செம்மீசைச் சின்னான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
செம்மீசைச் சின்னான்
Red-whiskered bulbul pair (cropped).jpg
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கினம்
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு: பறவை
வரிசை: Passeriformes
குடும்பம்: Pycnonotidae
பேரினம்: Pycnonotus
இனம்: P. jocosus
இருசொற் பெயரீடு
Pycnonotus jocosus
லினேயசு, 1758
வேறு பெயர்கள்

Otocompsa emeria

செம்மீசைச் சின்னான் அல்லது சிவப்புமீசைச் சின்னான் அல்லது செம்மீசைக் கொண்டைக்குருவி (Red-whiskered Bulbul, Pycnonotus jocosus) என்பது சின்னான் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பாடும் பறவையாகும். இவை பல மித வெப்பமுடைய ஆசிய பகுதிகளான புதிய இடங்களில் அறிமுகப்படுத்தப்பட்டாலும் பல இடங்களில் நன்றாக வாழ்கின்றன. இதன் தனிச்சிறப்புமிக்க கொண்டையையும் சிவப்பு நிறமான புழையையும் மீசையையும் கொண்டு இதனை இனங்காணலாம். இதன் கொண்டை காரணமாக இது கொண்டைக் குருவி என்றும் அழைக்கப்படுகிறது. இப்பறவை பழங்களையும் பூச்சிகளையும் முதன்மை உணவாகக் உட்கொள்கிறது.

வகுப்பு, தொகுப்பு முறையியல்[தொகு]

இவற்றை கரோலஸ் லின்னேயஸ் என்பவர் 1758-ல் அவர் பதித்த "இயற்கை முறைகள்" (Systema Naturae) என்னும் புத்தகத்தில் பதிவேற்றியுள்ளார். இவைகளை சின்னான்களோடு தொகுத்ததை இதுநாள்வரை கடைபிடிக்கின்றனர்.

உள்ளூர்ப்பெயர்கள்[தொகு]

இவற்றிற்கு டுராஹா தெலுகு மொழியில் பிக்லி-பிட்டா, வங்கத்தில் சிப்பாஹி புல்புல் (Sipahi bulbul), தாய்லாந்து மொழியில் கிரொங்-ஹுவா-ஜக் (Krong-hua-juk, กรงหัวจุก), இந்தியில் ஃபரி புல்புல் (Phari-bulbul) அல்லது கனேரா புல்புல் (Kanera bulbul) என்ற பெயர்களால் அழைக்கப்படுகிறது[2].

உருவமைப்பு[தொகு]

இப்பறவை 20 செ.மீ நீளம் இருக்கும். இப்பறவையின் அடிப்பகுதி வெண்ணிறத்திலும் மேற்பகுதி பழுப்பு நிறத்திலும் இருக்கும். இதன் வாழ்நாள் சுமார் 11 ஆண்டுகள் ஆகும்.

பரவல்[தொகு]

இது பரவியுள்ள பகுதிகளில் மலைக் காடுகளிலும் நகர்ப்புறங்களில் உள்ள தோட்டங்களிலும் பரவலாகக் காணப்படுகிறது.

குணாதிசயங்கள்[தொகு]

மரக்கிளைகளில் புலப்படாதவாறு அமர்ந்து கொண்டு பலத்த 3 அல்லது 4 அலைகளாக ஒலியை எழுப்புவதில் வல்லவை.

உணவு[தொகு]

இவை பெரும்பாலும் பழங்களை உண்டாலும், இவை அவ்வப்பொழுது சிறு பூச்சிகளையும் மலர்களில் தேனையும் உட்கொள்கின்றன. பாலுண்ணிகளுக்கு விடம் எனக்கருதப்படும் விதைகளையும் இவை உண்டு மகிழ்கின்றன[3].

இனவிருத்தி[தொகு]

இவைகளின் இனவிருத்திக்காலமானது வட இந்தியாவில் டிசம்பர் முதல் மே வரையிலும், தென்னிந்தியாவிலோ மார்ச் முதல் அக்டோபர் வரையுமாகும்[4]. இவை ஆண்டில் ஒரு முறையோ இரு முறைகளோ இனப்பெருக்கம் செய்யக்கூடும்[5]. ஆண்கள் தங்கள் கொண்டையை ஆட்டியும் தலை குனிந்தும், வாலை விரித்தும், சிறகுகளை காலருகே வைத்தும் கவர்கின்றன[5].

கூடு[தொகு]

கோப்பை வடிவிலான கூட்டினை இவை புதர்களிலும், சுவர்களிலும், சிறு மரங்களிலும் அமைக்கும். கூடுகள் சிரு சுள்ளிகள், வேர்கள், புற்களால் அமைப்பதோடு, பெரிய மரப்பட்டைகல், காகிதம், பிளாஸ்டிக் பைகளாலும் அலங்கரிக்கின்றன[6].

