கோதிகுட்டலபள்ளி
கோதிகுட்டலபள்ளி | |
|---|---|
சிற்றூர் | |
| நாடு | |
| மாநிலம் | தமிழ்நாடு |
| மாவட்டம் | கிருஷ்ணகிரி |
| மொழிகள் | |
| • அதிகாரப்பூர்வமாக | தமிழ் |
| நேர வலயம் | ஒசநே+5:30 (இசீநே) |
| அஞ்சல் குறியீட்டு எண் | 635120 |
கோதிகுட்டலபள்ளி (Kothigutalapalli) என்பது இந்திய ஒன்றியம், தமிழ்நாட்டின், கிருஷ்ணகிரி மாவட்டம், கிருஷ்ணகிரி வட்டத்துக்கு உட்பட்ட ஒரு சிற்றூர் ஆகும். இது மேகலசின்னம்பள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட ஊராகும்.
பெயராய்வு
[தொகு]கோதி என்னும் தெலுங்கு சொல்லுக்கு குரங்கு என்பது பொருள். அப்படியே குட்டல என்பதற்கு தெலுங்கில் மலைகள் என்பது பொருள். இப்பகுதியில் குரங்குகள் கூட்டம் கூட்டமாக இருந்துள்ளன. எனவே இவ்வூருக்கு இந்தப் பெயர் வந்திருக்கலாம் என்கிறார் கோ. சீனிவாசன்.[1]
அமைவிடம்
[தொகு]இந்த ஊரானது மாவட்ட தலைநகரான கிருஷ்ணகிரியிலிருந்து 11 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.
மக்கள் வகைப்பாடு
[தொகு]2011 ஆண்டு மக்கள் கணக்கெடுப்பின்படி இக்கிராமத்தில் 1,058 வீடுகள் உள்ளன. கிராமத்தின் மொத்த மக்கள் தொகையானது 4,402 ஆகும். இதில் ஆண்கள் எண்ணிக்கை 2,127, பெண்களின் எண்ணிக்கை 2,275 என உள்ளது. மக்களின் கல்வியறிவு விகிதமானது 66.92% என உள்ளது. இது தமிழ்நாட்டின் சராசரி எழுத்தறிவு விகிதமான 80.09 % ஐ விடக்குறைவு ஆகும்.[2]