குக்கு வித் கோமாளி
குக்கு வித் கோமாளி | |
---|---|
![]() | |
வகை | சமையல் நிகழ்ச்சி |
இயக்கம் | பார்த்திபன் |
வழங்கல் | ரக்சன் (1-3) அறந்தாங்கி நிஷா (1) |
நாடு | தமிழ் நாடு |
மொழி | தமிழ் |
பருவங்கள் | 3 |
அத்தியாயங்கள் | 72 |
தயாரிப்பு | |
படப்பிடிப்பு தளங்கள் | தமிழ் நாடு |
ஓட்டம் | தோராயமாக அங்கம் ஒன்று 40–45 நிமிடங்கள் |
ஒளிபரப்பு | |
அலைவரிசை | விஜய் தொலைக்காட்சி |
ஒளிபரப்பான காலம் | 16 நவம்பர் 2019 23 பெப்ரவரி 2020 | –
Chronology | |
முன்னர் | பிக் பாஸ் தமிழ் 3 |
பின்னர் | சூப்பர் சிங்கர் ஜூனியர் 7 |
தொடர்புடைய தொடர்கள் | குக்கு வித் கோமாளி 2 |
குக்கு வித் கோமாளி என்பது விஜய் தொலைக்காட்சியில் 16 நவம்பர் 2019 ஆம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகும் நகைச்சுவை சமையல் போட்டி நிகழ்ச்சி ஆகும்.[1]
இந்த சமையல் நிகழ்ச்சியில் பிரபலங்கள் சமையல் செய்ய, விஜய் தொலைக்காட்சியின் நகைச்சுவை நடிகர்களும் அவர்களுடன் பங்கு பெறுவார்கள். ஆனால் உதவியாக அல்ல, சில கோமாளித் தனங்கள் செய்து பார்வையாளர்களை சிரிக்க வைப்பதற்காக. இதற்கு நடுவில் தலைவர்கள் கொடுக்கப்படும் நேரத்தில் சமைக்க வேண்டும்.[2] இந்த நிகழ்ச்சியைப் 'பார்த்திபன்' என்பவர் இயக்கியுள்ளார்.
தொடர் கண்ணோட்டம்[தொகு]
Season | தொகுப்பாளர் | நடுவர் | வெற்றியாளர் | 2வது வெற்றியாளர் | Episodes | Originally aired | |||
---|---|---|---|---|---|---|---|---|---|
First aired | Last aired | ||||||||
1 | ரக்சன் அறந்தாங்கி நிஷா | செப் தாமோதரன் செப் வெங்கடேஷன் பட் | வனிதா விஜயகுமார் | உமா ரியாஸ்கான் | 27 | நவம்பர் 16, 2019 | 23 பெப்ரவரி 2020 | ||
2 | ரக்சன் | கனி | சகீலா | 41 +1 | நவம்பர் 14, 2020 | 14 ஏப்ரல் 2021 |
பருவங்கள்[தொகு]
பருவம் 1[தொகு]
இந்த நிகழ்ச்சியின் முதல் பருவம் 16 நவம்பர் 2019 முதல் 23 பிப்ரவரி 2020 ஆம் ஆண்டு வரை சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பானது. இந்த நிகழ்ச்சியை ரக்சன் மற்றும் அறந்தாங்கி நிஷா ஆகிய இருவரும் தொகுத்து வழங்க சமையல் கலை நிபுணர்களான செப் தாமு மற்றும் செப் வெங்கடேஷன் பட் ஆகியோர் தலைவர்களாக இருந்தனர்.[3]
இந்த நிகழ்ச்சியின் இறுதி அத்தியாயம் 2020 பிப்ரவரி 23 ஆம் ஆண்டு பிற்பகல் 3 மணிக்கு ஒளிபரப்பாகி 14 அத்தியாயங்களுடன் நிறைவு பெற்றது. இந்த நிகழ்ச்சியில் வெற்றியாளர் வனிதா விஜயகுமார் ஆவார். நடிகை உமா ரியாஸ்கான் இரண்டாவது வெற்றியாளர். சிறப்பு விருந்தினராக நடிகை ரம்யா கிருஷ்ணன் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
வெற்றியாளர்கள்[தொகு]
- வனிதா விஜயகுமார் - 1வது வெற்றியாளர்
- உமா ரியாஸ்கான் - 2வது வெற்றியாளர்
- ரம்யா பாண்டியன் - 3வது வெற்றியாளர்
பங்குபெறுபவர்கள்[தொகு]
பிரபலங்கள்[தொகு]
- ரேகா
- தமிழ் மற்றும் மலையாளத் திரைப்படங்களில் பரவலாக அறியப்படும் தென்னிந்திய திரைப்பட நடிகை ஆவார்.
