உள்ளடக்கத்துக்குச் செல்

மலேசிய கடல்சார் காவல்துறை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மலேசிய கடல்சார் காவல்துறை
Malaysian Maritime Enforcement Agency
Agensi Penguatkuasaan Maritim Malaysia
اڬينسي ڤڠواتكواس ماريتيم مليسيا
கடல்சார் காவல் படையின் அணிச்சின்னம்
கடல்சார் காவல் படையின் அணிச்சின்னம்
கடல்சார் காவல்படையின் சின்னம்
கடல்சார் காவல்படையின் சின்னம்
கடல்சார் காவல்படையின் கொடி
கடல்சார் காவல்படையின் கொடி
சுருக்கம்MMEA / APMM
குறிக்கோள்காவல், பாதுகாத்தல், கப்பாற்றுதல்
Guard, Protect, Save
Mengawal, Melindung, Menyelamat
துறையின் கண்ணோட்டம்
உருவாக்கம்பெப்ரவரி 15, 2005 (2005-02-15)
பணியாளர்கள்4,500 அதிகாரிகள்[1]
சட்ட ஆளுமைமலேசிய அரசாங்கம்
அதிகார வரம்பு அமைப்பு
செயல்பாட்டு அதிகார வரம்புமலேசியா
சட்ட அதிகார வரம்புமலேசிய கடல்சார் மண்டலம்
ஆட்சிக் குழு மலேசிய அரசாங்கம்
Constituting instrument
  • Malaysian Maritime Enforcement Agency Act 2004 (Act 633)
செயல்பாட்டு அமைப்பு
தலைமையகம்கூட்டரசு நிர்வாக மையம் புத்ராஜெயா
அமைச்சர்
துறை நிருவாகி
  • அட்மிரல் டத்தோ முகமட் அமீட் அமீன்[2]
அமைச்சுமலேசிய உள்துறை அமைச்சு
வசதிகள்
ரோந்து கப்பல்கள்s74
ரோந்து படகுகள்s257
உலங்கூர்திகள்s
  • AgustaWestland AW139
  • Eurocopter AS365 Dauphin
நீர் நில வானூர்திகள்sபொம்பார்டியர் 415
UAVs
  • தேல்ஸ் புல்மார்
  • ALTI Transition
இணையத்தளம்
www.mmea.gov.my

மலேசிய கடல்சார் காவல்துறை (மலாய்: Agensi Penguatkuasaan Maritim Malaysia (APMM); ஆங்கிலம்: Malaysia Coast Guard; Malaysian Maritime Enforcement Agency) (MMEA); சீனம்: 马来西亚海事执法局) என்பது மலேசியாவின் கடல்சார் பகுதிகளில் சட்ட ஒழுங்கைப் பராமரிக்கும் முக்கிய அரசு அமைப்பு; மலேசிய உள்துறை அமைச்சின் கீழ் இயங்குகிறது. இதன் தலைமையகம் புத்ராஜெயா கூட்டரசு நிர்வாக மையத்தில் உள்ளது. [3]

இந்தத் துறை, மலேசிய கடல்சார் மண்டலம் மற்றும் கடல் பகுதிகளில் தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கிறது; நாட்டின் அவசரகாலநிலை, குறிப்பிடத்தக்க நெருக்கடிகள் அல்லது போர்க்காலம்; ஆகியவற்றின் போது மலேசிய ஆயுதப்படைகளின் கீழ் ஒருங்கிணைக்கப்படலாம்.[4]

இந்தத் துறை, ஐக்கிய அமெரிக்காவின் கடலோர காவல்படை (United States Coast Guard)[5] மற்றும் சப்பான் கடலோர காவல்படை (Japan Coast Guard) ஆகியவற்றுடன் நெருங்கிய உறவைப் பேணுகிறது.[6][7]

வரலாறு

[தொகு]
மலேசிய கடல்சார் காவல் துறையின் Eurocopter AS365 Dauphin ரக உலங்கூர்தி

மலேசிய கடல்சார் காவல் துறையின் வரலாறு, 21 ஏப்ரல் 1999 அன்று, மலேசிய தேசிய பாதுகாப்பு மன்றத்தில் (National Security Council of Malaysia), மலேசியப் பிரதமர் துறையால் நடத்தப்பட்ட ஒரு சந்திப்பு நிகழ்வின் மூலமாகத் தொடங்குகிறது. அன்றைய தினம், மலேசிய கடலோர காவல்படையை நிறுவுவதற்கான சாத்தியக்கூறுகள் எனும் ஆய்வு அறிக்கை அந்த நிகழ்வில் சமர்ப்பிக்கப்பட்டது.[8]

16 ஏப்ரல் 2003-இல் அறிக்கையின் முடிவுகளை மலேசிய அமைச்சரவை ஏற்றுக் கொண்டது. டத்தோ அபு தாலிப் அஜி அருன் என்பவரின் தலைமையில், மலேசிய கடல்சார் அமலாக்கத் துறையின் உருவாக்கத்தை ஒழுங்கமைக்கும் குழு உருவாக்கப்பட்டது.

