற்று வழிகளின் பட்டியல்
[தொகு]| கிமீ | வெளிவழி | இணைமாற்றம் | இலக்கு | குறிப்புகள் | |
|---|---|---|---|---|---|
0 | குவாந்தான் குவாந்தான் மாற்றுவழி | வடக்கு தென் மேற்கு | துரும்பேட் மாற்றுவழி | ||
| ஜாபோர் (கிழக்கு) இடைமாற்றம் | மேற்கு கோலா திராங்கானு சுக்காய் (கெமாமான்) கோலாலம்பூர் கம்பாங் வடகிழக்கு சுல்தான் அகமது சா கடல்சார் கல்விக்கழகம் (AMSAS) மலேசிய கடல்சார் காவல்துறை (MMEA Academy) தெற்கு அஸ்பா தேசா சாலை | ||||
விளக்கம்
[தொகு]- விரைவுச்சாலை: (ஆங்கிலம்: Expressway; மலாய்: Lebuhraya).
- மலேசிய விரைவுச்சாலை: (ஆங்கிலம்: Malaysian Expressway; மலாய்: Lebuhraya Malaysia)
- நெடுஞ்சாலை (ஆங்கிலம்:: Highway; மலாய்: Laluan)
- மலேசிய நெடுஞ்சாலை: (ஆங்கிலம்: Malaysian Highway; மலாய்: Laluan Malaysia).
- கூட்டரசு சாலை (ஆங்கிலம்: Federal Route; மலாய்: Laluan Persekutuan)
- மலேசியக் கூட்டரசு சாலை (ஆங்கிலம்: Malaysia Federal Route; மலாய்: Laluan Persekutuan Malaysia)
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Penyata Rasmi Parlimen, Dewan Rakyat, Parlimen Keempat, Penggal Kedua" (PDF) (in மலாய்). Parliament of Malaysia. 1976-12-06. Retrieved 2015-02-28.
- ↑ "Penyata Rasmi Parlimen, Dewan Rakyat, Parlimen Kedua Belas, Penggal Ketiga, Mesyuarat Kedua" (PDF) (in மலாய்). Parliament of Malaysia. 2010-06-22. Retrieved 2015-02-28.
- ↑ Senarai Jalan Persekutuan Utama பரணிடப்பட்டது 2011-07-28 at the வந்தவழி இயந்திரம்
- ↑ "XPDC Teganu Kita 2015 Part 3: Lebuhraya Jerangau-Jabor FT14 dan sejarahnya" (in மலாய்). Blog Jalan Raya Malaysia. 2015-02-18. Retrieved 2015-02-28.

