கூட்டத்தில் ஒருத்தன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கூட்டத்தில் ஒருத்தன்
இயக்கம்தா. செ. ஞானவேல்
தயாரிப்புஎஸ். ஆர். பிரகாஷ் பாபு
எஸ். ஆர். பிரபு
கதைதா. செ. ஞானவேல்
இசைநிவாஸ் கே. பிரசன்னா
நடிப்புஅசோக் செல்வன்
பிரியா ஆனந்து
ஒளிப்பதிவுபி. கே. வர்மா
படத்தொகுப்புலியோ ஜான் பவுல்
கலையகம்ரமணியம் டாக்கீஸ்
விநியோகம்ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்
வெளியீடு28 சூலை 2017
ஓட்டம்118 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

கூட்டத்தில் ஒருத்தன் (koottathil oruththan) 2017 ஆம் ஆண்டு அசோக் செல்வன் மற்றும் பிரியா ஆனந்த் நடிப்பில், தா. செ. ஞானவேல் இயக்கத்தில், நிவாஸ் கே. பிரசன்னா இசையில் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியான தமிழ் திரைப்படம். இப்படம் 28 சூலை 2017 இல் வெளியானது.

கதைச்சுருக்கம்[தொகு]

அரவிந்த் (அசோக் செல்வன்) பள்ளியில் படிக்கும் காலத்தில் ஜனனியை (பிரியா ஆனந்த்) நேசிக்கிறான். 12 ஆம் வகுப்பில் மாநில அளவில் சிறந்த மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெறும் ஜனனி கல்லூரியில் ஊடகவியல் துறையில் பட்டப்படிப்பில் சேர்கிறார். அதே கல்லூரியில் அரவிந்தும் சேர்கிறான். ஜனனியிடம் தன் காதலைச் சொல்ல, அவள் அரவிந்திடம் "வாழ்க்கையில் நீ செய்த சாதனை என்ன?" என்ற கேள்வியைக் கேட்டு அவன் காதலை ஏற்க மறுக்கிறாள். விரக்தியில் தற்கொலை செய்துகொள்ளச் செல்லும் அரவிந்த் அங்கு தற்செயலாக சத்தியமூர்த்தியின் (சமுத்திரக்கனி) மகனைக் காப்பாற்றுகிறான். அரவிந்த் தன் மகனைக் காப்பாற்றும் காணொளியை சமூக வலைத்தளங்களில் சத்தியமூர்த்தி வெளியிடுவதால் அனைவராலும் அரவிந்த் பாராட்டப்படுகிறான்.

அதன்பின் நடைபெறும் சாதகமான நிகழ்வுகளால் அரவிந்த் புகழ்பெறுகிறான். ஆனால் அந்த நிகழ்வுகள் அனைத்திற்கும் பின்புலமாக இருக்கும் சத்தியமூர்த்தி காவல் ஆய்வாளர் யோகேந்திரனால் (ஜான் விஜய்) கொல்லப்படுகிறார். அரவிந்தின் சாதனைகள் சித்தரிக்கப்பட்டவை என்று அறியும் ஜனனி தான் ஏமாந்துவிட்டதாக அரவிந்தைப் பிரிகிறாள்.

தன் சுயமுயற்சியால் ஒரு தொண்டு நிறுவனத்தைத் தொடங்கும் அரவிந்த் ஏழைகள், ஆதரவற்றோர், முதியோர் ஆகியோருக்கு உணவளிக்கும் சேவையை செய்து புகழ் பெறுகிறான். ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கான நேர்காணலில் இதை அரவிந்த் கூறுவதைக் காணும் ஜனனி அவனது நல்ல மனதைப் புரிந்துகொண்டு அரவிந்தைத் திருமணம் செய்துகொள்கிறாள்.