மலேசிய கடல்சார் அமலாக்கச் சட்டம்

[தொகு]

மே 2004-இல், மலேசிய நாடாளுமன்றத்தில் மலேசிய கடல்சார் அமலாக்கச் சட்டம் 2004 (சட்டம் 633) (Malaysian Maritime Enforcement Agency Act 2004) (Act 633) இயற்றப்பட்டது. அதன் வழி, மலேசிய கடல்சார் அமலாக்கத் துறை முறையாக நிறுவப்பட்டது.

அந்தச் சட்டம் 25 சூன் 2004 அன்று; யாங் டி பெர்துவான் அகோங் அவர்களிடமிருந்து அரச ஒப்புதலைப் பெற்றது. அதே ஆண்டு சூலை 1 அன்று, மலேசிய அரசிதழில் வெளியிடப்பட்டது. 15 பிப்ரவரி 2005 அன்று, சட்டம் அமலுக்கு வந்தது.

மலேசிய கடல்சார் அமலாக்கத் துறை

[தொகு]

10 அக்டோபர் 2005 அன்று, அப்போதைய துணைப் பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜிப் ரசாக் அவர்களால், மலேசிய கடல்சார் அமலாக்கத் துறை பொதுமக்களுக்கு முதன்முறையாக அறிமுகப்படுத்தப்பட்டது.

30 நவம்பர் 2005 அன்று, மலேசிய கடல்சார் அமலாக்கத் துறை, தன் கப்பல்களின் வழி ரோந்துப் பணிகளைத் தொடங்கியது.[8] 21 மார்ச் 2006 அன்று, மலேசிய கடல்சார் அமலாக்கத் துறை, சிறப்புரிமை பெற்ற மலேசிய அரசாங்க நிறுவனங்களின் ஒரு பகுதியாக தொடங்கப்பட்டது.

புதிய கப்பல்கள்

[தொகு]

28 ஏப்ரல் 2017 அன்று, மலேசிய கடல்சார் அமலாக்கத் துறை, பன்னாட்டு அடையாளத்திற்காக மலேசிய கடல்சார் காவல்துறை என முறைப்படி மறுபெயரிடப்பட்டது.[3] புதிய கப்பல்களும் சேவையில் ஈடுபடுத்தப்பட்டன. இருப்பினும், மலேசிய கடல்சார் அமலாக்க நிறுவனம் எனும் பெயர் பணி நோக்கங்களுக்காகத் தக்கவைக்கப்பட்டது.[3]

மே 2018 இல், மலேசியாவில் புதிய அரசாங்கத்தின் கீழ், மலேசிய கடல்சார் அமலாக்கத் துறை; மலேசிய உள்துறை அமைச்சுடன் ஒருங்கிணைக்க திட்டமிடப்பட்டது.[9] நவம்பர் 2018 இல், மலேசியாவின் வரவு செலவுத் திட்டம் 2019-இன் கீழ், அந்த முடிவு உறுதி செய்யப்பட்டது.[10]

மலேசிய கடல்சார் மண்டலம்

[தொகு]
மலேசிய கடல்சார் காவல் துறையினரின் மீட்புப் பணி
ஐக்கிய அமெரிக்க கடல்சார் காவல் துறையினருடன் கூட்டுப் பயிற்சி

உள்நாட்டு நீர்ப்பகுதி மற்றும் வட்டாரக் கடல் பகுதி

[தொகு]
  • வட்டாரக் கடல் பகுதி: 12 கடல் மைல்கள் (22 கி.மீ.)
    • (Territorial Sea: 12 nautical miles (22 km) from baseline)
  • இறையாண்மை: மலேசிய நிலப்பரப்பின் பகுதி
    • (Sovereignty: part of the territory of Malaysia)
  • அனைத்து கப்பல்களுக்கும் பொதுப் பயன்பாட்டிற்கு உட்பட்டது
    • (Subject to the right of innocent passage for all vessels)

தொடர்ச்சி மண்டலம்

[தொகு]
  • கடற்கரையிலிருந்து 24 கடல் மைல்கள் (44 கி.மீ.)
    • (24 nautical miles (44 km) from coast)
  • சுங்கம், நிதி, குடிவரவு அல்லது சுகாதாரச் சட்டங்களை மீறுவதைத் தடுக்க அல்லது தண்டிக்க வ்ரையறுக்கப்பட்ட அதிகார வரம்பு
    • (Jurisdiction to prevent or punish infringement of customs, fiscal, immigration or sanitary laws)

