மரக்கரை

ஆள்கூறுகள்: 10°57′0″N 76°2′0″E / 10.95000°N 76.03333°E / 10.95000; 76.03333
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மரக்கரை
Marakkara
கிராம ஊராட்சி
மரக்கரை is located in கேரளம்
மரக்கரை
மரக்கரை
இந்தியா, கேரளத்தில் அமைவிடம்
மரக்கரை is located in இந்தியா
மரக்கரை
மரக்கரை
மரக்கரை (இந்தியா)
ஆள்கூறுகள்: 10°57′0″N 76°2′0″E / 10.95000°N 76.03333°E / 10.95000; 76.03333
நாடு India
மாநிலம்கேரளம்
மாவட்டம்மலப்புறம்
அரசு
 • வகைகிராம ஊராட்சி
பரப்பளவு
 • மொத்தம்27.00 km2 (10.42 sq mi)
ஏற்றம்127.0 m (416.7 ft)
மக்கள்தொகை (2011)
 • மொத்தம்40,404
 • அடர்த்தி1,500/km2 (3,900/sq mi)
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகமலையாளம், ஆங்கிலம்
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீட்டு எண்676553
வாகனப் பதிவுKL-55, KL-10

மரக்கரை (Marakkara) என்பது இந்தியாவின் கேரள மாநிலத்தின், மலப்புரம் மாவட்டத்தில் திரூர் வட்டத்தில் உள்ள குட்டிப்புரம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஒரு கிராம ஊராட்சி ஆகும். [1]

காடாம்புழா கோயில்[தொகு]

மரக்கரை ஊராட்சிக்குள் பிரசித்தி பெற்ற காடாம்புழா தேவி கோயில் உள்ளது. காடம்புழா தேவி கோயில் என்பது இந்தியாவின் கேரளத்தின் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள கடம்புழாவில் உள்ள ஒரு இந்து கோயில் மற்றும் புனித யாத்திரை தலமாகும். இந்தக் கோவிலின் முக்கிய தெய்வம் பார்வதி/துர்கை ஆவார். இக்கோயிலில் அம்மன் சிலை இல்லை, குழியை அம்மனாக வழிபடப்படுகிறார். விநாயகப் பெருமானின் பிரசன்னம் தேவியுடன் இருப்பதாக நம்பப்படுகிறது, மேலும் சாஸ்தா மற்றும் நாக தெய்வங்களுக்கான துணை சிற்றாலயங்கள் உள்ளன. இக்கோயிலுக்கு அருகில் 'மாதம்பியர்காவு' என்ற தனி சிவன் கோவில் உள்ளது. இந்த இரண்டு கோவில்களும் மலபார் தேவசம் வாரியத்தின் கட்டுப்பாட்டில் உள்ளன.

போக்குவரத்து[தொகு]

மரக்கரை கிராமம் கோட்டக்கல் நகரத்தின் வழியாக இந்தியாவின் பிற பகுதிகளுடன் இணைகப்பட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலை எண்.66 தானூர் வழியாக செல்கிறது. அது வடக்கில் கோவா மற்றும் மும்பையுடன் இணைகிறது. தெற்கு பகுதி கொச்சி மற்றும் திருவனந்தபுரத்தை இணைக்கிறது. மாநில நெடுஞ்சாலை எண்.28 நிலம்பூரில் இருந்து தொடங்கி உதகமண்டலம், மைசூர் மற்றும் பெங்களூர் நெடுஞ்சாலைகள்.12,29 மற்றும் 181 வழியாக இணைக்கிறது. தேசிய நெடுஞ்சாலை எண்.966 பாலக்காடு மற்றும் கோயம்புத்தூரை இணைக்கிறது. அருகிலுள்ள வானூர்தி நிலையம் கோழிக்கோடு பன்னாட்டு வானூர்தி நிலையம் ஆகும். அருகிலுள்ள பெரிய தொடருந்து நிலையம் திரூரில் உள்ளது.

மக்கள்தொகையியல்[தொகு]

2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, மரக்கரையின் மக்கள் தொகை 40404 ஆகும். இதில் ஆண்கள் எண்ணிக்கை 18999 என்றும், பெண்கள் எண்ணிக்கை 21405 என்றும் உள்ளது.[1]

நிர்வாகம்[தொகு]

மரக்கரை ஒரு கிராம ஊராட்சி ஆகும். ஊராட்சி 20 வார்டுகளாக பிரிக்கப்பட்டுள்ளது.

கிராமங்கள்[தொகு]

எண். பெயர்
1 மரக்கரை
2 மேல்மூரி

வார்டுகள்[தொகு]

வார்டு எண். பெயர்
1 ரண்டதானி
2 மரக்கரை
3 ஏர்க்கரை
4 மருதிஞ்சிரா
5 மேல்மூரி
6 பரப்பூர்
7 கரேக்காடு வடக்கு
8 சித்திரம்பள்ளி
9 மஜீத்குண்டு
10 ஜரதிங்கல்
11 மலையில்
12 நீரடி
13 பிலத்தாரா
14 காடாம்புழா
15 சுள்ளிக்காடு
16 ஏசிநிராப்
17 கல்லார்மங்கலம்
18 செலகுத்
19 பூவாஞ்சினா
20 ஆட்டுப்புரம்

மேலும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "Census of India : Villages with population 5000 & above". Registrar General & Census Commissioner, India. Archived from the original on 2008-12-08. பார்க்கப்பட்ட நாள் 2008-12-10.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மரக்கரை&oldid=3880746" இலிருந்து மீள்விக்கப்பட்டது