முட்டை[தொகு]

ஒவ்வொரு ஈனிலும் 2 முதல் 3 முட்டைகளை இடுகின்றன[5]. முட்டைத்திருடர்களை திசைதிருப்ப பெண் பறவையினம் தான் அடிபட்டதைப்போல் நடிக்கும்[5]. தரையின் நிறத்தில் இருக்கும் முட்டைகளின் மீது புள்ளிகள் இருக்கும். இவை 16 முதல் 21 மில்லிமீட்டர் நீளம் இருக்கின்றன[7]. 12 நாட்கள் வரை முட்டைகள் பொரியப்பிடிக்கும்[8].

குஞ்சுகளின் பராமரிப்பு[தொகு]

இருபாலினங்களும் குஞ்சுகளை பராமரிக்கின்றன[8]. சிறு வயதில் புழு பூச்சிகளையும், வளர வளர விதைகளும் பழங்களும் குஞ்சுகளுக்கு உணவாக அளிக்கப்படுகிறது[8]. குஞ்சுகள் இறகுகளின்றி பிறக்கின்றன[9]. காகங்களும், செண்பகமும் முட்டைகளையும், குஞ்சுகளையும் வேட்டையாடுகின்றன[8].

மனிதருடன் பரிமாற்றங்கள்[தொகு]

ஒரு காலத்தில் இவை இந்தியாவில் பல இடங்களில் விரும்பி வளர்க்கும் கூண்டுப்பறவையினமாக இருந்தது. C. W. ஸ்மித் என்பவர் தன் குறிப்பில் (Journal of the Asiatic Society of Bengal, பத்தாவது பிரதி, பக்கம் 640)) பின்வருமாறு எழுதியுள்ளார்:

"இப்பறவைகள் பயமறியாததனாலும், எளிதில் திரும்ப பிடிக்க வல்லவை என்பதாலும் உள்ளூர் வாசிகளிடம் பெரும் வரவேற்பு உள்ளது. இவைகள் கையின் மீது அமர கற்றுக்கொள்வதால் இவை அபரிவிதமாக இந்தியக்கடைவீதிகளில் காண முடிகிறது."

தெற்காசியாவின் சில பகுதிகளில் இப்பறவை மனிதர்களால் பிடிக்கப்பட்டு செல்லப் பறவையாக கூண்டுகளில் அடைக்கப்பட்டு வளர்க்கப்படுகிறது.[10].

உசாத்துணை[தொகு]

  1. BirdLife International (2012). "Pycnonotus jocosus". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2012.1. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். 16 சூலை 2012 அன்று பார்க்கப்பட்டது.
  2. Jerdon, TC (1863). The Birds of India. Volume 2, part 1. Military Orphan Press, Calcutta. பக். 92–93. http://www.archive.org/details/birdsofindiabein21jerd. 
  3. Raj, PJ Sanjeeva (1963). "Additions to the list of birds eating the fruit of Yellow Oleander (Thevetia neriifolia )". J. Bombay Nat. Hist. Soc. 60 (2): 457–458. 
  4. Rasmussen, PC and Anderton, JC (2005). Birds of South Asia: The Ripley Guide. Smithsonian Institution and Lynx Edicions. 
  5. 5.0 5.1 5.2 5.3 Begbie, Arundel (1908). "Note on the habits of the Bengal Red-whiskered Bulbul Otocompsa emeria". J. Bombay Nat. Hist. Soc. 18 (3): 680. 
  6. Rising, James D. (2001). "Bulbuls". in Elphick, Chris; Dunning, John B., Jr.; Sibley, David Allen. The Sibley Guide to Bird Life and Behavior. New York: Alfred A. Knopf. பக். 448–449. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-4000-4386-6. 
  7. Herklots GAC (1934). "The Birds of Hong Kong. Part XIV. The Bulbuls" (PDF). Hong Kong Naturalist 5 (1): 1–5. http://hkjo.lib.hku.hk/archive/files/59687c688ef8ac94be677ef3b6225031.pdf. 
  8. 8.0 8.1 8.2 8.3 Ali, S and Ripley, S D (1996). Handbook of the birds of India and Pakistan. 6 (2 ). Oxford University Press. பக். 75–80. 
  9. Carleton, Alison Rand and Owre, Oscar T (1975). "The Red-whiskered Bulbul in Florida:1960–71" (PDF). Auk 92 (1): 40–57. doi:10.2307/4084416. http://sora.unm.edu/sites/default/files/journals/auk/v092n01/p0040-p0057.pdf. 
  10. Philippe, Clergeau; Mandon-Dalger, Isabella (2001). "Fast Colonization of an Introduced Bird: the Case of Pycnonotus jocosus on the Mascarene Islands". Biotropica 33 (3): 542–546. doi:10.1111/j.1744-7429.2001.tb00210.x. https://archive.org/details/sim_biotropica_2001-09_33_3/page/542. 

மேற்கொண்டு படிக்க[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=செம்மீசைச்_சின்னான்&oldid=3521416" இருந்து மீள்விக்கப்பட்டது