சிறப்பு பொருளாதார மண்டலம்

[தொகு]
  • கடற்கரையிலிருந்து 200 கடல் மைல்கள் (370 கி.மீ.)
    • (200 nautical miles (370 km) from coast)
  • கடற்பரப்பு மற்றும் நீர் வளங்களை நிர்வகிப்பதற்கான இறையாண்மை உரிமைகள்.
    • (Sovereign rights over the management of the resources of the seabed and water column)
  • அதிகார வரம்பு: - செயற்கைத் தீவுகளின் கட்டுமானம்- கடல் அறிவியல் ஆய்வு - கடல் சூழலைப் பாதுகாத்தல்
    • (Jurisdiction in respect of: - construction of artificial islands- marine scientific research - protection of the marine environment)

தரவரிசை அமைப்பு

[தொகு]

உயர் அதிகாரிகள்

[தொகு]
தளபதி

Laksamana Maritim
இலக்சமணா

Laksamana Madya Maritim
துணை இலக்சமணா

Laksamana Muda Maritim
முதல் இலக்சமணா

Laksamana Pertama Maritim
கேப்டன்

Kepten Maritim
கொமாண்டர்

Komander Maritim
லெப்டிணன்ட் கொமாண்டர்

Leftenan Komander Maritim
லெப்டிணன்ட்

Leftenan Maritim
லெப்டிணன்ட் மதியா

Leftenan Madya Maritim
லெப்டிணன்ட் மூடா

Leftenan Muda Maritim
Laksamana Maritim Laksamana Madya Maritim Laksamana Muda Maritim Laksaman Pertama Maritim Kepten Maritim Komander Maritim Leftenan Komander Maritim Leftenan Maritim Leftenan Madya Maritim Leftenan Muda Maritim

அதிகாரிகள் / வீரர்கள்

[தொகு]
வாரண்ட் அதிகாரி 1

Pegawai Waran I Maritim
வாரண்ட் அதிகாரி 2

Pegawai Waran II Maritim
பிந்தாரா கானான்

Bintara Kanan Maritim
பிந்தாரா மூடா

Bintara Muda Maritim
லசுகார் கானான்

Laskar Kanan Maritim
லசுகார் 1

Laskar Kelas I Maritim
லசுகார் 2

Laskar Kelas II Maritim
Pegawai Waran I Maritim Pegawai Waran II Maritim Bintara Kanan Maritim Bintara Muda Maritim Laskar Kanan Maritim Laskar Kelas I Maritim Laskar Kelas II Maritim

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. International Institute for Strategic Studies (15 February 2023). The Military Balance 2023. London: Taylor & Francis. p. 272. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1000910704.
  2. "Bernama - Hamid Mohd Amin Dilantik Ketua Pengarah APMM Yang Baharu". https://www.bernama.com/bm/am/news.php?id=2242011. 
  3. 3.0 3.1 3.2 Rahmat, Ridzwan (28 April 2017). "MMEA rebrands service as 'Malaysia Coast Guard'". www.janes.com.
  4. "APMM Laporan Tahunan 2014". Agensi Penguatkuasaan Maritim Malaysia: 13. 2014. 
  5. "Kursus Small Boat Operations Instructor Training Di WILSAR". www.mmea.gov.my. 1 July 2013. Archived from the original on 14 பிப்ரவரி 2018. பார்க்கப்பட்ட நாள் 22 செப்டம்பர் 2024. {{cite web}}: Check date values in: |access-date= and |archive-date= (help)
  6. "Maritim Malaysia – Japan Coast Guard: Tingkatkan Kemahiran Penguat Kuasa Dalam Aspek Keselamatan Maritim". mmea.gov.my. 1 February 2016.[தொடர்பிழந்த இணைப்பு]
  7. "EKSESAIS BERSAMA MARITIM MALAYSIA & JAPAN COAST GUARD (JCG)". mmea.gov.my. 18 July 2014.[தொடர்பிழந்த இணைப்பு]
  8. 8.0 8.1 "APMM Laporan Tahunan 2014". Agensi Penguatkuasaan Maritim Malaysia: 12. 2014. 
  9. Gerard Lourdesamy (24 May 2018). "Merging, consolidating and abolishing federal gov't bodies". MalaysiaKini. https://www.malaysiakini.com/letters/426700. 
  10. Yassin, Muhyiddin (4 November 2018). "Kenyataan Media YB Tan Sri Dato' Hj Muhyiddin Hj Mohd Yassin, Menteri Dalam Negeri - Bajet 2019". Facebook. Archived from the original on 2022-02-26. பார்க்கப்பட்ட நாள் 5 November 2018.

இணையத்தளங்கள்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]