நடிகர்கள்[தொகு]

பாடலில் சிறப்புத் தோற்றம்

விமர்சனம்[தொகு]

ஆனந்த விகடன்: கூட்டத்தில் ஒருத்தன், தன்னை அடையாளப்படுத்திக்கொள்ள எப்படியெல்லாம் போராடுகிறான் என்கிற கதை சுவாரஸ்யமானது.[1]

விகடன்: தோற்கவும் விரும்பாத ஜெயிக்கவும் முடியாத கோடானு கோடி ஆவரேஜ்களில் ஒருவன் இந்த `கூட்டத்தில் ஒருத்தன்’.[2]

தி இந்து: ஒரு அழகான காதல் கதைக்குள், இதழியல், வன்மம், சமூக அக்கறை ஆகிய 3 அம்சங்களைக் கலந்து திரைக்கதை எழுதியிருக்கிறார் அறிமுக இயக்குநர் தா.செ.ஞானவேல்.[3]

தினமலர்: கூட்டத்தில் ஒருத்தன் தனித்துத் தெரிகிறான். சற்றே ஜொலிக்கிறான்.[4]

சுட சுட[5] : காணொளி விமர்சனம்[6]

சினி உலகம் : மொத்தத்தில் இன்றைய இளைஞர்களுக்கு ஓர் ஊக்கம் தரும் படமாக இந்த கூட்டத்தில் ஒருத்தன் அமைந்துள்ளது.[7]

இந்தியாக்ளிட்ஸ் : அனைத்திலும் சரசரியாக விளங்கும் ஒருவன் சாதனையாளனாக உயரும் கதையைத் தன் அறிமுகப் படத்துக்குத் தேர்ந்தெடுத்திருக்கும் ஞானவேல் முயற்சியும் உழைப்பும் இருந்தால் வாழ்வில் யார் வேண்டுமானாலும் சாதிக்கலாம் என்ற நம்பிக்கையூட்டும் செய்தியை சொல்லியிருக்கிறார். இந்திய நாட்டில் பலர் ஒரு வேளை உணவின்றி அல்லாடுகையில் தினமும் மிக அதிக அளவில் உணவை வீணடிப்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி அதை எப்படி சரி செய்யலாம் என்பதற்கு ஓரளவு நம்பகத்தன்மை வாய்ந்த தீர்வையும் சொல்லியிருப்பதற்காக இயக்குனரைப் பாராட்டலாம். படம் முழுவதும் ஆபாசம், வன்முறை, எதிர்மறை சிந்தனைகள் ஆகியவற்றை முற்றிலும் தவிர்க்கப்பட்டிருக்கிறது.[8]

இந்தியன் எக்ஸ்பிரஸ்: முதலிடம் பெற்றவர்களைக் கொண்டாட இந்தச் சமூகம் தயாராக இருக்கிறது. கடைசி இடம் பெறுபவர்களும் வேறு வகையில் கவனம் ஈர்க்கிறார்கள். ஆனால், இந்தச் சராசரிகளின் நிலைதான் பரிதாபம். யாருடைய கவனத்தையும் பெறாமல், எந்த அங்கீகாரமும் பெறாமல் சராசரிகளாகவே வாழ்ந்துவிட்டுப் போகிறார்கள். அப்படிப்பட்ட சராசரிகளில் ஒருவனின் வாழ்க்கையைச் சொல்கிறது ‘கூட்டத்தில் ஒருத்தன்’. கூட்டத்தில் ஒருவராக வாழ்ந்து முடிந்துவிடுவதும், தனித்து நிற்பதும் அவரவர் கையில்தான் உள்ளது.[9]

மாலைமலர்: உணவை வீணாக்கக் கூடாது, உணவுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும், உணவின் முக்கியத்துவம் என்ன என்பதை ஒரு மெசேஜாக பதிவு செய்திருக்கிறார்.[10]

சினிமா இன்பாக்ஸ்: ஒரு சில படங்களில் நடித்திருக்கும் அசோக் செல்வனுக்கு இந்த படம் முக்கியமான படம் என்று சொல்லும் அளவுக்கு நடிப்பதற்கு ஏகப்பட்ட வாய்ப்புகள் கிடைத்திருக்கிறது. தனது கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்துள்ளார்.[11]

