பிரியா ஆனந்து
பிரியா ஆனந்து | |
---|---|
பிறப்பு | பிரியா பரத்வாஜ் ஆனந்து செப்டம்பர் 17, 1986[1] சென்னை, தமிழ் நாடு, இந்தியா |
பணி | நடிகை |
செயற்பாட்டுக் காலம் | 2009– தற்போது வரை |
பிரியா ஆனந்து தமிழ், தெலுங்கு, இந்தி திரைப்பட நடிகையாவார். தெலுங்கில் வெளியான லீடர் மற்றும் தமிழில் வெளியான வாமனன் திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர். மேலும் இவர் பாலிவுட் திரைப்படமான இங்கிலிஷ் விங்கிலிஷ் திரைபடத்தில் சிறப்பு கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர்.
இளமைப் பருவம்
[தொகு]தமிழ் பேசும் தந்தைக்கும் தெலுங்கு மற்றும் மராத்தி பேசும் தாய்க்கும் பிறந்ததாலும், ஐதராபாத்து, சென்னை மயிலாடுதுறை ஆகிய இடங்களில் வளர்ந்ததாலும், தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளையும் சரளமாகப் பேசுகிறார். ஆங்கிலம், வங்காள மொழி, இந்தி, மராத்தி, எசுப்பானியம் ஆகிய மொழிகளையும் பேசுகிறார். அமெரிக்க அல்பேனி பல்கலைக்கழகத்தில் இதழியல் பயின்று பின்னர் சென்னை திரும்பினார். இதுவரை பன்னிரண்டு தெலுங்கு, இந்தி மற்றும் தமிழ் மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார்.மேலும் மூன்று தமிழ் படங்களிலும் நடித்துவருகிறார்.
நடித்த திரைப்படங்கள்
[தொகு]வருடம் | படம் | கதாபாத்திரம் | மொழி | குறிப்பு |
---|---|---|---|---|
2009 | வாமனன் | திவ்யா | தமிழ் | |
2010 | புகைப்படம் | சைனி ஜார்ஜ் | தமிழ் | |
2010 | லீடர் | ரத்ன பிரபா | தெலுங்கு | |
2010 | ராமா ராமா கிருஷ்ணா கிருஷ்ணா | பிரியா | தெலுங்கு | |
2011 | நூற்றெண்பது | ரேணுகா நாராயணன் | தமிழ் | |
2011 | 180 | தெலுங்கு | ||
2012 | இங்கிலீஷ் விங்கிலீஷ் | ராதா | இந்தி | |
2012 | கோ அன்டே கோட்டி | சத்யா | தெலுங்கு | |
2013 | ரங்கிரீஸ் | மேகா ஜோஷி | இந்தி | |
2013 | எதிர் நீச்சல் | கீதா | தமிழ் | |
2013 | ஃபுக்ரே | பிரியா | இந்தி | |
2013 | வணக்கம் சென்னை | அஞ்சலி ராஜ்மோஹன் | தமிழ் | |
2015 | வை ராஜா வை | பிரியா | தமிழ் | |
2014 | அரிமா நம்பி | அனாமிகா | தமிழ் | |
2014 | இரும்பு குதிரை | சமயுத்த ராமகிருஷ்ணன் | தமிழ் | |
2014 | ஒரு ஊருல ரெண்டு ராஜா | பிரியா | தமிழ் |
2015. த்ரிஷா இல்லனா நயன்தாரா. பிரியா ஆனந்த். தமிழ். இரயில் பயணி
2017. முத்துராமலிங்கம் விஜி. தமிழ்
2017. ராஜகுமாரா. நந்தினி. கன்னடம். முதல் படம்
2017. கூட்டத்தில் ஒருத்தன். ஜனனி. தமிழ்
2018 கயம்குலம் கொச்சுன்னி. ஜானகி. மலையாளம்
2018. ஆரஞ்சு. ராதா. கன்னடம்
2019. எல். கே. ஜி சரளா முனுசாமி. தமிழ்
2019. ஆதித்ய வர்மா. பிரியா மேனன். தமிழ்
2020. சுமோ. கொரோனா காரணத்தினால் படம் வெளியாகவில்லை
மேற்கோள்களும் குறிப்புகளும்
[தொகு]- ↑ Happy Birthday To Priya Anand. chitramala.com. September 17, 2010