- உமா ரியாஸ்கான்
- பிரபல நடிகர் ரியாஸ் கான் மனைவி மற்றும் திரைப்பட நடிகை ஆவார்.
- வனிதா விஜயகுமார்
- பிரபல நடிகர் விஜயகுமார் மகள், நடிகை மற்றும் பிக் பாஸ் தமிழ் 3 நிகழ்ச்சியின் போட்டியாளர்.
- பிரியங்கா ரோபோ சங்கர்
- பிரபல நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் மனைவி மற்றும் கலக்கப் போவது யாரு? நிகழ்ச்சியின் போட்டியாளர்.
- ரம்யா பாண்டியன்
- தமிழ் திரைப்பட நடிகை. ஆண் தேவதை திரைப்படத்தில் நன்கு அறியப்பட்டவர் .
- மோகன் வைத்தியா
- ஒரு கர்நாடக இசைப் பாடகர், செவ்வியல் நடனக் கலைஞர், வயலின் கலைஞர், தமிழ் திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நடிகர், பிக் பாஸ் தமிழ் 3 நிகழ்ச்சியின் போட்டியாளர் ஆவார்.
- தாடி பாலாஜி
- தமிழ் திரைப்பட துணை நடிகர் மற்றும் தொலைக்காட்சி நடிகர், தொகுப்பாளர் மற்றும் பிக் பாஸ் தமிழ் 2 நிகழ்ச்சியின் போட்டியாளர். .
- கு. ஞானசம்பந்தன்
- தமிழ்த் துறைப் பேராசிரியர், நகைச்சுவைப் பேச்சாளர், எழுத்தாளர், நடிகர் பட்டிமன்ற நடுவர் மற்றும் ரஜினி முருகன் திரைப்படத்தில் நன்கு அறியப்பட்டவர் .
கோமாளிகள்[தொகு]
- சிவாங்கி
- புகழ்
- பிஜிலி ரமேஷ்
- மணிமேகலை
- டைகர் தங்கதுரை
- பாலா
- சாய் சக்தி
- பப்பு
போட்டிகள்[தொகு]
அத்தியாயம் | ஒளிபரப்பான தேதி | வெற்றியாளர் | நீக்கப்பட்டவர் | மதிப்பீடுகள் |
---|---|---|---|---|
01 | 16 நவம்பர் 2019 | வனிதா விஜயகுமார், பிரியங்கா | 5.31% | |
17 நவம்பர் 2019 | ||||
02 | 23 நவம்பர் 2019 | பிரியங்கா | 5.6% | |
24 நவம்பர் 2019 | 5.1% | |||
03 | 7 திசம்பர் 2019 | ரேகா, வனிதா விஜயகுமார், உமா ரியாஸ்கான், கு. ஞானசம்பந்தன் | மோகன் வைத்தியா | 5.32% |
8 திசம்பர் 2019 | 5.44% | |||
04 | 14 திசம்பர் 2019 | உமா ரியாஸ்கான் | 5.54% | |
15 திசம்பர் 2019 | ||||
05 | 22 திசம்பர் 2019 | ரேகா, வனிதா விஜயகுமார், உமா ரியாஸ்கான் | கு. ஞானசம்பந்தன் | 5.12% |
23 திசம்பர் 2019 | ||||
06 | 28 திசம்பர் 2019 | வனிதா விஜயகுமார் | 5.28% | |
29 திசம்பர் 2019 | ||||
07 | 4 சனவரி 2020 | ரேகா, வனிதா விஜயகுமார், உமா ரியாஸ்கான், ரம்யா பாண்டியன் | பாலாஜி | 4.7% |
5 சனவரி 2020 | ||||
08 | 11 சனவரி 2020 | வனிதா விஜயகுமார் | 4.64% | |
12 சனவரி 2020 | ||||
09 | 18 சனவரி 2020 | வனிதா விஜயகுமார் | ரேகா | 5.6% |
19 சனவரி 2020 | ||||
10 | 25 சனவரி 2020 | உமா ரியாஸ்கான் (முதல் இறுதி சுற்று போட்டியாளர்) |
4.15% | |
26 சனவரி 2020 | ||||
11 | 1 பெப்ரவரி 2020 | வனிதா விஜயகுமார், ரம்யா பாண்டியன் (இறுதி சுற்று போட்டியாளர்கள்) |