வணக்கம் இந்தியா: சமூகத்திற்கு தேவையான ’பசி’ என்ற ஒன்றையும் கதையோடு சேர்த்திருப்பதால் கூட்டத்தில் ஒருத்தன் தனி ஒருவனாக பிரகாசமாகிறான். கூட்டத்தில் ஒருத்தன் – பெற்றவர்கள் முதல் மாணவர்கள், இளைஞர்கள் என அனைவரும் கட்டாயம் பார்க்க வேண்டிய படம்[12]

பிகைண்ட் பிரேம்ஸ் : இன்று சமூகத்தின் அவலமாக மாறிவிட்ட ‘ஏழைகளின் பசி’ என்கிற இன்னொரு விஷயத்தையும் பொட்டில் அடித்த மாதிரி சொல்லி, அந்த விஷயத்தை கையிலெடுப்பதால் கூட்டத்தில் ஒருத்தனாக இருப்பவன் கூட ஆயிரத்தில் ஒருவனாக மாறமுடியும் என்கிற கருத்தையும் சொன்னதற்காக மிகச்சிறந்த இயக்குனராக நம் மனதில் நிற்கிறார் ஞானவேல்.[13]

சினிமா பார்வை: காதல், நட்பு என ஒரு கலவையாக சிறப்பாக இயக்கியிருக்கிறார் டி.ஜே.ஞானவேல். குறிப்பாக உணவை வீணாக்கக் கூடாது, உணவுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும், உணவின் முக்கியத்துவம் என்ன என்பதை ஒரு கருத்தை பதிவு செய்திருக்கிறார்.[14]

தினகரன்: கூட்டத்தில் நிற்கும்போதும் தனியாகத் தெரிகிறான்.[15]

தயாரிப்பு[தொகு]

தா.செ.ஞானவேல்: இந்தப் படத்தின் கதையை முதலில் மலையாள நடிகர் நிவின் பாலியிடம்தான் சொன்னேன். ஆனால், அவரால் இந்தப் படத்திற்காகத் தேதிகளை ஒதுக்கி நடிக்க முடியவில்லை. அதன் பின்தான் அசோக் செல்வன் இந்தப் படத்திற்குள் வந்தார்.[16]

அசோக் செல்வன்: இசையமைப்பாளர் நிவாஸ் கே பிரசன்னா, வீட்டிற்குச் சென்றிருக்கும் போதுதான் அவர் இந்தப் படம் பற்றிப் பேசினார். யார் நாயகன் எனக் கேட்டேன், இன்னும் முடிவாகவில்லை என்றார். அதன் பின் நானே தயாரிப்பாளர் பிரபுவைத் தொடர்பு கொண்டு இந்தப் படத்தில் நடிக்கிறேன் என்றேன். இயக்குனர் ஞானவேலைச் சந்தித்து படத்தின் கதையைத் கேட்டுத் தெரிந்து கொண்டேன்.[17]

பிரியா ஆனந்த்: சினிமாவை விட்டு விலக நினைத்த நேரத்தில் கூட்டத்தில் ஒருத்தன் கதை பிடித்ததால் நடித்ததாக நடிகை பிரியா ஆனந்த் கூறியுள்ளார்.[18][19]

பட வெளியீடு[தொகு]

பல விருதுகளை குவித்த ‘ஜோக்கர் ’ படத்தை தயாரித்து வெளியிட்ட ட்ரீம் வாரியர் நிறுவனம் அடுத்ததாக கூட்டத்தில் ஒருத்தன் என்ற படத்தை தயாரித்து வெளியிடவிருக்கிறது. இப்படத்தை இம்மாதம் 14 ஆம் திகதியன்று வெளியிட திட்டமிட்டிருந்தது. ஆனால் எதிர்பாராமல் திடீரென்று கேளிக்கை வரியை ரத்துச் செய்ய வலியுறுத்தி தமிழக படமாளிகைகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டன. ஏற்கனவே அறிவித்தபடி சூலை மாதம் 14 ஆம் திகதியன்று கூட்டத்தில் ஒருவன் படத்தை திரையிடாமல் இம்மாத இறுதியில் அதாவது சூலை 28 ஆம் திகதியன்று இப்படம் வெளியாகும் என்று அதன் தயாரிப்பாளர் அதிகாரபூர்வமாக தெரிவித்திருக்கிறார்.[20][21]

