குட்டிப்புரம் பாலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குட்டிப்புரம் பாலம்
போக்குவரத்து சாலை
தாண்டுவது பாரதப்புழா ஆறு
இடம் குட்டிப்புரம், மலப்புறம்
கட்டுமானப் பொருள் கற்காரை
மொத்த நீளம் 370 m (1,210 அடி)
அமைவு 10°50′26″N 76°01′24″E / 10.8404472°N 76.0234192°E / 10.8404472; 76.0234192

குட்டிப்புரம் பாலம் (Kuttippuram bridge) என்பது இந்தியாவின் கேரளத்தின், மலப்புறம் மாவட்டத்தில், தவனூர் - பொன்னானி பகுதியுடன் குட்டிப்புரத்தை இணைக்கும் ஒரு பாலமாகும். திரூர் மற்றும் பொன்னானி வட்டங்கள் பாரதப்புழா ஆற்றில் பிரிக்கப்படுகின்றன. பாரதப்புழா ஆறானது கேரளத்தின் இரண்டாவது நீளமான ஆறாகும். [1] பாலம் இந்த இரண்டு பகுதிகளையும் இணைக்கிறது. இது கோழிக்கோடு - கொச்சி சாலையில் தேசிய நெடுஞ்சாலை 66 இன் ஒரு பகுதியாக உள்ளது. [1] இது பாரதப்புழா ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட மிகப் பெரிய மற்றும் பழமையான பாலங்களில் ஒன்றாகும், மேலும் மலபார் பகுதியை பழைய திருவிதாங்கூர்-கொச்சியுடன் சாலை வழியாக இணைப்பதில் இது முக்கிய பங்கு வகிக்கிறது.

The panoramic view of a bridge
நிலயோரம் பூங்காவில் இருந்து குட்டிப்புரம் பாலத்தின் அழகிய தோற்றம்

வரலாறு[தொகு]

இந்தப் பாலம் கட்டப்படுவதற்கு முன்பு, கோழிக்கோடு மற்றும் கொச்சி ஆகியவை ஷொர்ணூர் வழியாகவே இணைக்கப்பட்டிருந்தன. [1] கோழிக்கோட்டை கொச்சியுடன் இணைக்க தேசிய நெடுஞ்சாலை 66 அமைக்க குட்டிப்புரம் வழியாக பாரதப்புழா ஆற்றின் மீது பாலம் தேவைப்பட்டது. [1] மே 8, 1949 அன்று, அப்போதைய சென்னை மாநிலத்தின் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்த எம். பக்தவத்சலம் பாலத்திற்கு அடிக்கல் நாட்டினார். [1] மதராசைச் சேர்ந்த மாடர்ன் ஹவுசிங் கன்ஸ்ட்ரக்சன் அண்ட் பிராப்பர்டீஸ் (எம்எச்சிபி) லிமிடெட் கட்டுமானப் பணிக்காக தேர்வு செய்யப்பட்டது. [1] நவம்பர் 11, 1953 அன்று மதராசு மாநிலத்தின் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்த சண்முக ராஜேஸ்வர சேதுபதியால் இந்தப் பாலம் திறந்து வைக்கப்பட்டது. [1] இந்தப் பாலத்தின் முக்கிய கட்டிடக் கலைஞர் பொன்னானியைச் சேர்ந்த கே. வி. அப்துல் அஜீஸ் ஆவார். [1] கட்டுமானத்திற்கு தலைமை பொறியாளராக டபிள்யூ. எச். நம்பியாரும், கண்காணிப்பு பொறியாளராக பி. டி. நாராயணன் நாயரும் இருந்தனர். [1]

குட்டிப்புரம் பாலம்[தொகு]

பிப்ரவரி 21, 1954 அன்று மாத்ருபூமி ஆழ்ச்சப்பதிப்பு இதழில் வெளியான இடச்சேரி கோவிந்தன் நாயரின் பிரபலமான மலையாளக் கவிதையான குட்டிப்புரம் பாலம், என்ற கவிதை பாரதப்புழா ஆற்றின் நிலையை விவரிக்கிறது. [2] [3]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 1.6 1.7 1.8 V. P., Nisar (2018-01-31). "കുറ്റിപ്പുറം പാലത്തിന്റെ ശില്‍പി കെവി അബ്ദുള്‍ അസീസ് നിര്യാതനായി". பார்க்கப்பட்ட நாள் 2021-01-24.
  2. "64ന്റെ നിറവില്‍ ഇടശ്ശേരിയുടെ 'കുറ്റിപ്പുറം പാലം'". 21 February 2018. https://www.mathrubhumi.com/malappuram/malayalam-news/kuttippuram-1.2618275. 
  3. Binoy, Rasmi (27 September 2018). "The river sutra". https://www.thehindu.com/society/rivers-have-nurtured-malayalam-literature-and-poetry-since-time-immemorial/article25058214.ece. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=குட்டிப்புரம்_பாலம்&oldid=3878536" இலிருந்து மீள்விக்கப்பட்டது