குட்டிப்புரம்

ஆள்கூறுகள்: 10°50′38″N 76°01′58″E / 10.84389°N 76.03278°E / 10.84389; 76.03278
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குட்டிப்புரம்
ஊர்
குட்டிப்புரத்தில் உள்ள எம். இ. எஸ். பொறியியல் கல்லூரி
குட்டிப்புரத்தில் உள்ள எம். இ. எஸ். பொறியியல் கல்லூரி
குட்டிப்புரம் is located in கேரளம்
குட்டிப்புரம்
குட்டிப்புரம்
கேரளத்தில் அமைவிடம்
குட்டிப்புரம் is located in இந்தியா
குட்டிப்புரம்
குட்டிப்புரம்
குட்டிப்புரம் (இந்தியா)
ஆள்கூறுகள்: 10°50′38″N 76°01′58″E / 10.84389°N 76.03278°E / 10.84389; 76.03278
நாடு India
மாநிலம்கேரளம்
மாவட்டம்மலப்புறம்
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகமலையாளம், ஆங்கிலம்
நேர வலயம்இ.சீ.நே (ஒசநே+5:30)

குட்டிப்புரம் (Kuttippuram) என்பது இந்தியாவின் கேரள மாநிலத்தின் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள திரூர் வட்டத்தில் அமைந்துள்ள ஒரு நகரம் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலகத் தலைமையகம் ஆகும். இந்த நகரம் மலப்புரத்திலிருந்து தெற்கே 32 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. குட்டிப்புரம் வழியாக பாரதப்புழா ஆறு ஓடுகிறது.

வரலாறு[தொகு]

பாரதப்புழா ஆற்றின் வடகரையில் உள்ள குட்டிப்புரம், இடைக்காலத்தில் கோழிக்கோடு சாமுத்திரி மன்னரின் ஆட்சியின் கீழ் இருந்தது. [1] குட்டிப்புரம் தொடருந்து நிலையம் கேரளத்தின் பழமையான தொடருந்து நிலையங்களில் ஒன்றாகும். கேரளத்தில் இரண்டாவது தொடருந்து பாதை 1861 ஆம் ஆண்டில் திரூரில் இருந்து குட்டிப்புரம் வரை அமைக்கப்பட்டது, அதே ஆண்டில் திரூரிலிருந்து பேப்பூர் வரை தொடருந்து பாதை நீட்டிக்கப்பட்டது. [2] 1940களில் சி. இராஜகோபாலாச்சாரி, எம். பக்தவத்சலம், யாக்கோப் ஹாசன் உள்ளிட்ட பல தேசியத் தலைவர்கள் குட்டிப்புரத்திற்கு வந்துள்ளனர். [1] இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி பக்ருதின் அலி அகமதுவும் இங்கு வந்துள்ளார். [1] மகாத்மா காந்தி, ஜவகர்லால் நேரு, லால் பகதூர் சாஸ்திரி ஆகியோரின் அஸ்தி கேரளத்தில் திருநாவாய், குட்டிப்புரம், தவனூர் இடையே பாரதப்புழா ஆற்றங்கரையில் வைக்கப்பட்டது. [3] [4]

1953 ஆம் ஆண்டு கட்டப்பட்ட குட்டிப்புரம் பாலம், கேரளத்தின் புகழ்பெற்ற பாலங்களில் ஒன்றாகும். குட்டிப்புரத்தின் மணற்பாங்கான ஆற்றங்கரையில் பாரதப்புழா ஆற்றின் அழகை விவரிக்கும் குட்டிப்புரம் பாலம் என்ற கவிதை கவிஞர் இடச்சேரி கோவிந்தன் நாயரால் எழுதப்பட்டது. குட்டிப்புரம் 1957 முதல் 2011 வரை கேரள சட்டமன்றத்தின் ஒரு தொகுதியாகவும் இருந்தது, பின்னர் அது கோட்டக்கல் சட்டமன்றத் தொகுதியாக மாற்றப்பட்டது.

இடைக்கால மாமாங்கத் திருவிழாவின் மையமான திருநாவாயும், ஆழ்வாஞ்சேரி தம்பிரக்கலின் மையமாக இருந்த ஆதவநாடும் குட்டிப்புரத்தை ஒட்டி அமைந்துள்ளன. [3]

நிலவியல்[தொகு]

குட்டிப்புரம் பாலம்
குட்டிப்புரத்தில் தொடருந்து பாதை

குட்டிப்புரத்தின் அமைவிடம் 10°50′N 76°04′E / 10.83°N 76.07°E / 10.83; 76.07.[5] ஆகும். இது கடல் மட்டத்தில் இருந்து சுமார் சராசரியாக 15 மீ (49 அடி) உயரத்தில் உள்ளது.

தொழில்கள்[தொகு]

மாநிலத்தின் சில முக்கிய பொதுத்துறை நிறுவனங்கள் குட்டிப்புரத்தில் உள்ளன. [6] வாலாஞ்சேரி நகரம் குட்டிப்புரம் ஊராட்சியை ஒட்டி அமைந்துள்ளது. குட்டிப்புரம் ஊராட்சியை நகராட்சியாக தரம் உயர்த்த கோரிக்கை எழுந்துள்ளது.