இசை[தொகு]

படத்தின் இசையமைப்பாளர் நிவாஸ் கே. பிரசன்னா. பாடல்கள் 29 நவம்பர் 2016 இல் வெளியானது.

பாடல் வரிசை
வ. எண் பாடல் பாடலாசிரியர் பாடகர்கள் காலநீளம்
1 ஏன்டா இப்படி கபிலன், எம்சி கான்சலேஸ் எஸ். பி. பாலசுப்ரமணியன், எம்சி கான்சலேஸ் 4:25
2 நீயின்றி கபிலன் எம். எம்.மனசி 4:00
3 இன்னும் என்ன சொல்ல கபிலன், பி. மேக் ஹரிசரண், பி. மேக் 4:53
4 ஓர் நாள் காதல் கபிலன் சத்ய பிரகாஷ் 2:14
5 மாற்றங்கள் ஒன்றேதான் கபிலன் நிவாஸ் கே. பிரசன்னா 3:53
6 தி ஒன் (இசை) 1:01
7 தி ஹேப்பிநெஸ் ஆப் பர்சூட் 3:54

மேற்கோள்கள்[தொகு]

 1. விகடன் விமர்சனம். https://cinema.vikatan.com/movie-review/97275-kootathil-oruthan-movie-review.html. 
 2. "விகடன் விமர்சனம் 2".
 3. "தி இந்து விமர்சனம்". https://tamil.thehindu.com/cinema/cinema-others/article19389653.ece. 
 4. "தினமலர் விமர்சனம்". https://cinema.dinamalar.com/movie-review/2431/Kootathil-Oruthan/. 
 5. "சுட சுட - காணொளி விமர்சனம்".
 6. "சுட சுட - காணொளி விமர்சனம்".
 7. "சினி உலகம் விமர்சனம்".
 8. "indiaglitz - விமர்சனம்".
 9. "இந்தியன் எக்ஸ்பிரஸ் விமர்சனம்". https://tamil.indianexpress.com/entertainment/one-of-the-crowd-tamile-cinema-review/. 
 10. "மாலைமலர் விமர்சனம்". https://www.maalaimalar.com/Cinema/Review/2017/07/28181218/1099111/Kootathil-Oruthan-Movie-Review.vpf. 
 11. "சினிமா இன்பாக்ஸ் விமர்சனம்".
 12. "வணக்கம் இந்தியா விமர்சனம்".
 13. "பிகைன்ட் பிரேம்ஸ் விமர்சனம்".
 14. "சினிமா பார்வை".
 15. "தினகரன் விமர்சனம்". http://cinema.dinakaran.com/Movie-review.aspx?id=24528&id1=13. 
 16. "இயக்குனர் பேட்டி". https://m.dailyhunt.in/news/india/tamil/4tamil+cinema-epaper-screen/koottathil+oruthan+vayppu+kettu+naditha+asok+selvan-newsid-70453270. 
 17. "அசோக் செல்வன் பேட்டி".
 18. "மீண்டும் பிரியா ஆனந்த்". http://www.puthiyathalaimurai.com/news/cinema/24596-priya-anand-s-decision-to-change-the-kuttathil-oruthan.html. 
 19. "சினிமாவை விட்டு விலக நினைத்தேன் - பிரியா ஆனந்த்".
 20. "பட வெளியீடு தாமதம்".
 21. "படவெளியீடு தாமதம் ndtv".

வெளி இணைப்புகள்[தொகு]