உள்ளடக்கத்துக்குச் செல்

சுப்பிரமணிய பாரதி விருது

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சுப்பிரமணிய பாரதி விருது
விருது குறித்தத் தகவல்
பகுப்பு இந்தி இலக்கியம் (2-8 தனிநபர்கள்)
நிறுவியது 1989
முதலில் வழங்கப்பட்டது 1989
கடைசியாக வழங்கப்பட்டது 2007
மொத்தம் வழங்கப்பட்டவை 46
வழங்கப்பட்டது கேந்திரிய இந்தி சன்சுதான்,
இந்திய அரசு
விவரம் இந்திய இலக்கிய விருது
முதல் வெற்றியாளர்(கள்) டா. பிரபாகர் மச்வே
டா. ராசேசுவர் வர்மா
டா. அர்தேவ் பகாரி
டா. என்.ஏ. நாகப்பா
பேரா. ராம்சிங் டோமர்
டா. பக்த் தர்சன்
டா. பி. கோபால் சர்மா
திரு. மங்கல்நாத் சிங்
கடைசி வெற்றியாளர்(கள்) பேரா. நிர்மலா ஜெயின்
பேரா. நந்தகிசோர் நவல்

சுப்பிரமணிய பாரதி விருது (Subramanyam Bharati Award) இந்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தின் நடுவண் இந்தி அமைப்பான கேந்திரிய இந்தி சன்சுதான் ஆண்டுதோறும் இந்தி இலக்கியத்தில் சாதனை படைத்தோருக்கு வழங்கும் ஓர் விருதாகும். இந்தி மொழியின் வளர்ச்சிக்குத் தூண்டுகோலாக இருந்தவர்களுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. 1989ஆம் ஆண்டு தமிழ் மொழியின் மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் நினைவாக இந்த விருது நிறுவப்பட்டது. அவ்வாண்டில் டா. பிரபாகர் மச்வே, டா. ராசேசுவர் வர்மா, டா. அர்தேவ் பகாரி, டா. என்.ஏ. நாகப்பா, பேரா. ராம்சிங் டோமர், டா.பக்த் தர்சன், டா. பி. கோபால் சர்மா மற்றும் திரு. மங்கல்நாத் சிங் ஆகியோருக்கு இந்த விருது வழங்கப்பட்டது. [1]

மேற்கோள்கள்[தொகு]

  1. Award Categories