கொடுவள்ளி
கொடுவள்ளி Koduvally | |
---|---|
நகரம் | |
ஆள்கூறுகள்: 11°21′34″N 75°54′40″E / 11.359444°N 75.911111°E | |
Country | இந்தியா |
மாநிலம் | கேரளம் |
மாவட்டம் | கோழிக்கோடு |
அரசு | |
• வகை | உள்ளாட்சி (പ്രാദേശിക സർക്കാർ) |
• நிர்வாகம் | நகராட்சி கவுன்சில் |
• தலைவர் | சாரிப்பா கண்ணாடிப்போயில் |
பரப்பளவு | |
• மொத்தம் | 23.58 km2 (9.10 sq mi) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 48,678 |
• அடர்த்தி | 2,100/km2 (5,300/sq mi) |
மொழிகள் | |
• அதிகாரப்புர்வம் | மலையாளம், ஆங்கிலம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (IST) |
PIN | 673572 |
வாகனப் பதிவு | KL-57,KL-11 |
இணையதளம் | www |
கொடுவள்ளி (Koduvally) இந்தியாவின் கேரள மாநிலத்திலுள்ள கோழிக்கோடு மாவட்டத்தில் [1] உள்ள ஒரு நகராட்சி நகரமாகும். கோழிக்கோடு - வயநாடு தேசிய நெடுஞ்சாலை எண் 212 இல் கோழிக்கோடு நகரின் வடகிழக்கில் 21 கி.மீ. தொலைவில் இந்நகரம் அமைந்துள்ளது. கீழக்கோத், மாதாவூர், குன்னமங்கலம், ஓமசேரி, தாமரசேரி போன்றவை அருகிலுள்ள உள்ள உள்ளூர் கிராமங்களாகும் [2]. மேற்கு திசையில் கடலில் பாயும் கொடுவள்ளி நதியின் பெயரும் இந்நகரத்திற்கான பெயருக்கு ஒரு காரணமாகிறது.
வரலாறு
[தொகு]கொடுவள்ளி மற்றும் கோழிக்கோடு இடையேயான சாலை 1970 ஆம் ஆண்டுகளின் முற்பகுதியில் மேம்படுத்தப்பட்டு பின்னர் கொடுவள்ளி பாலம் கட்டப்பட்டது.
அரசியல்
[தொகு]சுதந்திரப் போராட்டத்துடன் அதிகம் தொடர்பு கொண்டுள்ள வயநாடு என்ற மலைநாட்டிற்கு அருகில் கொடுவள்ளியும் அமைந்திருப்பதால் இப்பகுதிக்கும் தேசிய சுதந்திர இயக்கத்தில் முக்கியப் பங்கு இருக்கிறது.
கொடுவள்ளி சட்டப்பேரவை தொகுதியில் பின்வரும் கிராமப் பஞ்சாயத்துகள் இடம்பெறுகின்றன. கீழக்கோத், மாதாவூர், நரிக்குன்னி, ஓமசேரி, கட்டிப்பாரா, தாமரசேரி மற்றும் கொடுவள்ளி நகராட்சி போன்ற பகுதிகள் கொடுவள்ளி சட்டப்பேரவை தொகுதியில் இடம்பிடித்துள்ள பகுதிகளாகும். கிராம பஞ்சாயத்தாக இருந்த கொடுவள்ளி 01.11.2015 முதல் கொடுவள்ளி நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது.
இந்தியன் யூனியன் முசுலீம் லீக் கட்சியின் தலைவர் வி.எம் உமர் கொடுவள்ளி சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் இவர் இந்திய பொதுவுடமைக் கட்சியைச் சேர்ந்த எம் மெகபூப்பை 16000 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.தற்போதைய மக்களவை உறுப்பினர் (நாடாளுமன்ற உறுப்பினர்) இ.அகமது 1977 ஆம் ஆண்டில் கொடுவள்ளி தொகுதியில் போட்டியிட்டார். சி. மோயின்குட்டி, சி. மம்முட்டி மற்றும் பி.டி.ஏ ரகீம் ஆகியோரும் கொடுவள்ளி சட்டமன்றத்திற்காக போட்டியிட்டனர்.
