உள்ளடக்கத்துக்குச் செல்

வடக்கு கிள்ளான் புறவழிச் சாலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மலேசிய கூட்டரசு சாலை 20
Malaysia Federal Route 20
Laluan Persekutuan Malaysia 20

வடக்கு கிள்ளான் புறவழிச் சாலை
North Klang Straits Bypass
வழித்தடத் தகவல்கள்
AH141
வடக்கு கிள்ளான் நீரிணை புதிய புறவழிச்சாலை புதிய வடக்கு கிள்ளான் புறவழிச்சாலை- இன் பகுதி
பராமரிப்பு Grand Sepadu Sdn Bhd
நீளம்:15.1 km (9.4 mi)
பயன்பாட்டு
காலம்:
1983 –
வரலாறு:கட்டுமானம் 1985
முக்கிய சந்திப்புகள்
வடமேற்கு முடிவு:நார்த்போர்ட், கிள்ளான் துறைமுகம்
  FT 103 நார்த்போர்ட்

வடக்கு கிள்ளான் நீரிணை புதிய புறவழிச்சாலை AH141 கிள்ளான் புறவழிச்சாலை

FT 5 கூட்டரசு சாலை 5
FT 3217 மெரு சாலை

மலேசிய வடக்கு-தெற்கு விரைவுச்சாலை, வடக்கு வழித்தடம் AH141 கிள்ளான் பள்ளத்தாக்கு

FT 2 கூட்டரசு சாலை

B6 பத்து தீகா லாமா சாலை

தென்கிழக்கு முடிவு:சுங்கை ராசாவ்
அமைவிடம்
முதன்மை
இலக்குகள்:
காப்பார், புக்கிட் ராஜா கிள்ளான்
நெடுஞ்சாலை அமைப்பு

வடக்கு கிள்ளான் புறவழிச் சாலை அல்லது மலேசிய கூட்டரசு சாலை 20 (ஆங்கிலம்: Malaysia Federal Route 20; அல்லது North Klang Straits Bypass; மலாய்: Laluan Persekutuan Malaysia 20) என்பது மலேசியா, சிலாங்கூர், கிள்ளான் மாவட்டம், கிள்ளான் துறைமுகத்தில் உள்ள ஒரு சாலை ஆகும்.[1]

இந்தச் சாலை, பல சாலைகளின் உதவியுடன் சிலாங்கூர், கிள்ளான் துறைமுகத்தை (Port Klang) இணைக்கிறது.[2]

பொது

[தொகு]

1970-களின் பிற்பகுதியில் கிள்ளான் துறைமுகத்திற்கு புறவழிச்சாலை அமைக்கும் திட்டம் தொடங்கியது. கட்டுமானம் 1983-இல் தொடங்கப்பட்டு 1 சனவரி 1985-இல் நிறைவடைந்தது.

இந்தச் சாலை 15.1 கி.மீ. (9.4 மைல்) நீளம் கொண்டது; மற்றும் சிலாங்கூர், கிள்ளான் துறைமுகத்திற்குச் செல்லும் முக்கியச் சாலையாக விளங்குகிறது. இந்த நெடுஞ்சாலையில் தினமும் ஏராளமான சரக்கு சுமையுந்துகள் செல்கின்றன.

மலேசிய கூட்டரசு சாலை 19-இன் பெரும்பாலான பிரிவுகள், ஜேகேஆர் R5 (JKR R5) சாலைத் தரத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ளன; மேலும் அதிகபட்ச வேக வரம்பு 90 கி.மீ. (56 மைல்) வரை அனுமதிக்கப் படுகிறது.[3]

சிறப்புக் கூறுகள்

[தொகு]

இந்தச் சாலையின் சிறப்புக் கூறுகள்:

  • இருவழிப் பாதைகள்
  • அவசர பாதை உள்ளது
  • சுங்கச் சாவடிகள்
  • வாகனங்களின் வேகத்தைக் கண்டறியும் பொறிகள்
  • ஏராளமான சரக்கு கொள்கலன் சுமையுந்துகள்
  • பல கிராமங்கள்
  • பாரிய விபத்துகள் பகுதி
  • பல போக்குவரத்து விளக்குகள்

விளக்கம்

[தொகு]

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Lembaga Lebuhraya Malaysia". www.llm.gov.my. Retrieved 14 October 2024.
  2. "Public Works Department (JKR) Malaysia" (PDF). JKR Malaysia. Retrieved 14 October 2024.
  3. "Construction of roads in Malaysia implemented mainly by the Federal Government and State Government. However, since the mid-1980s, construction of toll roads has been started by private companies who then authorized by the government to charge tolls to road users" (PDF). www.piarc.org/. Retrieved 14 October 2024.

வெளி இணைப்புகள்

[தொகு]