பிரியங்கா | 4.8% |
2 பெப்ரவரி 2020 | ||||
12 | 8 பெப்ரவரி 2020 | ரேகா (இறுதி சுற்று போட்டியாளர்) | பிரியங்கா, பாலாஜி, மோகன் வைத்தியா | 5.1% |
9 பெப்ரவரி 2020 | ||||
13 | 15 பெப்ரவரி 2020 | வனிதா விஜயகுமார், உமா ரியாஸ்கான் | 5.7% | |
16 பெப்ரவரி 2020 | ||||
14 | 23 பெப்ரவரி 2020 | வனிதா விஜயகுமார் | 5.96% |
பருவம் 2[தொகு]
இந்த நிகழ்ச்சியின் இரண்டாம் பருவம் 14 நவம்பர் 2020 முதல் 14 ஏப்ரல் 2021 ஆம் ஆண்டு வரை சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மாலை 6:30 மணிக்கு ஒளிபரப்பானது.[4] இந்த நிகழ்ச்சியை ரக்சன் தொகுத்து வழங்க சமையல் கலை நிபுணர்களான செப் தாமு மற்றும் செப் வெங்கடேஷன் பட் ஆகியோர் தலைவராக இருந்தனர்.
இந்த பருவத்தின் முதல் வெற்றியாளர் கனி, இரண்டாவது வெற்றியாளர் சகீலா மற்றும் மூன்றாவது வெற்றியாளர் அஸ்வின் குமார் லட்சுமிகாந்தன் ஆவார்.
மறு தயாரிப்பு[தொகு]
மொழி | தலைப்பு | தொலைக்காட்சி | ஒளிபரப்பப்பட்டது |
---|---|---|---|
கன்னடம் | குக்கு வித் கிறுக்கு | ஸ்டார் சுவர்ணா |
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "விஜய் டிவி-யின் புதிய சமையல் நிகழ்ச்சி: "குக் வித் கோமாளி"". tamil.indianexpress.com.
- ↑ "குக்கு வித் கோமாளி.. லாஸ்லியாவுக்கு பிடிச்சதை சமைக்கிறாரே வனிதா விஜயகுமார்!". tamil.oneindia.com.
- ↑ "விஜய் தொலைக்காட்சியில் குக் வித் கோமாளி புதிய சமையல் நிகழ்ச்சி". 4tamilcinema.com. 2019-12-08 அன்று மூலம் பரணிடப்பட்டது.
- ↑ "விஜய் தொலைக்காட்சியில் குக் வித் கோமாளி -2 புதிய சமையல் நிகழ்ச்சி". dailyresearchtable.com.
வெளி இணைப்புகள்[தொகு]
விஜய் தொலைக்காட்சி : சனி - ஞாயிறு இரவு 8 மணி நிகழ்ச்சிகள் | ||
---|---|---|
முன்னைய நிகழ்ச்சி | குக்கு வித் கோமாளி | அடுத்த நிகழ்ச்சி |
பிக் பாஸ் தமிழ் 3 | சூப்பர் சிங்கர் ஜூனியர் 7 |
- விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்
- தமிழகத்தின் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்
- தமிழ் சமையல் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்
- தமிழ் நகைச்சுவைத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்
- 2010ஆம் ஆண்டுகளில் தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்
- 2019 இல் தொடங்கிய தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்
- தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்
- 2020 இல் நிறைவடைந்த தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்
- தொலைக்காட்சி பருவங்கள்