கொடுவள்ளி சட்டமன்ற தொகுதியின் வரலாறு '[3] கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
ஆண்டு | வெற்றி | கட்சி | தோல்வி | கட்சி |
---|---|---|---|---|
2016 | காரத் அப்துல் இரசாக் | தே.ம.மா கட்சி | எம்.ஏ. இரசாக் மாசுட்டர் | இ.யூ.மு.லீக் கட்சி |
2011 | வி.எம். உம்மர் மாசுட்டர் | இ.யூ.மு.லீக் | எம்.மெகபூப் | இ.பொ.உ.கட்சி (மா) |
2006 | ஏ.டி.வி பி.டி.ஏ இரகீம் | IND | கே. முரளிதரன் | குடியரசு இந்திரா காங்கிரசு |
2001 | சி. மம்முட்டி | இ.யூ.மு.லீக் | சி. மோகசின் | மதசார்பற்ற சனதா தளம் |
1996 | சி. மோயின்குட்டி | இ.யூ.மு.லீக் | சி. மோகசின் | Jசனதா தளம் |
1991 | பி.வி. மொகம்மத்து | இ.யூ.மு.லீக் | சி. மோகசின் | சனதா தளம் |
1987 | பி.எம், அபூபக்கர் | இ.யூ.மு.லீக் | பி. ராகவன் நாயர் | சனதா கட்சி |
1982 | பி.வி. மொகம்மத்து | இ.யூ.மு.லீக் | பி. ராகவன் நாயர் | சனதா கட்சி |
1980 | பி.வி. மொகம்மத்து | இ.யூ.மு.லீக் | கே. மூசகுட்டி | இ.பொ.உ.கட்சி (மா) |
1977 | ஈ. அகமது | இ.யூ.மு.லீக் | கே. மூசகுட்டி | இ.பொ.உ.கட்சி |
அடையாளங்கள்
[தொகு]கொடுவள்ளி நகரத்தில் ஒரு சிறிய விளையாட்டரங்கம், பாரத மாநில வங்கியின் கிளை, பெடரல் வங்கி, கனரா வங்கி, அனைத்து வங்கிகளின் முன்பும் பணம் வழங்கும் இயந்திரங்கள், ஒரு காவல் நிலையம், கொடுவள்ளி முசுலீம் அனாதை இல்லம் [4][5], கே.எம்.ஓ கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் பீனிக்சு வலி மற்றும் நோய்த்தடுப்பு பராமரிப்பு சங்கம். ஆகியவை நகரத்தின் முக்கிய அடையாளங்களாக உள்ளன. கொடுவள்ளி நகருக்கு அருகில் பத்து கிலோமீட்டர் தொலைவுக்குள் இரயில் நிலையங்கள் ஏதுமில்லை.
நகைக் கடைகள்
[தொகு]ஒரு கிலோமீட்டர் குறுகிய இடைவெளியில் 100 நகை கடைகள் வைத்திருக்கும் நற்பெயர் கொடுவள்ளிக்கு உண்டு. இந்த சிறிய நகரம் முழு மாநிலத்திலும் ஆபரணங்களுக்கான மிகப்பெரிய சந்தையைக் கொண்டுள்ளது. இங்கு வரும் தங்கத்தில் பெரும்பாலானவை கறுப்பு சந்தை வழிகள் வழியாக விற்பனைக்கு வருகின்றன [6].
கல்வி நிலையங்கள்
[தொகு]உலகின் புகழ்பெற்ற தொழில்நுட்ப மற்றும் மேலாண்மை நிறுவனங்களை கொடுவள்ளி நகரம் குறுகிய தூரத்திற்குள் நகரின் மையத்தில் கொண்டுள்ளது.
1.கொடுவள்ளி அரசு மேல்நிலைப்பள்ளி 2.கொடுவள்ளி முசுலீம் அனாதை இல்ல மேல்நிலைப்பள்ளி (மலையாளம் வழி) 3.கொடுவள்ளி முசுலீம் அனாதை இல்ல உயர்நிலைப்பள்ளி (ஆங்கிலம்) 4.கொடுவள்ளி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி 5.கே.எம்.ஓ. கலை மற்றும் அறிவியல் கல்லூரி 6.கே.எம்.ஓ தொழில்துறை பயிற்சி மையம் 7.கொடுவள்ளி ஆசிரியர் கல்வி பள்ளி 8.கொடுவள்ளி அரசு ஏ.எல்.பி பள்ளி (செரியா பள்ளி என்றும் அழைக்கப்படுகிறது)
மேலும் பல தனியார் மற்றும் இணை நிறுவனங்கள் 1.அரசு. உண்டு உறைவிட ஐ.டி.ஐ கொடுவள்ளி 2.கிரசெண்டு ஆங்கில பள்ளி, களராந்திரி
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Koduvally in festive mode". The Hindu. 20 December 2008 இம் மூலத்தில் இருந்து 5 நவம்பர் 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20121105051149/http://www.hindu.com/2008/12/20/stories/2008122054600300.htm. பார்த்த நாள்: 26 July 2009.
- ↑ Village Panchayat S of Koduvally, Kozhikode, Kerala[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ http://eci.nic.in/archive/electionanalysis/AE/S11/partycomp23.htm
- ↑ "Orphanage". Koduvally Muslim Orphanage. பார்க்கப்பட்ட நாள் 5 March 2011.
- ↑ Mohammed, U. (2007). Educational empowerment of Kerala Muslims: a socio-historical perspective. Other Books. p. 186. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-903887-3-3. பார்க்கப்பட்ட நாள் 5 March 2011.
- ↑ http://timesofindia.indiatimes.com/india/Keralas-jewellery-hub-becomes-big-destination-for-smuggled-gold/articleshow/44164641.cms