  • கேரள மாநில சவர்க்காரம் மற்றும் வேதிதிப்பொருள்கள் லிமிடெட் அதன் தலைமையகம் குட்டிப்புரத்தில் உள்ளது. [7]
  • கே.இஎல்.டி.ஆர்.ஓ.என் (கேரள அரசு மின்னணுவியல் மேம்பாட்டுக் கழகம்) எலக்ட்ரோ செராமிக்ஸ் (KELCERA) இங்கு அமைந்துள்ளது. [8]

கல்வி நிறுவனங்கள்[தொகு]

கல்லூரி(கள்)[தொகு]

  • எம். இ. எஸ். பொறியியல் கல்லூரி, 1994 இல் திறக்கப்பட்டது, இது கேரளத்தின் முதல் மற்றும் பழமையான சுயநிதி பொறியியல் கல்லூரி ஆகும். [9]
  • கே.எம்.சி.டி கல்லூரி குட்டிப்புரம் [9]

பள்ளி(கள்)[தொகு]

  • அரசு மேல்நிலைப் பள்ளி, குட்டிப்புரம் [9]
  • இளையோர் தொழில்நுட்ப உயர்நிலைப்பள்ளி, குட்டிப்புரம் [9]

இணைப்பு[தொகு]

பேருந்து நிலையம்
குட்டிப்புரம் தொடருந்து நிலையம், 1861 இல் திறக்கப்பட்டது, இது மாநிலத்தின் பழமையான தொடருந்து நிலையங்களில் ஒன்றாகும்
  • தொடருந்து நிலையம்: குட்டிப்புரத்தில் இரண்டு தொடருந்து நிலையங்கள் உள்ளன, குட்டிப்புரம் தொடருந்து நிலையம் 1861 இல் திறக்கப்பட்டது, [2] இது மாநிலத்தின் பழமையான நிலையங்களில் ஒன்றாகும். மேலும் ஒரு சிறிய தொடருந்து நிலையமான - பெரசன்னூர் தொடருந்து நிலையமும் உள்ளது. திரூரில் முக்கிய தொடருந்து நிலையம் உள்ளது. அது இங்கிருந்து 18 கிலோமீட்டர்கள் (11 mi) தொலைவில் உள்ளது. இங்கு கிட்டத்தட்ட அனைத்து தொடருந்துகளும் நிற்கும்.

குட்டிப்புரம் ஊராட்சி ஒன்றியம்[தொகு]

The panoramic view of a bridge
நிலையோரம் பூங்காவில் இருந்து காணும்போது குட்டிப்புரம் பாலம்

குட்டிப்புரம் ஊராட்சி ஒன்றியம் என்பது பின் வரும் கிராம ஊராட்சிகளின் நிர்வாகத்திற்கான நிர்வாக அமைப்பாகும்.

  1. எடையூர்
  2. இரிம்பிளியம்
  3. மரக்கரை
  4. ஆதவநாடு
  5. கல்பக்கஞ்சேரி

குறிப்பிடத்தக்கவர்கள்[தொகு]

மேலும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 "The official website of Kuttippuram Grama Panchayat". பார்க்கப்பட்ட நாள் 2021-01-30.
  2. 2.0 2.1 "ആ ചൂളംവിളി പിന്നെയും പിന്നെയും...". https://www.mathrubhumi.com/malappuram/specials/50-years-of-malappuram/kerala-first-railway-line-tirur-to-beypore-1.3880175. 
  3. 3.0 3.1 Kerala Charitram. 
  4. "അമ്പതിന്റെ നിറവില്‍ മലപ്പുറം; മലപ്പുറത്തിന്റെ മാനവിക മഹാപൈതൃകം". https://www.mathrubhumi.com/malappuram/specials/50-years-of-malappuram/alamkode-leelakrishnan-writes-about-malappuram-1.3880292. 
  5. Falling Rain Genomics, Inc - Kuttippuram
  6. "Brief Industrial Profile of Malappuram District 2017-18" (PDF).
  7. "Kerala State Detergents and Chemicals Limited". {{cite web}}: Missing or empty |url= (help)
  8. "KELCERA". {{cite web}}: Missing or empty |url= (help)
  9. 9.0 9.1 9.2 9.3 "Kuttippuram PS". பார்க்கப்பட்ட நாள் 2021-03-25.
  10. "കുറ്റിപ്പുറം പാലത്തിന്റെ ശില്‍പി കെവി അബ്ദുള്‍ അസീസ് നിര്യാതനായി". Malayalam One India. 2018-01-31. பார்க்கப்பட்ட நாள் 2021-01-24.
"https://ta.wikipedia.org/w/index.php?title=குட்டிப்புரம்&oldid=3879961" இலிருந்து மீள்விக்கப்பட்டது