குற்றியாடி
Appearance
குற்றியாடி என்னும் ஊர் கேரளத்தின் கோழிக்கோடு மாவட்டத்தில் வடகரை வட்டத்தில் உள்ளது. இது வடகரா-வயநாடு சாலையில் உள்ளது. குற்றுயாடி ஊராட்சியின் தலைமையகமாகவும் விளங்குகிறது. காவிலும்பாறை, மருதோங்கரை உள்ளிட்ட ஊர் மக்கள் வடகரா, கோழிக்கோடு ஆகிய ஊர்களுக்கு குற்றியாடி வழியாக செல்கின்றனர். இந்த ஊர் கோழிக்கோட்டிலிருந்து 50 கி.மீ. தொலைவில் உள்ளது. இந்த இடத்தில்தான் குற்றியாடி நீர்மின்திட்டம் செயல்படுகிறது.
இதன் பழைய பெயர் தொண்டிப்போயில் என்பதாகும். குற்றுயாடிப்புழை என்ற ஆறு அருகில் ஓடுகிறது.
வெளி இணைப்புகள்
[தொகு]- குற்றியாடி ஆன்லைன் பரணிடப்பட்டது 2012-02-29 at the வந்தவழி இயந்திரம்