மலேசிய கூட்டரசு சாலை 54
மலேசிய கூட்டரசு சாலை 54 Malaysia Federal Route 54 Laluan Persekutuan Malaysia 54 | |
---|---|
கோலா சிலாங்கூர்-கெப்போங் சாலை Kuala Selangor–Kepong Road Jalan Kepong Kuala Lumpur Road Jalan Kuala Selangor–Kepong | |
சுங்கை பூலோ சாலை (2022) | |
வழித்தடத் தகவல்கள் | |
பராமரிப்பு மலேசிய பொதுப்பணித் துறை | |
நீளம்: | 45.60 km (28.33 mi) |
முக்கிய சந்திப்புகள் | |
மேற்கு முடிவு: | அசாம் ஜாவா, கோலா சிலாங்கூர், சிலாங்கூர் |
கூட்டரசு சாலை 5 B109 பாரிட் மகாங் சாலை B25 குவாங் சாலை கோலாலம்பூர் வட்டச் சாலை 2 | |
கிழக்கு முடிவு: | கெப்போங் வட்டச்சுற்று; கோலாலம்பூர் |
அமைவிடம் | |
முதன்மை இலக்குகள்: | புக்கிட் ரோத்தான்; இஜோக்; பாயா ஜாராஸ்; சுங்கை பூலோ; டாமன்சாரா; கெப்போங்; பத்து மலை |
நெடுஞ்சாலை அமைப்பு | |
கோலா சிலாங்கூர்-கெப்போங் சாலை அல்லது கெப்போங் சாலை அல்லது மலேசிய கூட்டரசு சாலை (ஆங்கிலம்: Malaysia Federal Route 54; அல்லது Kuala Selangor–Kepong Road); மலாய்: Laluan Persekutuan Malaysia 54 அல்லது Jalan Kuala Selangor–Kepong) என்பது மலேசியா, சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள கூட்டரசு சாலை ஆகும்.[1]
இந்தச் சாலை 45.60 கிமீ (28.33 மைல்) நீளம் கொண்டது; மற்றும் கோலா சிலாங்கூர் அருகே உள்ள அசாம் ஜாவா நகரத்தையும் கோலாலம்பூர் மாநகருக்கு அருகில் உள்ள கெப்போங் நகரையும் இணைக்கிறது. மலேசிய கூட்டரசு சாலை 5 -இல் இருந்து கோலாலம்பூருக்குச் செல்லும் முதன்மைச் சாலையாக விளங்குகிறது
கோலா சிலாங்கூர்-கெப்போங் சாலை, கோலாலம்பூர் மாநகரத்திற்குச் செல்வதற்கான ஒரு முக்கிய வழித்தடமாகவும் உள்ளது. 2011-ஆம் ஆண்டில் கோலாலம்பூர்-கோலா சிலாங்கூர் விரைவுச்சாலை (Kuala Lumpur–Kuala Selangor Expressway) (LATAR Expressway) கட்டப்படுவதற்கு முன்னர் கோலா சிலாங்கூர்-கெப்போங் சாலை தான் அப்பகுதியில் முதன்மைச் சாலையாக விளங்கியது.
பொது
[தொகு]மலேசிய கூட்டரசு சாலை -இன் கிலோமீட்டர் 0; கோலா சிலாங்கூர், அசாம் ஜாவா சிறு நகரில், மலேசிய கூட்டரசு சாலை 5-இன் சாலைப் பரிமாற்றத்தில் உள்ளது. இந்தச் சாலையில், செரி டாமன்சாரா–கெப்போங் பகுதியில் மலேசிய கூட்டரசு சாலை 5யின் கோலாலம்பூர் மத்திய வட்டச் சாலை 2 மட்டுமே கடந்து செல்கிறது.
அமைவு
[தொகு]இந்த மலேசிய கூட்டரசு சாலை 54-க்கு வேறு மாற்று வழி இல்லை, மேலும் விசையுந்து பாதைகள் கொண்ட தனிப்பட்ட சாலைப் பிரிவுகள் எதுவும் இல்லை. 2020-ஆம் ஆண்டு வரை இஜோக்கில் இருந்து சுங்கை பூலோ வரை பல ஆபத்தான வளைவுகள் இருந்தன.
தற்போது மலேசிய பொதுப்பணித் துறையினால் நான்கு வழிச்சாலையாக மேம்படுத்தப்பட்டு; அந்த ஆபத்தான வளைவுகள் அகற்றப்பட்டு நேர்கோட்டுச் சாலையாக உருவாக்கம் பெற்றுள்ளது.
சாலைத் தரம்
[தொகு]இந்தக் கூட்டரசு சாலையின் பெரும்பாலான பகுதி, ஜேகேஆர் R5 (JKR R5) சாலைத் தரத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் அதிகபட்ச வேக வரம்பு 90 கி.மீ. (56 மைல்) வரை அனுமதிக்கப் படுகிறது. அத்துடன், சில பிரிவுகளில் விசையுந்து பாதைகளும் உள்ளன.[2]
விளக்கம்
[தொகு]- மலேசிய கூட்டரசு சாலை (ஆங்கிலம்: Malaysia Federal Route; மலாய்: Laluan Persekutuan Malaysia)
- மலேசிய நெடுஞ்சாலை: (ஆங்கிலம்: Malaysian Highway; மலாய்: Laluan Malaysia)
- மலேசிய விரைவுச்சாலை: (ஆங்கிலம்: Malaysian Expressway; மலாய்: Lebuhraya Malaysia)
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Statistik Jalan (Edisi 2013). Kuala Lumpur: Malaysian Public Works Department. 2013. pp. 16–64. பன்னாட்டுத் தர தொடர் எண் 1985-9619.
- ↑ "Construction of roads in Malaysia implemented mainly by the Federal Government and State Government. However, since the mid-1980s, construction of toll roads has been started by private companies who then authorized by the government to charge tolls to road users" (PDF). www.piarc.org/. பார்க்கப்பட்ட நாள் 14 October 2024.